நிரூப் கேன்சருக்கு ஹேர் கொடுக்க போறது தெரிஞ்சும் அபிநய் கட் பண்ண வச்சது சரியா?கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: கண்ணாடி டாஸ்க் வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் பிரச்சனையை தொடங்கிவிட்டது.
முட்டல் மோதல் இல்லாமல் இருந்தால் சுவாரசியம் இல்லையே என்று இப்படி யோசித்து விட்டார்களா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அபிநயின் கண்ணாடியாக மாறிய நிரூப்பிடம் அபிநய் செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பலதரப்பட்ட கருத்துக்கள்
பொம்மையாட்டம் எனும் டாஸ்க் மூலமாக பிரச்சனைகள் பஞ்சு பஞ்சாக பறந்து கொண்டிருந்த நேரத்தில், தற்போது கண்ணாடி வைத்து அதுவரைக்கும் இருந்துவந்த போட்டியாளர்களின் முகமூடியை பிக்பாஸ் உடைத்து விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஒருபக்கம் இந்த டாஸ்க் பார்த்ததும் கலகலப்பாக இருந்தது என்று ரசிகர்கள் என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கும்போது, இதில் போட்டியாளர்கள் செய்த செயல் அடுத்தவர்களின் மனதை காயப்படுத்தி விட்டது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடைசி நேரத்தில் காப்பாற்றப்படும் அபிநய்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக களமிறங்கியிருக்கும் அபிநய் முதல் வாரத்தில் இருந்து இப்ப வரைக்கும் அனைத்து வாரங்களிலும் தொடர்ந்து நாமினேஷனில் இருந்து வருகிறார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் காப்பாற்றப்பட்டு வீட்டில் இருப்பதை பார்த்து வரும் ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இவர் கலை குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடையாமல் தான் இருந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் ஆதரவு கூடியிருக்கிறது.

கோர்த்து விட்ட பிக் பாஸ்
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. அது போலத்தான் நிரூப் மற்றும் அபிநய் இடையே ஒவ்வொரு டாஸ்க்கிலும் பிரச்சனைகள் அடிக்கடி முட்டி கொண்டிருக்கிறது. அதை ரசிகர்கள் கவனித்துக் கொண்டிருப்பது போல, பிக்பாஸ் நன்றாகவே பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் நேற்றைய கண்ணாடியில் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பிரச்சனையை தொடங்குவதற்காக பிக்பாஸ் இப்படி இவர்கள் இருவரையும் கோர்த்து விட்டு விட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் பட்டிமன்றம்
கண்ணாடி டாஸ்கில் அபிநய் செய்வதை பின்பமாக இருக்கும் நிரூப் அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். அதை நிரூப்பை கோர்த்து விட நினைத்த அபிநய் தன்னுடைய தலைமுடியை கட் பண்ணி இருக்கிறார். ஆனால் இதற்கு சலிக்காத நிரூப் நானும் அது போலவே செய்கிறேன் என்று செய்துகொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அபிநய் தன்னுடைய தலை முடியை கட் பண்ண அக்ஷராவை அழைத்திருக்கிறார். அக்ஷரா அபிநய் தலைமுடியை கட் பண்ணும் போது அக்ஷராவின் பின்பமாக இருக்கும் சிபி நிரூப்பின் தலைமுடியை கட் பண்ணி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நிரூப் ஏற்கனவே தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னுடைய தலைமுடியை அளிப்பதாகக் கூறி இருக்கும் நிலையில் நிரூப்பிடம் அபிநய் இப்படி செய்வது சரியா??என்று ரசிகர்களின் மத்தியில் ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications