அப்பாஸை அடிக்க பாய்ஞ்சுட்டாரு அந்த நடிகர்.. ஆச்சரியங்களை தரும் ஆனந்தம்.. ஷூட்டிங்கில் இப்படி நடந்ததா
சென்னை: ஆனந்தம் படம் வெளியாகி 23 வருடங்கள் கடந்த நிலையிலும், அந்த படத்தை பற்றிய இனிய நிகழ்வுகள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வட்டமிட்டு வருகிறது. இப்போதுகூட, அந்த படத்தில் நடித்த நடிகர் பாவா, சீக்ரெட் சம்பவம் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
2001ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ஆனந்தம்.. மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, ஸ்னேகா ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படம், ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை பெற்ற படமாகும்.

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு இன்றும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.. இந்த படம் வெளியாகி பல வருடம் ஆனபோதிலும், இன்றும்கூட டிவியில் ஒளிபரப்பும்போது அனைவரும் விரும்பி பார்க்கக்கூடிய படமாக இது உள்ளது. இந்த இடத்தில் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.
நடிகர் பாவா: அந்தவகையில், நடிகர் பாவாவும் ஒருவர்.. ஒரு திருடனாக வீட்டிற்குள் ஓட்டைப்பிரித்து நுழைந்து, இறுதியில், அந்த குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிடும் விசுவாசியாக நடித்திருப்பார். இந்த படம்தான் பாவாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை தந்திருந்தது. இதற்கு பிறகு, வடிவேல், விவேக் உள்ளிட்ட பல்வேறு ஜாம்பவான் நடிகர்களுடன் காமெடியாக நடித்துள்ளார் பாவா.
இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தை பாவா பல்வேறு விஷயங்களை மனம்திறந்து சொல்லிஉள்ளார். பேட்டி ஒன்றில் பாவா சொல்லும்போது, "ஆனந்தம் ஷூட்டிங் காஞ்சிபுரத்தில் நடந்தது.. அந்த படத்தின் மெகா ஸ்டார் மம்முட்டியே காலையில் 6.30 மணிக்கெல்லாம் ஷார்ப்பா ஷூட்டிங்குக்கு வந்துவிடுவார்.
அண்ணன் - தம்பி: ஆனால் அப்பாஸ் மட்டும் 8 மணி தாண்டியும் வரவே மாட்டார்.. இந்த படத்தில் அண்ணன் தம்பிகள் 4 பேரை வைத்துதான் கதையே நகரும்.. அதனால் 4 பேருமே இருந்தால்தான் சீன் எடுக்க முடியும்.. ஒருத்தரை விட்டுட்டு மற்றவர்களை மட்டும் வைத்து எடுடக்க முடியாது. அப்படித்தான் அன்னைக்கும் லேட்டாக வந்தார் அப்பாஸ்..
உடனே நான் அவரிடம், ஏன் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க? என்று கேட்டேன். அதற்கு அவர், அப்படித்தான் என்னால வர முடியும் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதுமே, நான் அவரை அடிக்கவே போய்ட்டேன். அதன்பிறகுதான் கரெக்ட்டான் நேரத்துக்கு வர ஆரம்பித்தார்" என்று பழைய நினைவுகளை பகிர்ந்திருந்தார் பாவா.
ஆனந்தம்: அதேபோல, ஆனந்தம் படம் குறித்து, டைரக்டர் லிங்குசாமியும் மற்றொரு சேனலுக்கு தந்திருக்கும் பேட்டியில், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சில சம்பவங்கள் சுவாரஸ்யமானதாக இருந்தால், அவைகளை பற்றி படத்தின் தயாரிப்பாளர்களிடம் சொன்னதாகவும், உடனே அவர்களுக்கும் பிடித்துப்போய்விட்டதால், அவை படத்திலும் இடம்பெற்றதாக கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, மம்முட்டியின் மனைவி கேரக்டரில் அதாவது மூத்த மருமகள் கேரக்டருக்கு முதலில் ரம்யா கிருஷ்ணன்தான் தேர்வு செய்யப்பட்டாராம். அதற்கு பிறகு சௌந்தர்யாவை பரிசீலித்துள்ளனர். இறுதியாகவே தேவயானி ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.. ஆனால், முரளியின் மனைவி ரம்பா கேரக்டருக்குதான், முதலில் தேவயானியை முடிவு செய்து வைத்திருந்தார்களாம். பிறகுதான், முரளியின் மனைவியாக ரம்பா ஒப்பந்தமானாராம்.
கேமராமேன் : ஆனந்தம் என்று டைட்டில் வைக்கும் முன் லிங்குசாமி படத்திற்கு திருப்பதி பிரதர்ஸ் என்று பெயர் வைக்க விரும்பினாராம்.. பிறகுதான் முக்கிய கேரக்டரான மம்முட்டிக்கு அந்த பெயர் வைத்தாராம்.
ஆனந்தம் படம் வெளியாகி 20 வருடங்கள் முடிந்த நிலையில், டைரக்டர் லிங்குசாமி பெரும்பாலானோருக்கு தன்னுடைய நன்றியை மனமார சொல்லியிருந்தார்.. "முதலில் கேமராமேன் வில்சன் சாருக்கு நன்றி சொல்லணும்.. எனக்கு முதல் படம் இயக்கும்போது பல விஷயங்கள் தெரியாமல் இருந்திருக்கும். அதையெல்லாம் எனக்கே தெரியாமல் எனக்கு சொல்லி தந்தார்.
அடுத்து இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் சார்... இந்தப் படம் பண்ணும்போது அவர் செம பீக்ல இருந்தார். கம்போஸிங்கிற்கு டைம் வாங்குறதே ரொம்ப கஷ்டமா இருக்கும். அவ்வளவு பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் எனக்கு அற்புதமான பாடல்களை தந்தார்.. அடுத்ததாக, வசனம் எழுதிய பிருந்தா சாரதியை சொல்லணும். ஆனந்தம் படத்திலிருந்து இப்போ வரைக்கும் என்கூட சேர்ந்து வேலை பார்த்திட்டு இருக்கார். இப்படி ஓர் ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
நெகிழ்ச்சி நன்றி: தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி சார், யுகபாரதி, பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், நந்தா பெரியசாமி, மணிபாரதி அப்புறம் இந்தப் படத்தில் என்கூட உதவி இயக்குநரா வேலை பார்த்த எல்லாருக்கும் நன்றிகளை சொல்லிக்கிறேன்" என்று லிங்குசாமி மனம்நெகிழ்ந்து கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications