சாவித்திரி ரூமில் சிரிப்பு.. காதலில் விழுந்த சந்திரபாபு.. சாவித்ரி பற்றி கேட்ட ஜெமினி: பிரபலம் படார்
சென்னை: நடிகையர் திலகம் சாவித்ரிக்கும், சந்திரபாபுவுக்கும் உள்ள உறவு குறித்து, அவரது சகோதரர் விரிவாக பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சாவித்ரி - சந்திரபாபுவுக்கும் உள்ள நெருக்கம், நட்பு குறித்து பேசியிருப்பது, ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
சந்திரபாபு சகோதரர் ஜவஹர், Media circle சேனலுக்கு தந்துள்ள பேட்டியில், "ஜெமினி கணேசனும் என்னுடைய அண்ணன் சந்திரபாபுவும் நெருங்கிய நண்பர்கள்.. இருவரும் புல்லட்டிலேயே ரவுண்டு அடிப்பார்கள்.. அண்ணனிடம் ஃபியட் கார் இருந்தது.. அதிலும் 2 பேரும் ஊரெல்லாம் ரவுண்டு அடித்து கொண்டிருப்பார்கள்.

ஷூட்டிங்: ஷூட்டிங் இருந்தால் மட்டுமே சாவித்திரி வீட்டுக்கு ஜெமினி போவார்.. மற்றபடி எங்க வீட்டிலேயே இருப்பார்.. ஜெமினி வீட்டில் நான்வெஜ் சமைக்க மாட்டார்கள்.. எங்கள் வீட்டில் கறி, மீன், சிக்கன், டிரிங்க்ஸ் எந்நேரமும் இருக்கும் என்பதால் எங்க வீட்டில்தான் ஜெமினி கணேசன் பெரும்பாலும் இருப்பார்.
ஆனால், 10 பைசா யாருக்குமே செலவு செய்ய மாட்டார் ஜெமினி.. ஒருமுறை என் அண்ணன் சந்திரபாபுவிடம் பேட்டியில் ஜெமினி பற்றி சொல்ல சொல்லி கேட்டார்கள்.. அதற்கு என் அண்ணன், "வட்டிக்கடை வைத்தால், பிழைச்சுக்குகார் ஐயர்" என்று சொன்னார்.
பணத்தேவை: எப்பவுமே எங்க வீட்டில் ஜெனிமி இருப்பதால், தினமும் ராத்திரி 9 மணிக்கு சாவித்ரியிடமிருந்து போன் வரும்.. என் வீட்டுக்காரர் அங்கே இருக்காரா? வீட்டுக்கு அவரை வர சொல்லுங்க. பணத்தேவை என்றால் மட்டும் என்னிடம் வருகிறார். டிரிங்க்ஸ் அதிகமாக அவருக்கு தர வேண்டாம். புத்தி சொல்லி என் வீட்டுக்கு அனுப்பி வைங்க" என்று சந்திரபாபுவிடம் சாவித்ரி போனில் புலம்பி கொண்டே இருப்பார். என் அண்ணனும் சாவித்ரிக்கு ஆறுதல் சொல்வார்.
உடனே என் அண்ணனும், ஜெமினி கையிலிருந்து டிரிங்க்ஸ் பிடுங்கி கொண்டு, அவரை அவரது வீட்டுக்கு அனுப்பி வைப்பார். சாவித்ரிக்கு பாட்டு என்றால் பிரியம். 'ஏதாவது பாடுங்க பாபு' என்று கேட்பார். என் அண்ணனும் அவருக்காக பாடுவார்.
ஒருநாள், ஜெமினிக்கு போன் செய்த என் அண்ணன், "மினர்வா தியேட்டரில் ஒரு இங்கிலீஷ் படம் வந்திருக்கு.. அதை நாம் தமிழில் படமாக எடுக்கலாம்.. அந்த படம் போயிட்டு வந்துடலாம்" என்று கூப்பிட்டார். ஆனால், ஜெமினியோ தனக்கு ஷூட்டிங் இருப்பதால், சாவித்ரியை அழைத்து செல்லுமாறும், படம் முடிந்ததும் தியேட்டரில் வந்து சாவித்திரியை தான் காரில் பிக்கப் செய்து கொள்வதாகவும் சொன்னார்.
நைட் டிரஸ்: அதன்படியே அன்றைய தினம் இரவு 8 மணிக்கே ஜெமினி -சாவித்ரி இருவருமே எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.. ஜெமினி நைட் டிரஸ்ஸில் வந்திருந்தார்.. சாவித்ரி நன்றாக டிரஸ் செய்து கொண்டு வந்திருந்தார். சாவித்ரியை எங்கள்வீட்டில் விட்டுவிட்டு, ஜெமினி கிளம்பிவிட்டார். சாவித்ரியும், என் அண்ணனும் 9.15 மணிக்கு சினிமாவுக்கு கிளம்பினார்கள்.
அப்போது அண்ணன் என்னிடம், "படம் முடிய நைட் 1 மணி ஆகும்.. சாவித்ரியை ஜெமினி தியேட்டரிலிருந்தே அழைத்து சென்றுவிடுவார், நான் மட்டும் 1 மணிக்கு வருவேன், கதவை திறந்துவை" என்று சொல்லிவிட்டு போனார்.
ஐஸ்கிரீம்: ஆனால், 11 மணிக்கெல்லாம் 2 பேருமே வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்க.. 2 பேருமே சினிமாவுக்கே போகல. மவுன்ட்ரோடில் புகாரி ஓட்டல் பக்கத்தில் ஒரு ஐஸ்கிரீம் கடை இருக்கும்.. அங்கே கிடைக்கும் பாதாம் சாக்லேட் ஐஸ்கிரீம் என்றால் சாவித்ரிக்கு உயிர்.. அங்கேதான் 555 சிகரெட்டுகளும் கிடைக்கும். 2 பேரும் அங்கே சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
என்னிடம் அண்ணன், "பேசாமல் போய் படு, கணேசன் வந்து கேட்டால், நாங்க 2 பேரும் 1 மணிக்கு வந்ததாக சொல்லணும்" என்று சொல்லிவிட்டு பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்கள். நான் அந்த கதவோரம் நின்று இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக்கேட்டேன்.
காதல் பைத்தியம்: ரூமிலிருந்து ஒரே சிரிப்பு சத்தம் வந்தது.. ஏதோ தவறாக நடக்குதுன்னு மட்டும் எனக்கு தெரிந்தது. அத்துடன் இருவரும் இணைந்துவிட்டார்கள்.. ரோமியா - ஜூலியட் மாதிரி இருவரும் காதலில் பைத்தியமாக இருந்தார்கள்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications