வனிதா விஜயகுமார் என்ன இப்படி பேசுறாங்க! வருத்தப்பட்ட கங்கை அமரன்! பிரபலம் தகவல்
சென்னை: இளையராஜாவுக்கு மருமகளாகியிருப்பேன் என வனிதா விஜயகுமார் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது என கங்கை அமரன் வேதனைப்பட்டதாக தேனி கண்ணன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடப்பதற்கான ஒரு சுவடு கூட இல்லாத போது அந்த பெண் ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வாவ் தமிழாவுக்கு தேனி கண்ணன் கூறியிருப்பதாவது: வனிதா இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவள் என சொன்னது. இது சம்மந்தமா ஒருவேளை இருக்குமோ என நிறைய பேர் கிட்ட விசாரித்தேன். அதுக்கான ஒரு சுவடு கூட இல்லை.
என்ன இப்படி இந்த பொண்ணு பேசிகிட்டு இருக்குனு எல்லாரும் சிரிக்கிறாங்க. கார்த்திக் ராஜாவே இளையராஜா சாருடைய ஒரு சின்ன வடிவம்தான். அவர் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். அதுவும் பெண்கள் இருந்தால் அவர் தனியாக போய்விடுவார்.
இதுகுறித்து கங்கை அமரன் கிட்ட பேசும் போது என்ன இந்த பொண்ணு இப்படி பேசிக்கிட்டு இருக்கு என அவர் வருத்தப்பட்டார். பொது வெளியில் இப்படி பேசக் கூடாது. ராஜா சார் அவருடைய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் வழக்கு போடுகிறார் என தெரிந்தும் அந்த பாடலை வனிதா தனது படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அவருக்கு வேறு ஒரு எண்ணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.
தனது படம் குறித்து வனிதா பேசலாம். பிரச்சினை என்றால் அதை எப்படி தீர்ப்பது என்பதை யோசிக்கலாம். ஆனால் நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி அவரே தற்போது இசையமைக்க வந்துவிட்டார். இந்த சூழலில் இப்படியெல்லாம் வனிதா சொல்வது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ள "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" என்ற படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான "ராத்திரி சிவராத்திரி" (படம்: ஷிவானி) என்ற பாடலை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இளையராஜா தரப்பு: இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தனது அனுமதியின்றி தனது பாடலைப் பயன்படுத்துவது காப்புரிமை மீறல் என்று அவர் வாதிட்டுள்ளார்.
வனிதா தரப்பு: வனிதா விஜயகுமார் இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்கும்போது, இளையராஜா குடும்பத்தினருடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு குறித்துப் பேசியுள்ளார். இது ஒரு சிறிய விஷயம் என்றும், "இளையராஜா என் அப்பாவைப் போன்றவர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜா வீட்டு மருமகளாகும் வாய்ப்பு தனக்கு இருந்தது குறித்து வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications