என் வீட்டுத் தோட்டத்தில்.. பழங்கள், காய்கறிகளுடன் கலகலப்பான காயத்ரி ஜெயராமன்..!
சென்னை: திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருந்த காயத்ரி ஜெயராமன் தற்போது சீரியல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அது போதாதென்று இன்ஸ்டாகிராமில் வீட்டில் தோட்டத்தில் காய்த்த பழங்களையும் காய்கறிகளையும் போட்டோ எடுத்து போட்டு வருகிறார். இது வைரலாக பரவி வருகிறது.
இவர் ஆரம்பத்தில் மாடலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். சென்னை சில்க்ஸ் ,நல்லி சில்க்ஸ் ,குமரன் சில்க்ஸ் போன்ற பல விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

டிவியில் காயத்ரி
அதுமட்டுமில்லாமல் சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சியிலும் விஜய் டிவியில் டெலிபோன் மணி போல் நிகழ்ச்சியிலும் விஜே வாகவும் இருந்திருக்கிறார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க தொடங்கினார். மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் இவர்.

வசீகராவில் நடிப்பு
அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு வேறு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

பிசியோதெரப்பி
இவர் இளம் வயதிலிருந்தே மருத்துவம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம். பன்னிரண்டாம் வகுப்பில் 96% மார்க்கு பெற்றிருந்தாலும் இவருக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லையாம். இதனால் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி யில் பிசியோதெரபி படித்து இருக்கிறார். ஒரு நடிகையாக நான் எவ்வளவு காலத்திற்கு நடிக்க முடியும். சில ஆண்டுகள்தான் அதில் நடிகையாக நிலைத்திருக்க முடியும். ஆனால் அதுவே ஒரு நிரந்தரமான ஒரு படிப்பும் தொழிலும் அமைந்துவிட்டால் படங்களில் இருந்து வெளியே வந்த பிறகும் தன்னோடு தான் சுயமாக இருக்கலாம் என்பது இவரது நம்பிக்கை.

ஸ்கூபா டைவர்
சினிமாவை விட்டு விலகியதும் அவர் ஆழ்கடலில் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவிங் பயிற்சி யாளராக பணியாற்றினார். அதன் பின்னர் சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை முடிந்ததும் கொஞ்ச நாட்கள் சினிமாவை விட்டு தள்ளி இருந்த இவர் கொஞ்ச நாள் கழித்து வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவங்கிய காயத்ரி ஜெயராமன் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சீரியலில் சாமியார்
இந்த சீரியலில் இவர் ஒரு சாமியாராக நடித்திருப்பார். அதுவும் அவருடைய சீன்களில் கண்களை உருட்டி இவர் மிரட்டி இருப்பார் இது அவரது ரசிகர்களை கூட்டியது அதுமட்டுமல்ல சின்ன குட்டி குட்டி குழந்தைகளும் கூட பைரவி ரசிகர்கள் ஆகிவிட்டனர். தற்போது இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சிலர் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார் .அது வைரலாக வேற லெவல் பரவிக்கொண்டு வருகிறது. தனது வீட்டுத்தோட்டத்தில் இவர் வைத்த கொய்யா மரத்தில் இருந்து கிடைத்த பழங்களை போட்டோ எடுத்து இணையதளத்தில் போட்டிருந்தார்.

கொய்யாப் பழங்கள்
இதை பார்த்த பல ரசிகர்கள் நம்ப முடியாமல் நீங்கள் அந்த மரத்தை காட்டுங்கள் என்று கேட்டு இருந்திருக்கிறார்கள். இதற்கு பதிலாக இவர் லைவில் வந்து ரசிகர்களுக்கு அந்த மரத்தையும் மரத்தில் காய்த்து கிடக்கும் கொத்துக்கொத்தாக கொய்யாப் பழங்களையும் காட்டியிருக்கிறார் .யாருக்கெல்லாம் இந்த பழம் வேண்டும். வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

வாய் பிளந்த ரசிகர்கள்
ரசிகர்கள் பலர் இந்த மரங்களையும் அதிலிருக்கும் பழங்களையும் பார்த்து வாயை பிழைக்கிறார்கள். இப்ப இருக்கிற ட்ரெண்டான மரங்களை மரங்களை நட்டு இப்ப போடும் போஸ்டர்களில் இவர் நட்ட மரத்தைப்பற்றி போட்டிருப்பது வைரலாக பரவி வருகிறது. காயத்ரி ஜெயராமன் பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கு நல்லாத் தெரியும். இப்போது இனிமையான தோட்டக் கலையிலும் அவர் கைதேர்ந்தவராக இருப்பது என்பது கூடுதல் சந்தோஷமான செய்திதானே.












Click it and Unblock the Notifications