Ilayaraja: ரூ 5 கோடி கேட்டு நோட்டீஸ்! இளையராஜா மீது மிகுந்த மரியாதை இருக்கு! GBU பட தயாரிப்பாளர்
சென்னை: இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது என குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்காக அவர் நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்பட்ட நிலையில் ரவிசங்கர் விளக்கமளித்த போது மேற்கொண்ட தகவலை தெரிவித்தார்.

அஜித்குமார் நடிப்பில் நடிகர் பிரபுவின் மருமகனும் நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் இது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த படத்தில் ஒத்த ரூவா தாரேன், இளமை இதோ இதோ , என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த பாடல்களை நீக்குமாறு இசையமைப்பாளர் இளையராஜா, படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனது பாடலை பயன்படுத்தியதற்காக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். உடனே அந்த பாடல்களை நீக்க வேண்டும். 7 நாட்களில் எழுத்துப்பூர்வ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தான் இசையமைத்த பாடல்களை கெடுக்கும் விதமாக மறுஉருவாக்க பாடல்கள் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸின் உரிமையாளர் ரவிசங்கர் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம். இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம்.
அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. அவர்களிடம் தடையில்லா சான்றையும் பெற்றுள்ளோம். எனவே நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக் குழு அதை சந்திக்கும் என தெரிவித்துள்ளார். இதே போல் ஆதிக் ரவிச்சந்திரனும், இந்த பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனத்திடம் உரிய அனுமதியை பெற்றாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த காப்பிரைட் விவகாரம் தொடர்பாக இணையதளத்தில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதே சமயம், இளையராஜாவின் பாடலை பயன்படுத்திக் கொள்ளலாமா என கேட்டால் அவர் தாராளமாக ஓகே சொல்லிவிடுவார். ஆனால் அதற்கான காசை கூட வாங்க மாட்டார் என்கிறார்கள்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications