திகட்டாத சிவாஜி.. திகட்டிய விக்ரம்.. அந்த "கருப்பு வடு".. கத்திட்டே இருக்காரு SJ சூர்யா: பிரபலம் நச்
சென்னை: பல டைரக்டர்கள், டைரக்ஷனுடன் நின்றுவிடலாம், அதைவிட்டுவிட்டு, நடிப்பதாக சொல்லி வருகிறார்கள். ஆனால், ஒரே மாதிரியான நடிப்பையே காட்டுகிறார்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? என்று காட்டமாக கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
Kingwoods News என்ற சேனலுக்கு சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் "வீர தீர சூரன்" படத்தின் டீசர் நல்லாதான் இருக்கு. மற்ற படங்களுடன் கம்பேர் பண்ணும்போது, ஓவராக இல்லாமல், லிமிட்டாக இருக்கிறது டீசர்.. அதேபோல, உடலை வருத்தி கொட்டும் விக்ரமின் உழைப்பு இதில் இருக்காது என தெரிகிறது. பெட்டிக்கடையில் உட்கார்ந்திருக்கிற மாதிரி, கேஷூவலாக காட்டியிருக்கிறார்கள்.

அந்நியன் படம்: அந்நியன் படத்தில் மிகப்பெரிய உழைப்பை கொட்டினார். அந்த படமும் நல்லா ஓடியது.. ஆனால், அந்த படம் மாதிரியே வரவேண்டும் என்று பலரும் எடுத்தார்கள். அந்நியன் போல வேற எந்த படமும் பெரிய ஹிட் ஆகல.
நடிப்பில் எப்போதுமே விக்ரமை எந்த படத்திலுமே குறை சொல்ல முடியாது. நடிப்பதற்கென்றே பிறந்தவர். கடின உழைப்பாளி. காசி, தெய்வத்திருமகன் இதெல்லாம் நல்ல படங்கள். ஆனாலும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ராம்குமார்: ஐ படத்தில் அவர் நடிச்சே இருக்கக்கூடாது என நினைக்கிறேன் திகட்டும் மாதிரியான மேக்கப்தான் செட் ஆகல... கதைப்படி அது சரியென்றாலும், மிகைப்படுத்தி காட்டிய மாதிரி இருக்கு-சிவாஜி மகன் ராம்குமார் கஷ்டப்பட்டு நன்றாகவே அதில் நடித்திருப்பார். அதாவது ஹீரோவை தவிர, ஹீரோவை பழிவாங்கும் எல்லாருக்குமே "ஸ்கின் அலர்ஜி" இருப்பதாக காண்பித்தது, சற்று மிகைப்படுத்தியது போலாகிவிட்டது. அந்த படத்தை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தெய்வமகன் படத்தில் 3 கேரக்டர்களில் பின்னியெடுத்திருப்பார் சிவாஜி. அதிலும், முகத்தில் அடையாளம் கொண்ட சிவாஜியை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். காரணம், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அப்படி கருப்பு வடு காட்டியிருப்பார்கள். ஐ படத்தை விக்ரம் தேர்ந்தெடுத்திருக்க கூடாது. சலிப்பு ஏற்படும்வரை, வெறுப்பு ஏற்படும்வரை மேக்கப் காட்டிவிட்டார்கள்.
விக்ரம் ஐ: விக்ரமை "ஐ" படத்தில் டம்மி செய்தது சங்கர்தான். அதில், கதையே இல்லை. ஆனால், வீர தீர சூரன் படததில் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார். மாநாடு, மெர்சல், ராயன் படத்தில் வருவது போலவே கத்திக்கொண்டே இருக்கிறார் எஸ்ஜே சூர்யா. இன்ஸ்பெக்டர், டாக்டர் என எந்த கேரக்டர் தந்தாலும், கத்திக்கிட்டே இருக்கார்.. நடிப்பும் ஒரே மாதிரியாக இருக்கு. இயக்குனர்தானே இவர்? நடிப்பு என்று வரும்போது, ஒரே மாதிரி ஆக்ஷன்தான் இந்த எஸ்ஜே சூர்யா
விசாரணை படத்தில் சரவண சுப்பையா படத்தில் போலீஸ்காரராக நடித்துள்ளதற்கும், விடுதலை 1-ல் கலெக்டராக நடித்துள்ளதற்கும் வித்தியாசம் தெரியும். இப்படி வித்தியாசத்தை காட்டணும் இல்லை? பார்த்திபன் இயக்குனர்தான்.. ஆனால், நடிப்பில் ஏதாவது வித்தியாசம் காட்டினாரா? எது நடித்தாலும் ஒரே மாதிரியாக இருக்கு.
தத்ரூபம்: கேஎஸ் ரவிக்குமார் நடித்த படங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கு. எந்த கேரக்டர் தந்தாலும், அந்த கேரக்டருக்கேற்ற மாதிரி மாறிடனும் இல்லை? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? சில வினாடிகள் நடித்தாலும், டைரக்டர் பாலாஜி சக்திவேல் தத்ரூபமாக நடிக்கிறார். எனவே, வீர தீர சூரன் படத்திலும் எஸ்ஜே சூர்யா கத்திட்டேதான் இருப்பார்.. இந்த ஓடலேன்னா, எஸ்ஜே சூர்யாதான் காரணம். இப்பவே அதை சொல்லிடறேன்.. ஆனால், விக்ரமை குறை சொல்ல முடியாது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications