சொத்துக்கள் எப்படி பெண் சாமியாருக்கு வந்தன? சென்னை பூந்தமல்லி அப்பார்ட்மென்ட் வீட்டு வாடகை? பிரபலம்
சென்னை: திருவண்ணாமலையில், மடம் வைத்து அருள்வாக்கு சொல்லி வரும் பெண் சாமியாருக்கு, எதுக்காக பூந்தமல்லியில் அப்பார்ட்மென்ட்? அவருக்கு சொத்துக்கள் எப்படி வந்தன? இதை காவல்துறை விசாரிக்கணும்" ஏன மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், திருவண்ணாமலை பெண் சாமியார் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.. சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த இரட்டை கொலை தொடர்பாகவும், பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலி சாமியார்கள்: போலி சாமியார்கள் எப்போதுமே ஆரம்பத்தில் நல்லா சம்பாதிக்கிறாங்க.. அதுக்கப்புறம் அவர்கள் செய்யும் தவறுகள் காரணமாக, ஆண்டவரே அவர்களை தண்டித்து விடுகிறார்கள்.. எனக்கு தெரிந்து நிறைய சாமியார்கள் இப்படி உண்டு.. யாகவா முனிவர், திருச்சியில் ஒரு சாமியார் இப்படி நிறைய உண்டு
அந்தவகையில், சமீபத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் திருவண்ணாமலை பெண் சாமியார்.. திருமுல்லைவாயலில் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கி போட்டுள்ளார்.. தன்னுடைய இந்த திருமுல்லைவாயல் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார் அந்த பெண் சாமியார் .
துர்நாற்றம்: இந்த வீட்டில் 1 மாதமாகவே, துர்நாற்றம் வந்து கொண்டிருக்கிறது.. அப்பார்ட்மென்ட்டில் உள்ளவர்கள், போலீசில் புகார் தந்ததையடுத்து, வீட்டை உடைத்து, 37 வயது மதிக்கத்தக்க பெண், மற்றும் அவரது 78 வயதான தந்தையின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த வீட்டில் ஏசி ரிப்பேர் ஆகியிருந்தது.
இதுதொடர்பான விசாரணையில் அவர்களது பெயர் வேலூரை சேர்ந்த சாமுவேசல் சங்கர், சிந்தியா என்பது தெரியவந்தது.. மகள் திருமணமாகி விவாகரத்தானவர்.. தன்னுடைய அப்பாவுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. அதனால், மருத்துவமனை பக்கத்திலேயே இந்த வீடு இருக்க வேண்டும் என்பதற்காக, சாமுவேல் எபிநேசர் என்கிற டாக்டர், தந்தை, மகளை தன்னுடைய அப்பார்ட்மென்ட் வீட்டிலேயே தங்கவைத்துள்ளார்..
சந்தேகம்: இதில் 2 பெயர்களும் சாமுவேல் என்றே உள்ளது.. சிந்தியாவுக்கும், டாக்டருக்கும், ஏதாவது கள்ளத்தொடர்பு உள்ளதா? என தெரியவில்லை.. எப்ஐஆரில், டயாலிசிஸ் பயனில்லாமல் சாமுவேல் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது.. அப்படியானால், மகளுக்கு தலையில் அடிபட்டுள்ளதே எப்படி? டாக்டர் அவரை கொன்றிருக்கிறாரா? அந்த பெண் கர்ப்பமாக இருந்தாரா? கர்ப்பத்தை மறைக்க டாக்டரே கொன்றுவிட்டாரா? கொலை செய்யும் முன்பு சிந்தியாவுடன் சண்டை போட்டாரா? என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.
வேலூர் சிஎம்சி போன்ற உலகப்புகழ் பெற்ற மருத்துவமனையை வைத்து கொண்டு, இவர்கள் எதற்காக பூந்தமல்லியில் சிகிச்சை பெற வேண்டும்? அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இலவசமாக செய்திருக்கலாமே? அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் அளவுக்கு வசதி உள்ளதா? சிந்தியாவின் சொத்துக்களை அபகரிக்க டாக்டர் திட்டம் போட்டாரா? இதையும் விசாரிக்கணும்.
அன்னபூரணி: முதலில் இவர் உண்மையிலேயே டாக்டர்தானா? போலி டாக்டர் என்றால் பெண் சாமியார் வசமாக மாட்டிக் கொள்வார்.. அந்த டாக்டர் மாயாவி போல, அப்பப்போ வந்துட்டு போவாராம். 3 மாதமாக யார் மூலமாக வாடகை , பெண் சாமியாருக்கு போனது?
3 மாத காலமாகவே தன்னுடைய சொந்த வீட்டுக்கு பெண் சாமியார் போகவே இல்லையா? அல்லது டயாலிசிஸ் நோயிலிருந்து மீட்டு அருள்வாக்கு தருவேன் என்று பெண் சாமியார் சொன்னாரா? எனவே, பெண் சாமியாரையும் இந்த வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்.
சொத்துக்கள்: அதுமட்டுமல்ல, திருவண்ணாமலையில், மடம் வைத்து அருள்வாக்கு சொல்லி வரும் பெண் சாமியாருக்கு, எதுக்காக பூந்தமல்லியில் அப்பார்ட்மென்ட்? அவருக்கு சொத்துக்கள் எப்படி வந்தன? இதையும் விசாரிக்கணும" என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications