அரங்கத்தில் பெண் சொன்ன வார்த்தையை கேட்டு துள்ளி குதித்த கோபிநாத்.. இவருக்கே இந்த நிலைமையா?
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் சொன்ன வார்த்தையை கேட்டு கோபிநாத் துள்ளி குதித்து இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது.
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் கணவரை திருத்துவது என் வேலை இல்லை என்றும் திருமணத்திற்கு பிறகும் திருந்தலாம் தவறில்லை என்றும் தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
அதில் ஒரு பெண் என்னை திருத்துவதற்கே ஒரு ஆள் வேண்டும் என்று கூறிய காரணத்தை கேட்டு கோபிநாத் துள்ளி குதித்து அந்த பெண்ணை பாராட்டி இருக்கிறார்.

தொகுப்பாளரின் தனித்திறமை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் பல வருடங்களாக தொடர்ந்து கோபிநாத் தொகுப்பாளராக இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் எடுத்து வைக்கும் கருத்துக்கள் நடுநிலையாக இருப்பதாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி அவரை பாராட்டி வருகின்றனர். இருதரப்பு வாதங்களையும் சரியாக கேட்டு தன்னுடைய மனதில் தோன்றுவதை முகத்தில் அடித்தது போன்று சபையில் எடுத்து உரைத்து அதில் இருக்கும் நிறை குறைகளை விரிவாக எடுத்து பேசுவதில் கோபிநாத்துக்கு நிகர் எவருமில்லை என்று அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அப்படியெல்லாம் திருத்த முடியாது
ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டு வரும் அந்த வகையில் இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு கணவரை திருத்துவது என் வேலை இல்லை என்றும் திருமணத்திற்கு பிறகும் திருந்தலாம் தவறில்லை என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெண் பேசிய வார்த்தையை கேட்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கணவரை திருத்துவது என்னுடைய வேலை இல்லை என்கிற அணியில் இருந்து அந்தப் பெண் பேசி இருக்கிறார். அந்த காலத்தில் வேண்டுமென்றால் திருமணத்திற்கு பிறகு ஆண்களை திருத்தலாம் என்கிற ஒரு மனநிலை இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. ஏனென்றால் இப்போது இரண்டு பேருமே அந்த மாதிரி ஒரே சூழ்நிலையில் தான் வளருகின்றனர் என்று கூறி இருக்கிறார்.

இது கஷ்டம் தான்
பொதுவாக அந்த காலத்தில் பெண்களை குடும்பத்திற்கு தகுந்த மாதிரி பக்குவப்படுத்தி வளர்த்திருப்பார்கள். ஆனால் இப்போது ஆண்கள் பெண்கள் இருவரும் ஒரே மனநிலையில் இருக்கின்றனர். நான் கூட வீட்டில் செய்யும் வேலைகளை என்னுடைய அப்பா இப்பவும் திட்டிக்கொண்டே இருக்கிறார். நானும் திருந்த வேண்டும் என்று நினைக்கிறேன். தினமும் சீக்கிரமாக எழுந்து காலேஜுக்கு சீக்கிரமாக கிளம்பி போக வேண்டும் என்று நினைக்கிறேன் .ஆனால் கடைசி வரைக்கும் அது முடியாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. கடைசி நொடியில் தான் நான் ஓடி சென்று பஸ்ஸில் இடம் பிடிக்கிறேன். அந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. இதில் நான் எப்படி இன்னொரு ஆணை திருத்த முடியும் என்று கேள்வி கேட்கிறார்.

என் இனமடா நீ
மீண்டும் அந்தப் பெண் பேசுகையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எடுக்கும் ஒரு உறுதிமொழி என்ன என்று கோபிநாத் கேட்கையில் அந்த பெண் என்ன திருத்துவதற்கே ஒரு ஆள் வேண்டும் அதில் நான் யாரை திருத்துவது என்று சொல்ல, கோபிநாத் அதை பார்த்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து என் இனமடா நீ.... அப்படியே சொல்லிவிட்டாய் என்று சந்தோஷப்பட்டு மீண்டும் சொல் என்று கேட்க அந்தப் பெண் மீண்டும், ரெண்டு பேரும் சேர்ந்து திருந்தி நல்லா வாழலாம் என்று சொல்கிறார். இந்த கலகலப்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications