ஆர்த்தியின் வாந்தியை கையில் ஏந்திய ஜெயம் ரவி! Made for Each other காதல் ஜோடி! வைரலாகும் பிளாஷ்பேக்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடன் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் அளித்த பேட்டிகள் வைரலாகி வருகிறது. அதிலும் எப்படி அன்யோன்யமாக இருந்த தம்பதி இப்படி ஆகிவிட்டார்களே என்ற அளவுக்கு ஆர்த்தி ஒரு சம்பவத்தை விவரித்துள்ளார்.
தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி என பிரபல ஜோடிகள் தங்களது விவாகரத்தை அறிவித்துள்ள நிலையில் அந்த லிஸ்டில் நடிகர் ஜெயம் ரவியும் சேர்ந்துவிட்டார். இவர் தனது மனைவியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே, நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அடுத்தடுத்த நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் ஒரு தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஆர்த்தியிடம் மறக்க முடியாத தருணம் குறித்து கேட்ட போது, அவர் கூறுகையில், எங்களது முதல் மகன் ஆரவ் பிறக்கும் போது ரவி என்னுடன் இல்லை.
படப்பிடிப்பிற்காக பாரீஸில் இருந்தார். என்னுடன் இருக்க எத்தனையோ முயற்சித்தார். ஆனால் மருத்துவர் சொன்ன டியூ டேட்டுக்கு முன்னாடியே எனக்கு டெலிவரி ஆகிவிட்டது. எனக்கு அதில் வருத்தம்தான். ஆனால் அவருடைய வேலை அப்படி என்ன செய்வது.

ஆனால் நான் கர்ப்பமாக இருந்த போது நான் வாந்தி எடுத்தால் அதை ஜெயம் ரவி கைகளாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார். இரவு நேரத்தில் எனக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்றாலும் உடனே வந்து எனக்கு ரெடி செய்து தருவார். எனவே இந்த விஷயத்தில் அவருக்கு நான் 100 மதிப்பெண்ணுக்கு மேல்தான் கொடுக்க வேண்டும். அவரை போல் எல்லாரும் மனைவியிடம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இவ்வாறு ஆர்த்தி கூறியிருந்தார்.
இந்த பேட்டியில் ஜெயம்ரவியும் எத்தனையோ விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். அதில் ஆர்த்தி நல்லபடியாக வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதால்தான் என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடிகிறது. அது போல் நான் எத்தனையோ முறை டைமுக்கு வருகிறேன் என சொல்லிவிட்டு வராமல் இருந்திருக்கிறேன். அதையெல்லாம் அவர் கோபித்துக் கொள்ளவே மாட்டார் என ரவியும் தனது மனைவியை பெருமையாக பேசியிருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications