மங்கா கோஷ்டியை வெட்டி சாய்த்து எஸ்கேப்பான காயத்ரி.. நம்புற மாதிரியா பாஸ் இருக்கு!
தெய்வமகள் சீரியலில் பொம்பள ரவுடி மங்கா கோஷ்டியை வெட்டி சாய்த்துவிட்டு பலகொலை காயத்ரி தப்பியோடிவிட்டதாக முடிந்தது நேற்றைய சீரியல்.
Recommended Video

சென்னை: தெய்வமகள் சீரியலில் தங்களை வெட்டி சாய்த்துவிட்டு பலகொலை காயத்ரி தப்பியோடிவிட்டதாக பொம்பள ரவுடி மங்கா கூறுவதாக முடிந்தது நேற்றைய சீரியல்.
சன்டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகும் தெய்வமகள் சீரியல் 1400 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
ஜெய்ஹிந்து விலாஸை அடைய துடித்த அவ்வீட்டின் மூத்த மருமகளான காயத்ரி அந்த குடும்பத்தை படாதபாடுபடுத்தி வந்தார். தனக்கு ஆபத்து என்றால் ஒன்றுக்கொன்றாக இருந்தவரையும் போட்டுத்தள்ள தயங்காத கதாப்பாத்திரம் அண்ணியார் காயத்ரி.

பழிவாங்கும் காயத்ரி
பல வழிகளில் ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரை பழிவாங்குகிறார் காயத்ரி. அதனை சட்டரீதியாகவும் நேர்மையான முறையிலும் தகர்த்தெறிந்து வருவதுதான் ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் வேலை.

கிளைமேக்ஸ்
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இதுதான் நமக்குள் நடக்கும் கடைசி யுத்தம் என மாறிமாறி டயலாக் பேசி வந்தனர் ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரும் காயத்ரியும். இதனால் நாடகம் கிளைமேக்ஸ்க்கு வந்துவிட்டதாக எண்ணினர் மக்கள்.

மகா பாப்பா கடத்தல்
ஆனால் அகிலாவை போட்டுத் தள்ளிய கையோடு ஜெய்ஹிந்த் விலாஸ்க்கு வழங்கப்படும் தண்ணீர் கேனில் விஷத்தை கலந்த காயத்ரி, பிரகாஷ் சத்தியாவின் மகா பாப்பாவை கடத்தி சென்றார். குழந்தையை வைத்து போக்கு காட்டி வரும் காயத்ரி 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் குழந்தை தருவதாக கூறினார்.

மங்காவுக்கு வெட்டு
நேற்று பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் மீன்விற்கும் ஷீலாவின் தகவலை அடுத்து அவரது வீட்டிற்கும் வரும் போலீசார் பொம்பள தாதாவான மங்கா மற்றும் அவரது கோஷ்டியினர் வெட்டப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைகின்றனர்.

சீரியல் முடிந்தால் சரி
மங்கா மற்றும் அவரது கோஷ்டியை தனித்தனியாக அழைத்து வெட்டி சாய்த்தாரா காயத்ரி அல்லது இதுவும் நடிப்பா என்பது இன்றைய எபிசோடில் தெரியும். எது எப்படியோ காயத்ரி பிடிப்பட்டு தெய்வமகள் சீரியல் முடிந்தால் சரி என்கின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications