விக்ரம் பிரபு காட்டிய கறார்.. பிரபு நல்ல முடிவு.. ஊரெல்லாம் பரவிய அன்னை இல்லம் ஜப்தி ஆர்டர்: பிரபலம்
சென்னை: அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், "அன்னை இல்லம்" வீட்டின் முழு உரிமையாளர் பிரபு என்பதால், ஜப்தி செய்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டிருந்தார். அந்தவகையில் பிரபு நல்ல முடிவு எடுத்திருப்பாக அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் கீதா தந்துள்ள பேட்டியில், கந்துவட்டி தலைதூக்கிவரும் நிலையில், பொதுமக்களின் கடனுதவி திட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி என அறியப்படும் வழக்கறிஞர் கீதா, Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில், "சினிமா என்பதும் ஒரு தொழில்தான்.. அதற்கு முறையான கடன் வசதிகள் எதுவும் அரசு ஏற்படுத்தி தரவில்லை.. அதனால் இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களிடம்தான் பணத்தை வாங்க வேண்டியிருக்கிறது.

கந்துவட்டி கொடுமை
ஒரு விவசாயியே வங்கியில் கடன் கேட்க போனால், சொந்த வீடு இருக்கிறதா? என்றுதான் கேட்கப்படுகிறது. விவசாய நிலம் சொந்தமாக இருப்பதாக சொன்னாலும் வங்கிகள் அதனை பரிசீலிப்பதில்லை. இதனால் அப்பாவி விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களை நாட வேண்டியிருக்கிறது.. எனவே கடன் திட்டங்களை அரசு முறைப்படுத்த வேண்டும்..
சிவாஜி வீட்டு விவகாரத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது.. படம் எடுப்பதற்காக 3 கோடி கடன் வாங்கி, அது குட்டி மேல் குட்டி போட்டு 9 கோடியாகிவிட்டது.. கந்துவட்டி பற்றி, பொதுமக்களுக்கு இதெல்லாம் ஒரு பாடம்..
பாஜகவில் இணைந்த ராம்குமார்
நடிகர் பிரபு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.. அவரது மகனும் சினிமாவில் பணிபுரிகிறார்.. ஆனால், சிவாஜியின் பெயரை ஓரளவு கெடுப்பது ராம்குமார்தான்.. இதை நான் தைரியமாகவே சொல்வேன்.. எனக்கொன்றும் பயம் கிடையாது. தனக்கு உதவுவார்கள் என்று நினைத்து ராம்குமார் பிஜேபியில் சேர்ந்துள்ளார்.. எந்த கட்சியுமே, உங்களது பெயரை பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, உங்களுக்கு உதவி செய்யாது.. சிவாஜி என்ற பெரிய லெஜண்ட்டின் மகன் என்பதால், உங்கள் பெயரை கட்சிகள் பயன்படுத்தி கொள்ளும்.
அதேபோல, சிவாஜியின் பேரன் துஷ்யந்த்தும், கடன் வாங்கியதை வேண்டுமென்றே செய்யவில்லை.. சொத்துக்கான பத்திரங்களையும் யாரிடமும் கொண்டுபோய் தரவில்லை. ஆனால், இந்த கந்துவட்டிக்காரர்கள், சிவாஜி குடும்பத்தினருக்கு சொத்துக்கள் நிறைய இருக்கின்றன என்று யூகித்து கொண்டு, அன்னை இல்லம் வீட்டை குறி வைத்துவிட்டனர்.. கடன் கொடுத்தவர்களுக்கு புத்தி இருந்திருக்க வேண்டும்.
அன்னை இல்லம் சொத்துக்கள்
அன்னை இல்லம் போன்ற சொத்துக்கள் இருப்பதாக அவர்களாகவே நினைத்து கொண்டு, கடன் தந்துள்ளனர். உடனே கோர்ட்டும் ஜப்தி என்று சொல்விட்டது. கடன் தந்தவர்களிடம் ஏதாவது பத்திரம் இருந்ததா? எதுவுமே இல்லாமல், நான்கில் ஒரு பங்கு ஜப்தி செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதும் தவறுதானே? இந்த விஷயத்தில் நீதிமன்றமும் அவசரப்பட்டுவிட்டது.
