Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல பாடகர் ஜெயச்சந்திரன்.. மனித உணர்வின் அனைத்து நிலைகளுக்கும் பொருத்தமான குரல்: தங்கர் பச்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு பெருங்கலைஞர்களாக மறைந்து வரும் காலமாக மாறி வருவது பெரும் வருத்தத்துக்குரியதாக உள்ளது. உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் என்றும் மரணம் இல்லை ஐயா! எங்களோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் அளித்த அனைத்து படைப்புகளுக்காகவும் அடக்க முடியாத கண்ணீருடன் வணங்குகிறேன்! சென்று வாருங்கள்" என்று தங்கர் பச்சான் மறைந்த கலைஞர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணீருடன் பதிவிட்டிக்கிறார்.

கடந்த 1944-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி கேரளாவின் கொச்சி அருகேயுள்ள ரவிபுரம் பகுதியில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். சிறுவயது முதலே பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயச்சந்திரன் சினிமா பாடல்களை பாடி வந்தவர்..

jayachandran singer jayachandran

கடந்த 1965-ம் ஆண்டில் மலையாள திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை பெற்றார்.. பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார்.

தமிழில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் காத்திருந்து, காத்திருந்து உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

தலைமுறைகள்: எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி. பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி ஹிந்தியிலும் ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.

சோகம், காதல், மகிழ்ச்சி என அனைத்துவிதமான உணர்வுகளையும் தன்னுடைய குரல் மூலம் உயிர் கொடுத்தவர் ஜெயச்சந்திரன்.. தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த பாடகருக்காக 4 முறை மாநில விருதுகள் ஜெயச்சந்திரனுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், கேரளாவின் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நேற்றிரவு அவர் காலமானார்.

பிரபலங்கள்: இதையடுத்து கேரள, தமிழ் சினிமா உலகம், ஜெயச்சந்திரனுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறது. ஏராளமான பிரபலங்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில், இயக்குனர் தங்கர் பச்சான் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், "ஜெயச்சந்திரன்" என்றும் வாழ்வார்! மக்களின் கணக்கில் வராமலேயே வாழ்ந்து மறையும் பேராளுமைகள் ஏராளம்! அவற்றுள் மிக முக்கியமானவர் திரைப்பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள்.

அறிமுகம்: எம்.எஸ்.வி மணிப்பயல் (1973) படத்தில் "தங்கச் சிமிழ் போல் இதழோ" பாடல் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
டிஎம்எஸ் யேசுதாஸ் எஸ்பிபி வரிசையில் ஜெயச்சந்திரன் அவர்கள் என்றும் நிலைத்திருப்பார்! அவர் பாடிய 95% தமிழ் பாடல்கள் என்னிடம் உள்ளன.

மனித உணர்வின் அனைத்து நிலைகளுக்கும் அவரது குரல் மிகப் பொருத்தமாக அமைந்தது. அலைகள் திரைப்படத்தின் "பொன்னென்ன பூவென்ன கண்ணே" பாடல் தொடங்கி அவர் பாடிய பாடல்களில் உள்ள குழைவுத்தன்மைநம்மை கட்டிப்போட்டு விடும்!

வணங்குகிறேன்:
ஒவ்வொரு பெருங்கலைஞர்களாக மறைந்து வரும் காலமாக மாறி வருவது பெரும் வருத்தத்துக்குரியதாக உள்ளது. உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் என்றும் மரணம் இல்லை ஐயா! எங்களோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் அளித்த அனைத்து படைப்புகளுக்காகவும் அடக்க முடியாத கண்ணீருடன் வணங்குகிறேன்! சென்று வாருங்கள்" என்று உருக்கத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+