தாடியோடு மாஸ் காட்டி நன்றி சொன்ன கவின்.. உருகிப் போன ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிறந்தநாள் அதுவுமாக சிம்பிளாக வந்து ரசிகர்களை சிலிர்க்க வைத்த கவினின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் , டுவிட்டரில் வைரலாக பரவி வருகிறது.

ஜூன் 22ஆம் தேதி கவினின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் ஹேஸ்டேக் ஓபன் பண்ணி கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அனைவருக்கும் நன்றி கூறி பதிலுக்கு ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

அவர் இன்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரத்தை தாண்டி கமெண்ட்களும் லைக்குகளும் மலை போல உயர்ந்து கொண்டிருந்தது.

ஜில்லுன்னு வாழ்த்திய ரம்யா

ஜில்லுன்னு வாழ்த்திய ரம்யா

இதனைப் பார்த்ததும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறை பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறிவந்தனர் .நடிகை ரம்யா பாண்டியன் இனிய மகிழ்ச்சியான பிறந்தநாள் கவின் என்று இரண்டு ஸ்மைலி சிம்பிளை அனுப்பியிருக்கிறார் .குக் வித் கோமாளி யில் கலக்கும் சக்தி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருங்க அண்ணா என்று கமெண்ட் போட்டிருக்கிறார் .

சிரிங்க.. அளவா சிரிங்க

சிரிங்க.. அளவா சிரிங்க

அதற்கு ஒரு ரசிகர் சிரிச்சிட்டே இருந்தால் பைத்தியமுனு சொல்லுறாங்க சேட்லைப் அண்ணா என்று பீல் பண்ணியிருக்கிறார் .சக்திக்கு பதிலாக கவின் உன்ன மாதிரி தான ஓகே பா ட்ரை பண்றேன் என்று கமெண்ட் போட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் பிரபலங்களான ஸ்ரீநிஷா தர்ஷன் ,முகின், சிவாங்கி என பலரும் தொடர்ந்து வாழ்த்துக்களை கமெண்ட் களில் தெரிவித்து வந்தனர்.

பிரபலங்களின் வாழ்த்து

பிரபலங்களின் வாழ்த்து

இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் சீரியலில் கதாநாயகனாகவும் நடித்து தற்போது திரைத்துறையில் காலடி எடுத்து அங்கேயும் தன்னுடைய திறமையை காட்டிக் கொண்டிருக்கும் இவருக்கு விஜய் டிவியிலிருந்து பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிறந்த நாளுக்காக ஸ்டேட்டஸ்கள் போட்டுக் கொண்டிருக்கின்றனர் .

முதல் சீரியல்

முதல் சீரியல்

பிரபலங்கள் மட்டுமல்லாமல் கவினின் ரசிகர்கள் தொடர்ந்து கவினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் லயோலா காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் எப்படியாவது திரையில் தோன்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விஜய் டிவியில் நடைபெற்ற ஆடிஷனில் கலந்துகொண்டு முதன்முதலாக கனா காணும் காலங்கள் கல்லூரி சீசனில் காலேஜ் ஸ்டூடண்ட்டாக அறிமுகமானார் .

சரவணன் மீனாட்சி வேட்டையன்

சரவணன் மீனாட்சி வேட்டையன்

அதற்குப் பிறகு தாயுமானவன் ,சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார் .அதுவும் சரவணன் மீனாட்சியில் வேட்டையன் கதாபாத்திரத்தை இப்ப வரைக்கும் யாராலும் மறக்க முடியாது .இந்த சீரியல் எத்தனை பாகங்களை கடந்து இருந்தாலும் வேட்டையன் கதாபாத்திரத்தில் அனைவரின் மனதிலும் சிரித்த முகமாக துருதுரு கேரக்டரில் ஆழ்ந்துவிட்டார் .

குவித்த விருதுகள்

குவித்த விருதுகள்

இந்த சீரியலுக்காக விஜய் டிவியின் விருதுகளை இவர் வாங்கி இருந்தாலும் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார் .அதற்குப் பிறகு தொடர்ந்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்ததால் சினிமாக்களிலும் காலடி எடுத்து வைத்தார். இவருடைய துருதுரு கேரக்டரை பார்த்து இவருக்கு சினிமா கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவில் ரசிகர்கள் பெருகத் தொடங்கினர் .அதுவும் பெண்கள் மத்தியில் இவர் சாக்லேட் பாயாக வலம் வரத் தொடங்கி விட்டார் .

3வது சீசனில் முக்கிய இடம்

3வது சீசனில் முக்கிய இடம்

சினிமாவிற்கு சென்றாலும் மீண்டும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார் .இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் இடத்தையும் பிடித்து விட்டார் .தொடர்ந்து இன்று நேற்று நாளை ,சத்ரியன் என பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஹேஷ்டேக் போட்டு தெறி கொண்டாட்டம்

ஹேஷ்டேக் போட்டு தெறி கொண்டாட்டம்

தற்போது இவருடைய பிறந்தநாளை இவர் மறந்தாலும் அவருடைய ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் போல நடிகர் விஜய்க்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி சமூக வலைதளத்தை தெறிக்க விட்டுவிட்டனர். தனக்காக ஹேஸ்டேக்களை உருவாக்கிய ரசிகர்களுக்காகவும் தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்காக இவர் ஒரு போட்டோவை வெளியிட்டு எல்லோருக்கும் நன்றி எப்பவும்போல கூட இருங்க ,எல்லோரும் நல்லா இருப்போம் என கேப்ஷன் போட்டு இருக்கிறார் .இவருடைய லேட்டஸ்ட் போட்டோவும் இந்த கேப்ஷனும் தான் தற்போது இவருடைய ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+