அப்பா இறந்து ஒரு வாரத்தில் நடந்த சம்பவம்.. இப்படி கூட நடக்குமா? நேத்ரன் மகள் நறுக்குன்னு கேட்ட கேள்வி
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு அவருடைய மகள் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் பற்றி இணையத்தில் ஒரு ரசிகர் தவறாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதற்கு நேத்ரன் மகள் கேட்ட கேள்வியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
சின்னத்திரை மற்றும் சினிமாவில் 22 வருடங்களுக்கு மேலாக நடித்து பிரபலமடைந்த நேத்ரன் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி தன்னுடைய 47 வது வயதில் புற்றுநோய் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இது சின்னத்திரை ரசிகர்களை பெரிய அளவில் வருத்தமடைய செய்தது நேத்ரன் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அபிநயா ஏற்கனவே நேத்ரனுடைய பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். குழந்தை பருவத்தில் இருந்து அபிநயா தன்னுடைய அப்பாவோடு டான்ஸில் பட்டையை கிளப்பி இருக்கிறார். அதன் மூலம் அபிநயாவுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது திரைப்படங்களில் வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் நேத்ரனுடைய மறைவு செய்தி அவருடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு தன்னுடைய அப்பாவிற்கு புற்றுநோய் பாதித்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.. அதற்கான சிகிச்சை முடிந்து இருக்கிறது ஆனாலும் அப்பா ஐசியூவில் இருக்கிறார் என்று அபிநயா ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.

அதற்கு பிறகு தான் இந்த செய்தியே பலருக்கும் தெரிந்தது. அதற்கு பிறகு உடல்நிலை பிரச்சனை காரணமாக நேத்ரன் தான் நடித்து வந்த பொன்னி சீரியல், பாக்கியலட்சுமி சீரியல், ரஞ்சிதமே சீரியலில் இருந்தும் விலகி இருந்தார். ஆனாலும் தான் மீண்டும் எப்படியாவது சினிமாவிற்கு வருவேன் என்று நம்பிக்கையோடு இருந்த நேத்ரனுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.
நேத்ரன் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட அவரோடு நடித்த நடிகர்களிடம் நான் விரைவில் நலம் பெற்று விடுவேன் நடிக்க வருவேன் என்று கூறிக் கொண்டிருந்ததாக அவருடைய நண்பர்கள் பலர் கூறியிருந்தனர். அதுபோல நேத்ரனுக்கு சினிமாவில் சாதித்து ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்பது பெரிய கனவாக இருந்ததாம்.

தனக்கு தான் அந்த ஆசை நிறைவேறவில்லை ஆனால் என்னுடைய மகள்கள் அதை அடைய வேண்டும் என்று நேத்ரன் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார். ஆறு மாதமாக தன்னுடைய தந்தை புற்றுநோயில் போராடிக் கொண்டிருப்பதை பார்த்து தவித்துப் போயிருந்த அவருடைய மகள்கள் இப்போது மெல்ல மெல்ல நேத்ரனின் கனவை நிறைவேற்றும் வகையில் பிசியாக மாறத் தொடங்கி இருக்கிறார்கள்.
நேத்ரன் ஆசைப்பட்டது போல அவருடைய குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அது போலத்தான் சமூக வலைத்தளங்களிலும் பாசிட்டிவாக நேத்ரனின் மனைவி மற்றும் மகள்கள் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று நேத்ரனின் மகள் சமையல் செய்து ஒரு வீடியோ போஸ்ட் போட்டு இருக்கிறார். அந்த போஸ்ட்க்கு ஒரு ரசிகர் ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து கோபமான நேத்ரனின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

அதாவது அந்த நபர் கொடுத்த கமெண்டில் உங்க அப்பா இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் நீங்கள் பணத்திற்காக பிரமோஷன் வேலைகள் செய்கிறீர்கள். அதுபோல உங்கள் சகோதரி ரொட்டி தயாரிப்பதை எல்லாம் எங்களால் பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதற்கு அபிநயா அந்த ஐடியை டேக் செய்து, மன்னிக்கவும்.. முதலாவது நீங்கள் எப்படி நாங்கள் இப்படித்தான் இருக்கணும் இப்படி செய்யக்கூடாது என்று தீர்மானிக்க முடியும். நீங்க சொல்ல நினைக்கிற இடம் இது கிடையாது. எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இந்த கட்டத்தில் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று எங்களுக்கு தெரியும்.
இதெல்லாம் ரொம்ப தப்பு தினமும் எல்லாரும் சாப்பிட்டு தானே ஆகணும்? சாப்பிடுறதுக்கு தான் நாங்க ஃபுட் ரெடி பண்ணிட்டு இருந்தோம். முகத்தை கூட காட்ட முடியாத நீங்க இதுல வந்து இப்படி பேசுறது ரொம்ப தப்பு. இந்த மாதிரி எதிர்மறையான கருத்துக்களை நான் புறக்கணிக்கிறேன் மற்ற யாரையும் ஜட்ஜ் பண்ணாதீங்க என்று பதில் கொடுத்திருக்கிறார். இதற்கு பலரும் அபிநயாவுக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications