பிரியங்காவுக்கு என்ன ஆச்சு... பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த திடீர் குழப்பம்
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவை காணாத ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றி அதிகமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியங்காவை மட்டும் காணவில்லையே என்பதுதான் பலருடைய குழப்பமாக இருந்து வருகிறது.

ஜெயிக்கப்போவது யாரு? ?
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிகட்டத்தில் பைனல் லிஸ்டாக தேர்வாகி இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக பிரியங்கா இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியின் பிரபலமாக இருப்பதால் இவர் தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பாரா?? என்று பலர் குழப்பத்தோடு கேள்விகளை ஏற்படுகின்றனர். ஒரு பக்கம் பிரியங்கா ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவு கூடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ராஜூ ஜெயிக்க வேண்டும் என்றும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

குழப்பமான சீசன்
இதற்கு முந்தைய சீசன்களில் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட போட்டியாளர் தான் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து கணிப்பு செய்து வருவார்கள். அதுபோலவே கடைசியில் நடைபெற்று விடும். அது போல இந்த சீசனிலும் நடக்குமா?? அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமா?? என்பது பலருடைய குழப்பமான கேள்வியாக இருந்துவருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பலருக்கும் ஜாலியான கேரக்டர் ஆகவும் பல நேரங்களில் கடுப்பேற்றும் கேரக்டராகவும் இருந்து வரும் பிரியங்கா ஜெயிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு தரப்பினர் அவர் ஜெயிக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

அமோகமான ரசிகர்களின் ஆதரவு
என்னதான் நெட்டிசன்கள் பிரியங்காவை சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும், அவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் இருந்து தப்பித்து கொண்டுதான் இருக்கிறார். அதுவும் வாக்கு எண்ணிக்கையில் அதிகளவில் ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் சேவ் ஆகி விடுகிறார். இது இவருடைய வெற்றியாகவே அவருடைய ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் .இந்த நிலையில் இன்றைய ப்ரமோ பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருந்து வருகிறது.
Recommended Video

பிரியங்காவை காணவில்லையே
இன்றைய முதல் ப்ரமோவில் தாமரை செல்வி மீண்டும் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அப்போது ஜாலியாக அவரை வரவேற்ற பிரியங்கா அதற்கு அடுத்து வந்த இரண்டு ப்ரமோகளிலும் காணப்படவில்லை. இரண்டாவது ப்ரமோவில் அக்ஷரா மற்றும் வருண் புதியதாக வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செந்தூரப்பூவே சீரியல் அணியினரும், ஈரமான ரோஜாவே இரண்டாவது பாகத்தில் சீரியல் அணியினரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். அப்போது அங்கே பிரியங்காவை மட்டும் காணவில்லை. அவரை தேடிய பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை பரப்பி வருகின்றனர். பிரியங்காவுக்கு என்ன ஆச்சு...என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. ஒருவேளை பிரியங்கா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டாரா??அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையா??என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications