சிஎம் விஜய்.. நீங்க எந்த நல்லதும் பண்ண வேண்டாம்! இந்த சீரியல்களை கட் பண்ணிடுங்க.. கதறிய ரசிகர்
சென்னை: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி திட்டங்களை செய்து காட்டி வருகிறார். இந்த நிலையில் ஒருவர் முதலமைச்சர் விஜய்க்கு வைத்த வேண்டுகோள் தான் சோசியல் மீடியாவில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களை மட்டும் முடித்து விடுங்கள் சார்.. நீங்க எந்த நல்லதும் பண்ண வேண்டாம் என்று அவர் கெஞ்சி கேட்டிருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சீரியல் கொடுமை
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தான் ஆரம்பத்தில் பார்த்து வந்தனர் ஆனால் இப்போ பிடிக்குதோ பிடிக்கவில்லையோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. அதாவது நாம ஏதாவது ஒரு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தால் அதற்கிடையில் சில சீரியல்களின் ப்ரோமோக்கள் வந்து தலைக்காட்டி விடுகிறது.
ரசிகர் வருத்தம்
அது மட்டுமல்லாமல் சில சீரியல்கள் பல வருடங்களாக ஒளிபரப்புவதற்காக லாஜிக்கே இல்லாமல் தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி தான் இப்போ ஒருவர் ஆதங்கத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் பேசும்போது, ஐயா சிஎம் அவர்களே நீங்க நாட்டு மக்களுக்கு எந்த நல்லது பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த சன் டிவியில் ஒளிபரப்பாக ரெண்டு சீரியல்களை மட்டும் முடிச்சு விட்டுருங்க சார் போதும்...
அதாவது சிங்க பெண்ணே சீரியலும், எதிர்நீச்சல் சீரியலும் பார்க்க முடியல சார். சிங்கப் பெண்ணை சீரியலில் ஆனந்தி கர்ப்பமாகி இரண்டு வருஷம் ஆகுது இன்னும் அவங்களுக்கு குழந்தை பிறக்கல, எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பண்ணுற அட்டூழியத்தை பார்க்க முடியல இதையெல்லாம் பார்த்தாலே மன அழுத்தம் தான் வருது இந்த மாதிரி சீரியல்களை முடித்துவிட்டு விடுங்கள் என்று அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதை பல நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இவர் சொல்லுவது நியாயம்தான் எங்களுக்கும் பிடிக்குதோ இல்லையோ வீட்டில் இதுதான் இப்போ ஓடிக்கிட்டு இருக்கு. எங்களால முடியல காப்பாத்துங்க என்று கதறியப்படியே கமெண்டுகளை கொட்டுகிறார்கள். இதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் இந்த சீரியலில் நடக்கும் கொடுமைகளும் அளவுக்கு அதிகமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.

சிங்க பெண்ணே சீரியல்
அதாவது சிங்கப் பெண்ணே சீரியலில் ஆரம்பத்தில் கதையை காட்டும்போது கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் நகரத்தில் வந்து எப்படி துணிச்சலாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்குகிறார் என்பது போல கதைகளை கொண்டு போனார்கள். சரி இது புதுவிதமாக இருக்கிறது மற்ற சீரியல்களை விட இந்த சீரியலில் வேற மாதிரி காட்டப் போகிறார்கள் என்று நினைத்தால் சென்னைக்கு வந்த இடத்தில் ஹீரோயினியை அவர் வேலை பார்க்கும் ஆபிஸ் ஓனர் அவருக்கே தெரியாமல் மதுபோதையில் கெடுத்து விடுகிறார்.
அப்போது கதாநாயகி ஆனந்திக்கும் வில்லி மயக்க மருந்து கொடுத்திருந்ததால் அவருக்கும் தன்னை கொடுத்தவர் யார் என்றே தெரியவில்லை. பிறகு ஒரு வழியாக அவர் கர்ப்பமாக இருப்பதை காட்டினார்கள். இப்போ ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறார்கள் என்று சொல்லியே இரண்டு வருஷம் கடந்துவிட்ட பிறகும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தன்னை கற்பழித்தவர் யார் என்று கண்டுபிடிக்கவில்லை.

புரியாத புதிர்
ஒவ்வொரு மாதமும் டிஆர்பி குறையும் போது தன்னுடைய குழந்தைக்கு அப்பா யார் என்பதை ஆனந்தி கண்டு பிடிப்பாளா? என்பது போல ஒரு ப்ரமோ வருகிறது. சில நாட்கள் பரபரப்பாக போகிறது பிறகு ஆனந்தி கர்ப்பமாக இருப்பதையே மறந்து விடுகிறார்கள். இதனால் தான் அந்த நபர் காண்டாகி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த சீரியலை போலத்தான் எதிர்நீச்சல் சீரியலிலும் வீட்டு பெண்கள் எப்படி ஆண்களை எதிர்த்து நீச்சல் போடுகிறார்கள் என்பதுதான் கதை என சொன்னார்கள். ஆனால் இங்கே நடப்பது என்னவென்றால் ஒவ்வொரு முறையும் குணசேகரனிடம் எதிர்நீச்சல் வீட்டு பெண்கள் தோற்றுப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
இதை பார்க்கும் ரசிகர்களுக்கு அம்மா போதும்டா சாமி என்று மனசே பாரமாகி போய்விட்டது. ஒவ்வொரு நாள் சீரியல் பார்க்கும் போதும் இன்னைக்கு பெண்கள் கண்டிப்பா ஜெயித்து விடுவாங்க என்று நம்பி நம்பி ஏமாந்து போனதுதான் மிச்சம். கடைசி வரைக்கும் எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிப்பதை காட்டவே மாட்டார்கள் போல.
சீரியல் ரசிகர்களின் ஆதங்கம்
இந்த ஒரு ரசிகர் மட்டும் அல்ல.. பல ரசிகர்கள் இதுபோல கதறி கொண்டு இருக்கிறார்கள். இந்த வீடியோவை சோசியல் மீடியாவை கவனித்து கொண்டிருக்கும் முதலமைச்சர் கண்ணில் படுமா? எங்களுக்கு ஒரு விடிவுகாலம் வருமா என்று பலர் காத்திருக்கிறார்கள்.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications