Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gautham: தாத்தா முத்துராமன் ஊரில் கிடைத்த அனுபவம்.. குலதெய்வ வழிபாடு, கார்த்திக் மகனாக பெருமை! கௌதம் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சில வருடங்களுக்கு பிறகு இப்போ பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார். அதில் தன்னுடைய மனதில் இருக்கும் வருத்தம் மகிழ்ச்சியை வெளிப்படையாக பேசியிருந்தார்‌. தன்னுடைய அப்பாவை பற்றிய சில நாட்களாக பரவி வரும் சர்ச்சைகளுக்கும் விளக்கம் கொடுத்திருந்தார். அதேபோல தான் திடீரென பெயர் மாற்றியது பற்றியும், தன்னுடைய தாத்தாவின் பூர்வீகம் பற்றியும் பேசி இருக்கிறார்.

சினிமாவிலும் சில பிரபலங்களின் வாரிசுகள் அடியெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதேபோல நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக் நவரச நாயகனாக 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்தார். இப்போது அவருடைய மகனும் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவின் கடல் படத்தின் மூலமாகத்தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

Gautham Karthik Karthik

அதற்கு பிறகு என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், வை ராஜா வை, முத்துராமலிங்கம், பத்து தல போன்ற படங்களில் நடித்திருந்தார். ஒவ்வொரு படத்திலுமே இவருடைய வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்தது. ஆனாலும் இவருடைய திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வருகிறது. அவருடைய அப்பா போல இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் கௌதம் கார்த்திக் என்ற தன்னுடைய பெயரை கௌதம் ராம் கார்த்திக் என்று மாற்றியதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். அது பற்றி அவர் பேசும்போது நான் இப்படி என்னுடைய பெயரை மாற்றியதற்கான காரணம், என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் கௌதம் கார்த்திக் தான்.

சினிமாவில் நான் நடிக்க வந்தபோது என்னுடைய பெயர் ரொம்பவும் பெருசா இருக்குன்னு சொன்னதால தான் நான் கௌதம் கார்த்திக் என்று மாற்றி வைத்துக் கொண்டேன். ஆனால் அண்மையில் என்னுடைய தாத்தா முத்துராமனின் அப்பாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் பக்கம் இருக்கும் ஒரு கிராமத்துக்கு போனோம். அங்கு என்னுடைய தாத்தா மற்றும் அவருடைய அப்பா பற்றி பல விஷயங்களை சொன்னார்கள்.

அந்த ஊரில் என்னுடைய தாத்தாவை பற்றி சொந்தக்காரங்க எல்லாம் பேசும் போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. நாங்க இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் என்னுடைய தாத்தாவும் என்னுடைய அப்பாவும் தான். அதனால் தான் என்னுடைய தாத்தாவின் பெயரை என் பெயரோடு சேர்த்துக் கொண்டேன். தாத்தாவின் ஊரில் இருக்கும் குலசாமி கோவிலில் நின்ற போது என்னுடைய உடம்பெல்லாம் ஏதோ பண்ணுச்சு. அந்த இடத்தில் கால் வைத்ததுமே என்னுடைய மனதிற்குள்ளும் அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருந்தது.

இதையெல்லாம் இத்தனை நாட்களாக மிஸ் பண்ணிட்டோமோனு நினைச்சேன். அதனால இப்போ பல விஷயங்களை மாற்றி இருக்கிறேன் என்று பேசி இருந்தார்‌. சமீப காலமாக சில நடிகர்கள் தொடர்ந்து தங்களுடைய பெயரை மாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் கார்த்திக் மகன் கெளதமும் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். இனியாவது அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

அதுபோல கௌதம் கார்த்திக் இப்போது கேஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா தான் இந்த படத்தை இயக்குகிறார். அதுபோல இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தின் கதை தென் மாவட்டங்களில் நடப்பது போன்று உருவாகி வருகிறது. அதற்காக கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி போன்ற இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

சூட்டிங் நேரத்தில் தன்னுடைய தந்தை பற்றிய சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் பதில் கொடுத்திருக்கிறார். அதிலும் சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் வீல் சேரில் ஹாஸ்பிடலில் இருப்பது போல ஒரு போட்டோ வெளியானது. அது குறித்து கூட இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார். அப்பாவுக்கு வயதாகி விட்டதால் அவருக்கு ஒவ்வொரு வருடமும் நாங்கள் மெடிக்கல் செக்கப் எடுக்க போவோம்.

அப்படி செக்அப் போகும்போது அவரால் மாடியில் அதிகமாக ஏற முடியாது என்பதால் தான் நாங்கள் வீல்சேரில் கூட்டிட்டு போனோம். அதை யாரோ போட்டோ எடுத்து ரொம்பவும் தவறா பரப்பி இருக்காங்க. அதுபோல இப்போ அப்பாவை பற்றி எப்படி எல்லாமோ சொல்லுறாங்க. இதை எல்லாம் அப்போவே அப்பாவிடம் சொல்லி இருக்கலாமே என்று எனக்கு தோன்றுகிறது என்றும் தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+