கார்த்திக்கால் விஷம் குடித்த நடிகை.. நவரச நாயகனின் வாலிப வயசு, செல்லமகனின் குழந்தை மனம்: பிரபலம் நச்
சென்னை: தன்னுடைய செயல்பாடுகளினாலேயே, சினிமா மற்றும் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை இழந்தவர் நடிகர் கார்த்திக் என்றும், உண்மையிலேயே நவரச நாயகன் கார்த்திக், குழந்தை மனம் கொண்டவர் என்றும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.
AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பாலாஜி பிரபு தந்துள்ள பேட்டியில், "நவரச நாயகன் என்ற பட்டம் முழுக்க முழுக்க கார்த்திக்குக்கு மட்டுமே பொருந்தும்.. அந்த காலகட்டத்தில் பிளேபாய் போலவே இருந்தார்.. மீசை கூட முளைக்காதபோதே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.. அவரை வைத்து, "வாலிபமே வா வா, இளஞ்சோடிகள்" இப்படி பிளேபாய் படங்களே எடுக்கப்பட்டன..

பிளேபாய்: பிளேபாய் கார்த்திக்குக்கு இப்படியும் ஒரு முகம் உள்ளதா? என்று எடுத்துக்காட்டிய படம்தான் "வருஷம் 16".. பாசில் சார் டைரக்ஷனில் குஷ்புடன் நடித்திருப்பார். தக்கலையில் எடுக்கப்பட்ட மிகமிக அருமையான படம் அது.. பாடல்களும் அருமை..
இதற்கு பிறகு மவுனராகம் போன்ற படங்கள் எல்லார் மனதிலும் இடம்பிடித்த படம்... நடிப்பு என்பதே தெரியாத அளவுக்கு கேரக்டர்களில் மூழ்கி நடிக்கக்கூடியவர் கார்த்திக்..
கிழக்கு வாசல் படத்தில், "பாடிப்பறந்த கிளி" பாட்டில் தப்பு கொட்டிக்கொண்டே அவர் காட்டும் ரியாக்ஷனை, வேறு எந்த நடிகராலும் வெளிப்படுத்த முடியாது. "நாடோடி தென்றல்" படத்தில் அவரது அடக்கமான நடிப்பை கண்டு பலரும் திகைத்து போனார்கள். "பாண்டிநாட்டு தங்கம்" படம், தென்மாவட்டங்களில் பல நாட்கள் ஓடி சக்கை போடு போட்டது.
குழந்தை மனசு: கார்த்திக் எப்போதுமே குழந்தைத்தனமாகத்தான் பேசுவார்.. அவர் உண்மையிலேயே குழந்தை மனசுக்காரர்.. ஆனால், சினிமாவில் எல்லாருக்கும் உள்ள பழக்கவழக்கம் இவருக்கும் இருந்தது.. சில தவறான பழக்கவழக்கங்களுக்கு கார்த்திக் சார் அடிமையானதால், ஒரு நல்ல நடிகரை இன்று திரையில் நம்மால் பார்க்க முடியாமல் செய்துவிட்டது.
"நாடாளும் மக்கள் கட்சி"யை கார்த்திக் ஆரம்பித்தபோது, தென்மாவட்டங்களில் நிறைய கூட்டம் சேர்ந்தது. இந்த கூட்டத்தை கண்டு, கார்த்திக்கை பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தனர். இதனால் அவரது நாடாளும் மக்கள் கட்சி கலைக்கப்பட்டது. உள்ளன்போடு, பற்றோடு, ஏராளமானோர், கார்த்திக் கூட்டங்களுக்கு திரண்டு வந்தார்கள். தென்மாவட்டங்களில் பலரது வீடுகளில், சம்பந்தமே இல்லாமல் கார்த்திக் போட்டோவை வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு அதிக அன்பு அவர்மீது பொழிகிறார்கள்.
செல்லப்பிள்ளை: இயல்பாகவே கார்த்திக் கேரக்டர் அப்படித்தான்.. கான்வென்டில் படித்தவர்.. நியூ காலேஜில் டிகிரி முடித்தார்.. செல்லப்பிள்ளையாகவே வளர்ந்தவர்.. வசதியாக அவரை வளர்த்தார்கள்.. அவரால் வெயிலில் கொஞ்ச நேரம்கூட நிற்க முடியாது.. இதில், மதுப்பழக்கமும் சேர்ந்து கொண்டது.
அரசியல் கட்சி கூட்டங்களில் ஆர்வமாக கலந்து கொள்ள நினைப்பார்.. இதற்காகவே தென்மாவட்டங்களுக்கு போவார்.. அங்கே ஓட்டலில் ரூம் போட்டு தருவார்கள். ஆனால், மறுநாள் காலையில், அவரால் எழுந்துகொள்ளவே முடியாது. இதனால் மீட்டிங்குக்கும் சரியான நேரத்துக்கு வர முடியாது.. சினிமாவில் ஷூட்டிங்கிலும் சரியான நேரத்துக்கு வராமல் போக இதுவே காரணம்..
தயாரிப்பாளர்கள்: சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல், திட்டமிட்டே காலி செய்வார்கள்.. ஆனால், கார்த்திக் அப்படியில்லை.. எந்த தயாரிப்பாளரையும், டைரக்டர்களையும் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கம் கார்த்திக்குக்கு கிடையாது.. அவருக்கே தெரியாமல் செய்யும் தவறுகள் இவையெல்லாம்.. இதனால்தான் மார்க்கெட்டை இழக்க நேரிட்டது. அதுபோலவே, அரசியலிலும் ஆகிவிட்டது.
ஒருமுறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி வைக்க நினைத்து, பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருந்தாராம்.. அப்போது, கார்த்திக்கிடம், "நானும் உன் அப்பாவும் நிறைய படங்கள் நடித்துள்ளோம்.. உன்னை சிறுவயதில் தூக்கி வைத்து விளையாடியிருக்கிறேன்.. இந்த அளவுக்கு கட்சி துவங்கி பெயர் பெற்றிருப்பது மகிழ்ச்சி" என்று வாழ்த்தினாராம்.
பஞ்சாயத்துகள்: அந்தவகையில் கார்த்திக்கை யாருமே திட்ட மாட்டார்கள்.. கார்த்திக்கால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, அவரை திட்ட மாட்டார்கள்.. எனினும், சொந்த பிரச்சனையில் நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்தார்.. இவர் திருமணம் செய்தபோது, ஒரு நடிகை விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. இப்படி பல பஞ்சாயத்துகள் அன்று நடந்தது.. மொத்தத்தில், தன்னுடைய செயல்பாடுகளினாலேயே, சினிமா, அரசியலில் சரிந்துவிட்டார் கார்த்திக்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications