நேரா அன்புமணி கிட்டயே போயிட்டாரு கிங் காங்.. அந்த தட்டில் என்ன பாருங்க? கிங்காங் முகத்தில் பூரிப்பு
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர் போனவர் நடிகர் கிங்காங். நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசய பிறவி' படம் மூலம் காமெடியனாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.. இப்போது கிங்காங் வீட்டில் விசேஷம் நடக்க போகிறது. இது தொடர்பான செய்திகளும், போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நடிகர் கிங் காங்கின் இயற்பெயர் ஷங்கர் ஏழுமலை என்பதாகும்.. முதல்முதலில் கிங்காங் கேரக்டரில் நடித்ததால், அதே பெயரிலேயே சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். வடிவேலு, விவேக் போன்றோருடன் இணைந்து பல்வேறு காமெடி படங்களில் நடித்துள்ளார்.

இதில் வடிவேலுவுடன் நடித்த படங்கள் அத்தனை காமெடிகளும் இன்றுவரை மக்களை கவர்ந்து வருகிறது.. கிங் காங் இதுவரை 40க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்..
பலருக்கும் வேலைவாய்ப்பு
எனினும், சொந்தமாக ஒரு தொழிலையும் செய்து வருகிறார்.. கோ-ஆர்டினேட்டர் என்று சொல்லக்கூடிய, கோவில் திருவிழா, திருமணம், காதுகுத்து விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இதன்மூலம் சினிமாவில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களுக்கு, மேடை நிகழ்ச்சிகள் மூலம் வேலைவாய்ப்புகளை கிங் காங் பெற்று தந்து வருகிறார்..
தேசிய விருது - டாக்டர் பட்டம்
நடிகர் கிங்காங்கிற்கு கடந்த 2017ல் வேலூர் பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருந்தனர்.. அதுமட்டுமல்லாமல், நடிப்பு திறமைக்காக தேசிய விருதினை பெற்றிருக்கிறார் கிங்காங்.
கிங்காங்குக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதில், கடந்த 2024-ல் கிங் காங்கின் இளைய மகள் 12ம் வகுப்பு தேர்தவில் சிறந்த மதிப்பெண்களை பெற்றிருந்தார்.. அதாவது 404 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியிருந்தார்..
பிறந்த நாள் - இறந்தநாள்
சென்னை எம்ஜிஆர் மார்க்கெட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கிங்காங்.. கடந்த ஆகஸ்ட் மாதம் தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடினார் கிங்காங்.. இதற்காக தன்னுடைய பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ந்து, அனைவருக்கும் ஊட்டி விட்டார்.
ஆனால், சிறிது அடுத்த சிறிதுநேரத்தில் கிங்காங்கின் அம்மா, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.. அதாவது நள்ளிரவு 12.30 மணிக்கு கிங்காங்குக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. 1.30 மணிக்கு இறந்துவிட்டார்.. மகனின் பிறந்தநாளின்போதே, அம்மா இறந்த சம்பவம் தமிழ்த்திரையுலகை உலுக்கியிருந்தது நினைவிருக்கலாம்.
கிங்காங் வீட்டில் விசேஷம்
இந்நிலையில், கிங்காங் வீட்டில் விசேஷம் நடக்க போகிறது.. கிங்காங்கின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.. இதற்காக கிங்காங், திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் கல்யாண பத்திரிகையை வழங்கி வருகிறார். அந்தவகையில், பாமக தலைவர் அன்புமணியையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை தந்துள்ளார்.

தட்டில் மாம்பழங்கள்
ஒரு தட்டில் திருமண பத்திரிகையுடன் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை உள்ளன.. அதில் 2 மாம்பழமும் இருக்கிறது.. "அண்ணே, என் கல்யாணத்துக்கு வந்த மாதிரி, என் பொண்ணு கல்யாணத்துக்கும் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்ணே என்று உரிமையுடன் அழைப்பு விடுத்துள்ளார்..
அன்புமணிக்கு கிங்காங் பத்திரிகையை வழங்குவதும், அதை அன்புமணி அன்புடன் பெற்றுக் கொள்வதும் வீடியோவாகவும் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் இப்போதே கிங்காங் மகளுக்கு வாழ்த்துக்களையும் இணையவாசிகள் கூறிவருகிறார்கள்.
டாடூ செல்லம்
முன்னதாக, கிங்காங் மகள், தன்னுடைய அப்பாவோடு சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "என் பிரண்ட்ஸ்கள் என் அப்பாவை பார்ப்பதற்காகவே வீட்டுக்கு வருவார்கள்.. என் அப்பா குள்ளமாக இருக்கிறாரே என்று கொஞ்சமும் நான் கவலைப்பட்டதில்லை.. அவர் இப்படி இருப்பதுதான் எங்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறது. எப்பவுமே என் அப்பாவை நான் "டாடூ"ன்னுதான் செல்லமா கூப்பிடுவேன் என்றெல்லாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications