GP Muthu: கோவிலை விட படிப்பு தானே முக்கியம்? உடன்குடியில் தினமும் சத்தமா பாட்டு போடுறாங்க.. ஜி.பி முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் ஜிபி முத்து இப்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் அவர் இன்று தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஆதங்கத்துடன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய ஊரில் ஸ்கூல் பக்கத்தில் இருக்கும் கோவிலில் பாட்டு போடுவதால் மாணவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார்.

சிலருடைய வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதுபோல ஒருவர்தான் ஜி பி முத்து. இவர் ஆரம்பத்தில் தச்சு தொழில் வேலையை பார்த்து வந்தார். அந்த நேரத்தில் தான் கொரோனா காலகட்டம் வந்தது. அப்போது டிக்டாக் ஆக்டிவாக இருந்த சமயத்தில் அதன் மூலமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

GP Muthu vijay tv bigg boss

தான் செய்யும் வேலைகளை வீடியோவாக வெளியிட்டு, பிறகு தன்னுடைய நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பதையும் வீடியோவாக வெளியிட்டார். பிறகு இவருக்கு பலர் கேலி செய்து, கூரியர் அனுப்ப ஆரம்பித்தார்கள், லெட்டர் போட ஆரம்பித்தார்கள். அதை படித்து வீடியோவாக வெளியிட்டார். இதன் மூலமாக அவர் ஊரில் இருக்கும் தபால் துறைக்கு அதிக வேலையும் கிடைத்தது.

சோஷியல் மீடியாவில் பலருக்கும் தெரிந்த முகமாக ஜிபி முத்து மாறிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல நடிகர்கள், நடிகைகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் ஜிபி முத்துவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனாலும் சில வாரங்களிலேயே தன்னால் இந்த நிகழ்ச்சியில் இருக்க முடியவில்லை என்று சொல்லி வீட்டிற்கு திரும்பிவிட்டார். அதற்கு பிறகு அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அவருடைய ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அடிக்கடி இவருடைய பெயர் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் ஜிபி முத்து இன்று தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய உடன்குடி ஊரில் உள்ள கோவிலில் போடப்படும் பாடல் சத்தத்தால் அருகேயுள்ள சல்மா பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு கஷ்டமாக, இருப்பதாக கூறி இருக்கிறார். என் வீட்டு பக்கம் இருக்கிற ஸ்கூலுக்கு பக்கத்துல கோவில் இருக்கு.

Bigg Boss:
அந்த கோவிலில் தினமும் 7 மணிக்கு பாட்டு போட ஆரம்பிச்சாங்கன்னா சாயங்காலம் வரைக்கும் போடுறாங்க. இதனால ஸ்கூல் பசங்களோட நிலைமை என்ன ஆகிறது? இப்போ எக்ஸாம் வேற நடக்குது. இந்த மாதிரி நேரத்துல பாட்டு போடறதால பசங்க சங்கடப்படுவாங்க. சவுண்டு குறைத்து வச்சா தான் என்ன? கோவிலை விட படிப்பு தானே முக்கியம்? என்று அந்த வீடியோவில் ஜிபி முத்து ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு உரிய அதிகாரிகள் ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்று பலர் ஜிபி முத்துக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேநேரம், அந்த கோவில் நிர்வாகிகளுக்கும் ஜிபி முத்துவுக்கும் ஏற்கனவே வழக்கு நிலுவையிலுள்ளது. அதை மனதில் வைத்து இப்படி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார் மற்றபடி காலை முதல் இரவு வரை யாரும் பாடல் ஒலிபரப்பமாட்டார்கள் என்று மறு தரப்பு கூறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+