அன்னை இல்லம் வீடு யார் பெயரிலாவது இருக்கிறதா? என்றெல்லாம் தெரியாமலேயே அறிவித்து, கடைசியில் உலகமெல்லாம் "சிவாஜி வீடு ஜப்தி" என்ற பெயர் மட்டும் பரவிவிட்டது.. இதனால் சிவாஜி குடும்பத்தினர் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள்? அந்த குடும்பத்தினரின் உணர்வுகள் எப்படியிருக்கும்? என்பதை பற்றி யாருமே யோசிப்பதுமில்லை.
ஜாக்பாட் குதிரை
நீதியரசர் தவறு செய்தாலும் தவறு தவறுதான்.. இதுக்கெல்லாம் பிரபு மானநஷ்ட வழக்கு தொடுக்கலாம்.. சிவாஜி சாருக்கு இது கெட்ட பெயர் என்பதுடன் ராம்குமாரும் இதை உணர வேண்டும். ஆனால், அவர்கள் எல்லாரையும் விட இதில் தவறு செய்தது கோர்ட் தான்..
இந்த கடன் விவகாரம் குறித்து ராம்குமார் ஏன் பேசவில்லை என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.. ராம்குமார், பிரபுவெல்லாம் எதற்காக இதை பற்றி வெளியே பேச வேண்டும்? இது அவர்களது குடும்ப விவகாரம்.. பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அந்த குடும்பத்தினருக்கு கிடையாது.
அதேபோல, யாராக இருந்தாலும், சினிமா என்பது நிரந்தரம் இல்லை. ஜாக்பாட் குதிரை போலத்தான் இந்த தொழிலும். திடீரென உயர்வு, திடீரென சரிவும் இருக்கும் என்பதால், 2வதாக மற்றொரு தொழிலையும் எப்போதுமே நடிகர், நடிகைகள் தங்கள கையில் வைத்து கொள்ள வேண்டும்.
வாரிசுகள் தவறவிடுகிறார்கள்
அதேபோல, தங்களது பிள்ளைகளிடம், தன்னை போல நீங்களும் நடிகராக, நடிகையாக வேண்டும் என்று நினைக்க வேண்டாம், நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று வீட்டிலுள்ள பெரியவர்களும், தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்து சொல்வதில்லை.. சினிமாவில் இருந்தால், தங்கள் பிள்ளைகளையும் சினிமாவிலேயே வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற அவசியம் கிடையாது..
ஆனால் அதைவிட்டுவிட்டு, தங்களது அப்பா, தங்களது தாத்தாவுக்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதையை வைத்து, தங்களையும் அதுபோலவே எடை போட்டு கொள்கிறார்கள்.. இதனால், படிப்பு, வேலை, எதிர்காலத்தையும் வாரிசுகள் தவறவிடுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தந்த பேட்டியில், அண்ணனுக்காக உதவி செய்யலாம் என்ற ரீதியில் பிரபுவின் மனம் இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், விக்ரம் பிரபு, இதை ஏற்பதாக தெரிவதில்லை. எத்தனை காலத்துக்குதான், அவர்களுக்கு உதவி கொண்டிருப்பது? பணம் தரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.. ஆனாலும், தன்னுடைய அண்ணனை கைவிட முடியாது என்று பிரபு சொல்லிவிட்டாராம்...
"சொத்து பிரச்சனை கோர்ட்டில் நடக்கிறது... சொத்துக்களிலிருந்து எதுவுமே நான் அவர்களுக்கு தரவில்லை. தன்னுடைய சம்பாதியத்திலிருந்து மட்டுமே தருகிறேன்" என்று மகனுக்கு விளக்கம் தந்திருக்கிறார்.. இதனால் கோபித்து கொண்டு, விக்ரம் பிரபு அடையாறில் தனிக்குடித்தனமே சென்றுவிட்டார்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications