சாந்தியின் கழுத்தை நெரித்த கடன்? கவுண்டமணியை திட்டிய நடிகை.. விமர்சனத்தை உடைத்த காமெடி கிங்: பிரபலம்
சென்னை: கவுண்டமணியின் சினிமா கேரியரையே புரட்டி போட்டது வைதேகி காத்திருந்தாள், வாழைப்பழ காமெடி இரண்டும்தான்.. ஆனால், காலம் கடந்து பார்க்கக்கூடிய பல காமெடிகள் அவருடையது இன்றும் உள்ளது.. அதிலும் முற்போக்கு கருத்து காமெடிகளும் பல சொல்லியிருக்கிறார் என்று பத்திரிகையாளர் சேகுவேரா பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன் கவுண்டமணி பற்றின சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "கடன் பிரச்சனையால்தான் கவுண்டமணி மனைவி இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அப்படியிருக்க வாய்ப்பில்லை..

இயற்கையாக வயது மூப்பு காரணமாக, நோய்வாய்ப்பட்டு அவர் இறந்திருக்கிறார்.. கவுண்டமணிக்கும், அவரது மனைவிக்கும 18 வயது வித்தியாசம் உள்ளது.. லேட்டாகத்தான் திருமணம் முடித்துள்ளார்.. மனைவியை காதலித்து திருமணம் செய்துள்ளதாக சொல்கிறார்கள். 2 மகள்கள் இருக்கிறார்கள்..
போராடி வென்றவர் கவுண்டமணி
சினிமாவில் போராடி வந்திருக்கிறார் கவுண்டமணி.. சினிமா பின்புலம் இல்லாமல் தன்னம்பிக்கை மட்டுமே வைத்து நடிக்க வந்தவர் கவுண்டமணி. 70களில் சினிமாவில் முகம் காட்ட துவங்கியிருக்கிறார்.. பிறகு 30 வருட காலம் சினிமாவில் வலுவான இடத்திலேயே இருந்தவர்.. அதிலும் 15 வருடம் காமெடி கிங் என்ற இடத்தை தக்க வைத்தவரும்கூட.
யாரை திட்டுவதாக இருந்தாலும் சரி, எந்த வசனங்களாக இருந்தாலும், எதை பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாக பேசிவிடுவார்.. 450 படத்தில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. இது மிகப்பெரிய சாதனை.. இதில் 10 படங்கள் ஹீரோவாகவே நடித்திருக்கிறார்..
தனிமை மிகக்கொடுமை
நடிகர் விவேக் இறந்தபோது, கவுண்டமணி ரொம்ப அதிர்ச்சி அடைந்தாராம். பல பேரிடம் என்னாச்சு? எப்படி இறந்தார்? என்று கேட்டு கொண்டேயிருந்தாராம். பெரும்பாலும் கவுண்டமணி மேடைகளில் ஏறியதில்லை. சர்ச்சைகளை தவிர்த்துவிடுவார்.. பேட்டிகளையும் தந்ததில்லை.. மிகவும் யதார்த்தவாதி..
இப்போது மனைவியை இழந்துள்ளது அவருக்கு மிகப்பெரிய இழப்புதான். 85 வயதில், இயல்பாகவே நடக்கிறார்.. மன உறுதியுடன் காணப்படுகிறார்.. வயது மூப்பு தனிமை என்பது கொடுமையானது.. அதிலும் மனைவியை இழப்பது கொடுமையானது. எந்த இடத்திலும் தன்னுடைய குடும்பத்தை அடையாளப்படுத்தியதில்லை.. அதை அவர் விரும்பவில்லை.
காமெடி நடிகைகள் புகார்
சிங்கமுத்துவுக்கும், வடிவேலுவுக்கும் இடையில் நடந்த பொருளாதார சர்ச்சைகள் போல, கவுண்டமணிக்கு எதுவும் யாரிடமும் பிரச்சனை கிடையாது. கால்ஷீட் சொதப்புவது, தயாரிப்பாளர்களை நோகடிப்பது, உட்பட சினிமாவில் நெகட்டிவ் பேச்சு கிடையாது.
ஆனால் சில நடிகைகள், குறிப்பாக காமெடி நடிகைகள் அவரை பற்றி பேசுவார்கள். அதுகூட யூடியூப்களில் இப்போதுதான் கவுண்டமணி மீது குற்றஞ்சாட்டி வருகிறார்கள். மற்றபடி பண மோசடி, ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் கவுண்டமணி மீது புகார்கள், குற்றச்சாட்டுகள் வந்ததில்லை,
அதேபோல, செந்திலுடன் நடிப்பதால்தான், கவுண்டமணிக்கு பெயர் கிடைக்கிறது என்ற விமர்சனங்கள் ஒருகட்டத்தில் வர ஆரம்பித்தன. உடனே இதையே சவாலாக எடுத்துக் கொண்டு, எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.. அதாவது, தன்னால் சோலோ காமெடியும் செய்ய முடியும் என்று நிரூபித்தார்.. இதனால் கவுண்டமணியின் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடந்த ஹீரோக்கள், டைரக்டர்கள் ஏராளம் உண்டு.. மக்களும் பாரபட்சமில்லாமல் கவுண்டமணியை ரசித்தார்கள்..
புரட்டிப்போட்ட படங்கள்
அவரது சினிமா கேரியரையே புரட்டி போட்டது வைதேகி காத்திருந்தாள், வாழைப்பழ காமெடி இரண்டும்தான்.. ஆனால், காலம் கடந்து பார்க்கக்கூடிய பல காமெடிகள் அவருடையது இன்றும் உள்ளது.. அதிலும் முற்போக்கு கருத்து காமெடிகளும் பல சொல்லியிருக்கிறார்..
ஒரேஒரு வருத்தம் என்னவென்றால், ஒத்தை ஓட்டு முத்தையா படத்தை எல்லாரும் அதிகம் எதிர்பார்த்தார்கள். ஆனால்,அது சூப்பர் பிளாப் ஆகிவிட்டது. இப்போது மனைவியை இழந்து வாடுகிறார்.. 85 வயதில் தனிமை யாருக்கும் கொடுமையே.. இதை எதிர்கொண்டு வரவேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications