சில்லு சில்லாய் உடையுதே ஆதரவு? சின்மயிக்கு ஏன் ரஹ்மான் சான்ஸ் தரல? கங்கை அமரனின் பப்ளிசிட்டி:பிரபலம்
சென்னை: பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து கங்கை அமரன் கருத்து கூறியிருக்கிறார்.. ஆனால், சின்மயி விஷயத்தை வைத்துக் கொண்டு, கங்கை அமரன், விஜய் ஆண்டனி போன்றவர்கள் சுயவிளம்பரங்களை தேடி கொள்வது போல தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கருத்து தெரிவித்துள்ளார்..
2 நாட்களுக்கு முன்பு, King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "சின்மயிக்கு அநீதி நடந்தது இருக்கட்டும், முதல்ல கங்கை அமரன் யாரு?

பிளேபாய் என எப்படி சொல்லலாம்
"அவர் நல்ல கவிஞர், நல்ல மனிதர் கிடையாது" என்று எப்படி சொல்லலாம்? இன்னொரு கவிஞரை எப்படி "பிளேபாய்" என்று சொல்லலாம்? அதுவும் இத்தனை வருட கால நட்பில் இருந்துவிட்டு, இப்போது வந்து ஏன் சொல்ல வேண்டும்?
ஒருமுறை தமிழா தமிழா பாண்டியன் அண்ணன் பேட்டி ஒன்றில், "இளையராஜாவுக்கு அந்தப்புரம் இருக்கு. நான் சொல்வது பொய் என்றால், என் மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார்..
கங்கை அமரன் காப்பிரைட்
சொந்த அண்ணன் மீது இப்படியொரு புகார் வரும்போது, கங்கை அமரன் ஏன் அப்போது வாய் திறக்கல? கோமாவில் இருந்தாரா? இதே கங்கை அமரன், அன்று காப்பிரைட் பிரச்சனை வந்தபோது, தன் அண்ணனுக்கு எதிராகவே பேசினார்.. எனவே, கங்கை அமரன் பேசுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், கங்கை அமரனை இப்படி சொல்ல வைத்ததே பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம்தான்.. இங்கே யாருக்குமே அரசியல் தெரியாது.. உண்மைகளையும் மறைத்து விடுவார்கள்.. மக்களுக்கு உண்மை செய்திகள் போய் சேராமல் இருட்டடிப்பு செய்துவிடும்.
ஆரிய - திராவிட யுத்தம்
இப்போது சமூக ஊடகங்கள் வந்தபிறகுதான் மக்களுக்கு செய்திகளே போய் சேருகின்றன.. கங்கை அமரனின் நோக்கம், சின்மயி உயர்குடியை சேர்ந்தவர்.. அந்த பாடலாசிரியர் திமுகவுக்கு அதாவது கலைஞர் கருணாநிதிக்கு நெருங்கியவர்.. எனவே இந்த சண்டையே ஆரிய - திராவிட யுத்தமாகும்," என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி பப்ளிசிட்டி
அதேபோல சின்மயி குறித்து Valaipechu voice யூடியூடிப் சேனலில் வலைப்பேச்சு அந்தணன் பேசும்போது, "சின்மயிக்கு விஜய் ஆண்டனி வாய்ப்பு தருவதாக சொல்லியிருப்பதை நாம் பாராட்டலாம்.. ஆனால், இத்தனை நாள் சின்மயிக்கு ஏன் வாய்ப்பு தரப்படவில்லை? சின்மயிக்கு வாய்ப்பு தரப்போவதாக இப்போது விஜய் ஆண்டனி சொல்வது கூட, தன்னுடைய படத்துக்கு பப்ளிசிட்டிக்காக செய்வதுபோல தெரிகிறது.
அதுபோல இத்தனை காலம், ஏஆர் ரஹ்மான் எதற்காக சின்மயிக்கு பாட வாய்ப்பு தரவில்லை? சின்மயிக்கு வாய்ப்பு தர வேண்டாம் என்று திமுக மேலிடம் ரஹ்மானை தடுத்ததா? டப்பிங் யூனியனிலிருந்து ராதாரவி தடுத்தாரா? தெரியவில்லை..
பாடலாசிரியருக்கு எதிராக கங்கை அமரன் பேசுவதை வைத்து, சின்மயி பக்கம் நியாயம் உள்ளது என்று அர்த்தம் இல்லை.. பாடலாசிரியர் - சின்மயிக்கு என்ன பிரச்சனை என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.
கங்கை அமரன் சுயவிளம்பரம்
ஆனால், இதில் கங்கை அமரன் ஏன் பேச வேண்டும்? பாஜகவில் உள்ளவர் கங்கை அமரன்.. அதேபோல பாடலாசிரியருக்கும், இளையராஜாவுக்கும் ஏற்கனவே கருத்து மோதல் உள்ளது.. எனவே, சின்மயி விஷயத்தை வைத்துக் கொண்டு, கங்கை அமரன் போன்றவர்கள் சுய விளம்பரத்தை தேடி கொள்வதாகவே தெரிகிறது. ஆனால், கங்கை அமரனை வைத்து பாஜக இதை மூவ் செய்வதாக நான் நினைக்கவில்லை" என்று கருத்து கூறியிருக்கிறார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications