சைந்தவி மட்டுமல்ல! பாடும் போது மேடைக்கு வந்த மகள்.. ஜிவி பிரகாஷ் செய்த செயல்.. நெகிழ்ந்த ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியும் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் நடந்த இசை கச்சேரியில் கலந்து கொண்ட போது இவர்களுடைய குழந்தை ஜிவி பிரகாஷ் பாடும்போது மேடைக்கு வந்திருக்கிறது. அப்போது ஜிவி பிரகாஷ் செய்த செயல் குறித்து இணையத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சமீபத்தில் வெள்ளித்திரையில் பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்திகளை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர். இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டார்களா? என்று பல ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Television GV Prakash Saindhavi

குழந்தைகளின் நலன் கருதி மீண்டும் இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருவதை பார்த்து இருப்போம். ஆனால் விவாகரத்து என்பது சம்பந்தப்பட்ட இருவருடைய தனிப்பட்ட விஷயம்.

அதுபோல சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி சைந்தவி விவாகரத்து செய்தியை அறிவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த தம்பதி பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் திருமணம் முடிந்து11 வருடத்தில் விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஜிவி பிரகாஷ் ஆடுகளம் படத்தில் இசையமைத்தது பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதுபோல ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் சைந்தவியும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சைந்தவியின் பாடல்கள் உணர்வு பூர்வமாக மனதை மயக்கும் வகையில் இருக்கும்.

Television GV Prakash Saindhavi

அதற்கு உதாரணமாக பல பாடல்களை சொல்லலாம். விழிகளில் ஒரு வானவில், ஆருயிரே ஆருயிரே, மனசெல்லாம் மழையே, நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள, யார் இந்த சாலை ஓரம், விண்மீன் விதையில், பிறை தேடும் இரவிலே என்று பல பாடல்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தபோது நாங்கள் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறி இருந்தோம் ஆனால் எங்களுடைய திருமண பந்தத்தில் இருந்து இப்போது விலகுகிறோம். ஆனாலும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருப்போம்.

பிறை தேடும் இரவிலே! நீண்ட நாள் பிறகு ஒரே மேடையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி! நெகிழ்ந்த ரசிகர்கள்
எங்களின் தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிடாதீர்கள் என்று சொல்லி இருந்தார்கள். திருமணத்தில் இருந்து பிரிந்து இருந்தாலும் இவர்கள் இருவரும் மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதுவும் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசை கச்சேரியில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் இவர்கள் இருவரும் சேர்ந்து "பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறார்" என்ற பாடலை பாடியது பெரிய அளவில் வைரலாகி வந்தது.

Television GV Prakash Saindhavi

அதே நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் ஜி.வி பிரகாஷ் பாடிய யாத்தே யாத்தே பாடலை மேடையில் ஜிவி பிரகாஷ் பாடிக்கொண்டிருக்கும் போது அவருடைய மகள் மேடைக்கு வர வேண்டும் என்று அடம்பிடிக்க சைந்தவியும் ஏற்றிவிட்டு இருக்கிறார். பாடல் பாடிக்கொண்டே தன்னுடைய மகளையும் ஜி வி பிரகாஷ் கவனித்திருக்கிறார். என்னதான் இவர்கள் பிரிந்து இருந்தாலும் குழந்தை வளர்ப்பில் இருவரும் ஒற்றுமையாக இருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+