இது அரசு பள்ளி டீச்சரா? அந்த பொண்ணு ஆபாசமா பேசுது.. 71 முதலிரவு வீடியோ.. நாசமாகுது சமுதாயம்: பிரபலம்
சென்னை: யூடியூப் (Youtube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram)-ஐ திறந்தாலே எண்ணற்ற ஆபாச வீடியோக்களை பார்க்க முடிகிறது. அதிலும் இளம்தம்பதிகளின் ரொமான்ஸ் அதிகமாக தென்படுகிறது. . சிலசமயம் எல்லைமீறின ஆபாசத்தையும் காண முடிகிறது. இதனால் ரீல்ஸ் பக்கம் போக முடியவில்லை என்பது பலரது குமுறலாக உள்ளது. அந்தவகையில், பலரது கண்டனத்துக்கு ஆளானவர்கள் இன்ஸ்டா தம்பதி நிகில்- லீனா (Nikhil- Lena) ஆவர்.. இவர்கள் உட்பட முகம் சுளிக்கும் வீடியோக்கள் குறித்து, வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கோபத்தையும், ஆதங்கத்தையும் பேட்டி ஒன்றில் கொட்டியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "சமீபத்தில்தான் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தேன், இந்த செல்போன் ஒரு நிர்வாண சாக்கடையாக மாறும்" என்றேன்.. அது இப்போதே நடந்துவிடும் போல தெரிகிறது.

இன்ஸ்டாவில் ஆட்டம்
முதலில் இன்ஸ்டாவில் ஆடிப்பாடி வீடியோ பதிவிட்டு பார்த்தார்கள்.. பிறகு சம்பந்தப்பட்டவர்கள் வீட்டுக்கே சென்று வம்பிழுப்பது போல வீடியோ போட்டு பார்த்தார்கள், தாலி கட்டி பார்த்தார்கள், இப்படியே படிப்படியாக வளர ஆரம்பித்துவிட்டது.
குட்டிமா என்ற பெண், பச்சை பச்சையா பேசுகிறார். கமெண்ட்டை படிக்கிறேன் என்று சொல்லி கெட்ட வார்த்தைகளை அப்படியே பேசுறாங்க.. யூடியூப் என்றால் உடனே எதையும் பேசலாமா? டிஆர்பிக்காக எதையும் செய்வதா?
ஹனிமூன் வீடியோ
ஹனிமூன் வீடியோவை பதிவிட்டவர்கள், மொத்தம் 21 வீடியோக்களை ஷெட்யூல் செய்து பதிவிட்டுள்ளார்கள்.. அந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்.. என்றோ நடந்த முதலிரவை இப்போது வெளியிட்டுள்ளார்கள்.. தம்பதி இருவருமே திட்டமிட்டே வீடியோ எடுத்திருக்கிறார்கள்.. முகம் நன்றாக தெளிவாக தெரியும்படி, புரொபஷனல் கேமராவை வைத்து படம் பிடித்திருக்கிறார்கள்.
உடனே ஏகப்பட்ட வியூவ்ஸ் கிடைக்கிறது, இதில் காசு சம்பாதித்து உடனே கார் கிப்ட் வாங்குகிறார்கள்.. இப்போது தமிழ்நாட்டில் தயாராக உள்ளதாம். அவங்களும் கார் வாங்க போறாங்களாம்.
போட்டோஷூட் விபரீதம்
இப்போது அடுத்த வீடியோவும் இன்ஸ்டா மோகம், ரீல்ஸ் மோகம், வியூவ்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது.. ரீல்ஸ்ஸுக்காக போட்டோ ஷூட் எடுத்து எத்தனையோ பேர் விபத்தில் சிக்கி கொள்கிறார்கள்..
நேற்றுகூட இரவில், அண்ணாநகரில் பைக் ரேஸ் நடந்தது.. போலீஸை பார்த்ததுமே பைக்கில் தப்பி பறந்துவிட்டார்கள்.. உடனே அவர்களை துரத்தி கொண்டு போலீஸ் ஓடுகிறது. ஒரு. ஆற்றல்மிக்க காவல்துறை, இந்த தறுதலைகள் பின்னாடியே ஓடிக் கொண்டிருந்தால் என்னாவது?
கிளாமர் பைக் பஞ்சர்
பிள்ளைகளுக்கு 4 லட்சத்துக்கு பைக் வாங்கி தர்றதே பெற்றவர்கள்தான்..நீயா நானாவில் ஒருவர் பேசுகிறார், கிளாமர் பைக் ஒன்று பஞ்சர் ஆகி நின்றுவிட்டது.. உடனே மகன் நடுரோட்டில் உட்கார்ந்து அழுதாராம்.. பெற்றவர்களும் ஆட்டோவில் சென்று மகனை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்களாம்.. அப்படியானால், அந்த பிள்ளையை இவர்கள் எந்த மனநிலைமையில் வளர்த்து வைத்திருக்கிறார்கள்?
சமுதாயத்தில் ஆபத்தானவர்கள்
உன் நண்பனை சொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர்.. அதுபோல, முதலிரவு வீடியோவை பதிவிட்ட தம்பதியை வைத்தே, அவர்களின் குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது.. இரு குடும்பத்தினரும் ஏதாவது நினைப்பார்களே? என்றுகூட தம்பதி அச்சப்படவில்லையே?
எப்போதுமே சமுதாயத்துக்கு பயப்படாதவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள்.. எந்த தப்பையும் துணிந்து செய்வார்கள்.. இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
டபுள் மீனிங் பேச்சு
இப்போதெல்லாம் டபுள் மீனிங் கிடையாது.. நேரடியாகவே பச்சையாக பேசிவிடுகிறார்கள்.. ஒரு சேனலில் பேட்டி எடுக்கும்போது நடிகை ஷகிலா கேட்கிறார், "உங்களுக்கு முதலிரவு எங்கே நடந்தது" என்று கணவனை கேட்கிறார்..
அதற்கு அவர் "சோளக்காட்டுக்குதான் கூட்டிட்டு போனேன் என்கிறார்.. உடனே ஷகிலா, "யார் முதலில் வெட்கப்பட்டது?" என்று கேட்கிறார்.. அதற்கு அந்த கணவர், "இருட்டில் வெட்கப்பட்டது யாரென்று தெரியவில்லை" என்கிறார்.. இது ஒரு கேள்வி? இது ஒரு பதிலா? இதெல்லாம் நல்லாவா இருக்கு?
முதலிரவு வீடியோ
திருச்சி சாதனா, ரவுடி பேபி சூர்யா, போல ஜேசுரதி, பிரக்யா, ஸ்நேகன், இவர்கள் எல்லாம் முதலிரவு வீடியோ போட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்..
இத்தனைக்கும் ஜேசுரதி ஒரு அரசு பள்ளி ஆசிரியை.. அவரை ஏன் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்யாமல் இருக்கிறது என்று தெரியவில்லை. ஒழுக்கத்தை கற்றுதரும் ஆசிரியையே இப்படி ஒழுங்கீனமாக இருந்தால், துறைரீதியான நடவடிக்கையை இந்நேரம் அவர்மீது எடுத்திருக்க வேண்டாமா? அவரிடம் படிக்கும் மாணவர்களின் நிலைமை என்னாவது?" என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications