Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜாயிண்ட் அக்கவுண்ட், ஜவாப்தாரி.. ஜெயம் ரவி தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் நோட்டமிட்டது யார்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியரின் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், பலரும் ஆர்த்திக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.. 2 குழந்தைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி, மனைவியுடன் ஒன்றுசேர வேண்டும் என்று நலம்விரும்பிகள் சோஷியல் மீடியாவில் உரிமையுடன் சொல்லி வருகிறார்கள்.. மற்றொருபுறம், ஜெயம் ரவிக்கு ஆதரவு கூடிவருகிறது.. அந்தவகையில், மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "ஜெயம் ரவிக்கு நிறைய டார்ச்சர்கள் மாமியார் வீட்டில் தரப்பட்டன.. உதாரணத்துக்கு கெஸ்ட் ஹவுஸில் யார் இருக்கிறார்கள்? யாராவது அங்கே தங்கியிருக்கிறார்களா? வீடியோ காலில் ரூமை காட்டு? என்றெல்லாம் வாட்ச்மேனிடம் கேட்டிருக்கிறார்..

ரூமை வீடியோ கால் எடுக்கப்பட்டபோது, ஜெயம் ரவியும் அங்குதான் இருந்திருக்கிறார்.. ஒருவேளை கணவர் மீது சந்தேகம் இருந்தால், தனிப்பட்ட முறையில் அவரை வீட்டில் அழைத்து பேசியிருக்கலாம்.. தன்னுடைய கணவர் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பதில் தவறில்லை.. அதுக்காக 3வது நபரை விட்டு, கணவரை சந்தேகப்படுவதா?

சந்தேகப்படுவதா?

கொடைக்கானலில் அவுட்டோரில் ஜெயம் ரவி தங்கி இருக்கும்போது, ரூமில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டு மேக்கப்மேனிடம் வீடியோ எடுக்க சொல்லியிருக்கிறார்கள். ஜெயம் ரவி என்றில்லை, எந்த நபராக இருந்தாலும் இப்படியொரு நடவடிக்கைக்கு கோபம் வரவே செய்யும். அனைவருக்குமே சுயமரியாதை இருக்கத்தான் செய்யும்.. ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை, ஆர்த்திக்கு ஆரம்பத்தில் இல்லை..

3வது நபரை ஜெயம் ரவி அறிமுகப்படுத்தியதும்தான், தன்னைவிட்டு எல்லாமே பறிபோவதால், இப்போது ஆர்த்தி பதறுகிறார்.. ஜெயம் ரவியை சந்தேகப்படுவதற்கு முன்பு, அவரை இழிவுபடுத்துவதற்கு முன்பு, அவரை டேமேஜ் செய்வதற்கு முன்பு, ஆர்த்தியின் அம்மாவே மகளுக்கு அறிவுரை சொல்லியிருக்கலாம். இப்படியெல்லாம் கணவனை சந்தேகப்படக்கூடாது என்று மகளுக்கு அட்வைஸ் தந்திருக்கலாம்.

அட்வைஸ் தந்திருக்கலாம்

ஒரு வருடத்துக்கு முன்பு ஆர்த்தி தந்திருந்த ஒரு பேட்டியில், "என் கணவர் என் மீது உயிராக இருக்கிறார்" என்று சொல்லியிருக்கிறார். அந்த பேட்டி இன்னமும் இணையத்தில் உள்ளது.. அப்படிப்பட்ட ஜெயம் ரவி வீட்டை விட்டு போய்விட்டார் என்றால், அதற்கு காரணம் யார்? கணவன் வீட்டை சார்ந்து வாழாமல், தன்னுடைய அம்மா வீட்டிலேயே , அம்மாவை சார்ந்து வாழ்வதற்கு எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்? விலை உயர்ந்த கார், உடைகளுடன் வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதெல்லாம் ஜெயம் ரவி சம்பாதித்த காசுதானே?

"எனக்கென்று தனியாக பேங்க் அக்கவுண்ட் இல்லை.. ஜாயின்ட் பேங்க் அக்கவுண்ட்டாகத்தான் உள்ளது.. இருவரின் பெயரில்தான் வீடும் உள்ளது.. பஸ்ஸுக்கு கூட காசில்லை" என்றுதான் ஜெயம் ரவியே அன்று சொல்லியிருந்தாரே?

இருளில் தள்ளியது யார்

தன்னை வைத்து படம் எடுக்கும்படி மாமியாரிடம் ஜெயம் ரவி சொல்லவேயில்லை.. மருமகனை வைத்து படம் எடுத்து தோல்வியடைந்துவிட்டால், அடுத்த படத்தை ஏன் அவரை வைத்தே எடுக்க வேண்டும்? "நான்தான்" என்ற ஈகோ பிரச்சனையே தம்பதி விரிசலுக்கு காரணம்" என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு காலம் ஜெயம் ரவி இருந்தது இருட்டில்தான்.. அவரை இருளில் தள்ளியது யார்? அதனால்தான் வெளிச்சத்தை தேடிபோய்விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+