ஜி பி முத்து கார் ஆக்சிடென்ட்.. அந்தப் பாலத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது.. எமோஷனல் வீடியோ
சென்னை: பிரபல யூடியூபராகவும், நடிகராகவும் இருக்கும் ஜி பி முத்து தன்னுடைய கார் விபத்தாகிவிட்டது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய கார் மேம்பாலத்தில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு பின்னாடி வேகமாக வந்த கார் ஒன்று தன்னுடைய காரில் மோதி விட்டது என்று அதில் கூறி இருக்கிறார்.

அதோடு அந்த இடத்தில் இருந்த ஒரு சிலர் தன்னிடம் தகராறு செய்ததாகவும் தன் மீது தப்பே இல்லை என்றும் அந்த வீடியோவில் ஜிபி முத்து கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிமுகமாகி சின்னத்திரை ரசிகர்களுக்கும் பரிச்சயமாகி இருந்தார். அதை தொடர்ந்து ஜிபி முத்துவுக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது பிஸியாக ஒரு நடிகராக மாறி இருக்கும் ஜி பி முத்து சின்னத்திரையிலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
விஜய் டிவியில் முக்கிய நபராக மாறி இருக்கும் ஜி பி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொண்டிருந்தார். ஆனாலும் வழக்கம்போல தன்னுடைய youtube சேனலில் லெட்டர் படிக்கும் வீடியோக்களும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போட்டு வருகிறார். பலர் பாசிட்டிவ் கமாண்டுகளால் பிரபலம் அடைந்திருந்த நிலையில் ஜிபி முத்து நெகட்டிவ் கமெண்ட்களால் இன்று இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்து இருக்கிறார்ஜிபி முத்து.
அதனாலயே ஜிபி முத்து மீது பலர் கோபத்தில் கமெண்ட்களை கொட்டுவதையும் பார்க்க முடியும். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜி பி முத்து தனக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு பதில் சொல்லி ஒரு வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி நிலையில்தான் இன்று தன்னுடைய யூடியூப் சேனலில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தான் மதுரையில் இருந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கும் போது மேம்பாலத்தில் ஒரு இடத்தில் தன்னுடைய கார் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார். நாங்கள் காரில் வந்து கொண்டிருக்கும் போது மேம்பாலத்தில் படம் வரைந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே பேரிங் கார்ட் வைத்திருந்தது.
ஆனால் அது அங்கே வைக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் உயரமான இடத்தில் தான் நின்று படம் வரைந்து கொண்டிருந்தனர். ஆனால் அங்கே ஒரு பேரிங் கார்ட் வைத்திருந்தது. அதனால் நாங்கள் மேலே காரை நிறுத்தி இருந்தோம். அப்போது எங்களுக்கு பின்னாடி இருந்து ஒரு கார் வேகமாக வந்து எங்க பின்னாடி இடித்து விட்டது.
அப்போது எங்க காரில் என்னோடு இருந்த ஆனந்த் உட்பட ஒரு சிலர் ஓடி சென்று அந்த காரில் இருந்தவர்கள் நிலைமை என்ன என்று பார்க்க சொன்னேன். அங்கு ஒரு கணவர், மனைவி, குழந்தை இருந்தனர். யாருக்கும் நல்ல வேளையாக பெரிய அளவில் அடிபடவில்லை. கார் மட்டும் பெருசாக அடிபட்டு இருந்தது.
அப்போது அவரும் நான் வேகமாக வந்தது தான் தப்பு மேம்பாலத்தில் கவனிக்காமல் வேகமாக ஏறிவிட்டேன் என்று பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் இரண்டு தரப்பினரும் சமரசமாக பேசிக் கொண்டிருக்கும்போது அங்கே இருந்த ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிதாக கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.
இது ரொம்பவே தப்பு சம்பந்தப்பட்ட நாங்க ரெண்டு பேரும் சமரசம் ஆகிவிட்டோம் ஆனால் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் சிலர் வீணாக பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அந்த வீடியோவில் ஜி பி முத்து கண்கலங்க எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications