பிறை தேடும் இரவிலே! நீண்ட நாள் பிறகு ஒரே மேடையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி! நெகிழ்ந்த ரசிகர்கள்
சென்னை: இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் தாங்கள் பிரிய போவதாக அறிவித்த பிறகு ஒரே மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பாடிய பாடல் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சினிமா பிரபலங்கள் பலர் திடீரென்று விவாகரத்து அறிவித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் பிரிய மாட்டார்கள் என்று பார்த்து ரசித்த பிரபலங்கள் திடீரென்று பிரிவதை பார்த்து ரசிகர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அந்த வரிசையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தாங்கள் இருவரும் பிரிவதை அறிவித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பல வருடங்களாக காதலித்து திருமணம் ஆன நிலையில் 11 வருடங்களில் பரஸ்பரமாக பிரியப் போகிறோம் என்று முடிவு எடுத்து அதை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவிற்காக கொடுத்திருக்கிறார்.
ஆடுகளம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பலராலும் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் இருந்து பெரிய அளவில் இவருக்கு பிரபலம் கிடைத்தது. அதுபோல ஜிவி பிரகாஷ் இசை அமைப்பில் சைந்தவியும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சைந்தவியின் குரல் மற்றும் பாடலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சைந்தவி பாடிய பல பாடல்கள் மன கவலைகளை கரைத்து விடும். சில பாடல்கள் காதலை மேலும் பெருக்கெடுக்க வைக்கும். அதோடு ஒரு சில உணர்வுபூர்வமான பாடல்கள் மட்டும் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்ற எள்ளுவய பூக்கலயே பாடல் கண்ணீரை வரவழைக்கும். சுறா படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூர் ஜில்லா காரி பாடல் கேட்கும் போது டான்ஸ் ஆட வைக்கும்.
அதுபோல மதராசபட்டினம் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆருயிரே ஆருயிரே" என்ற பாடல் காதலை பீல் பண்ண வைக்கும், அதுபோல "தெய்வத்திருமகள்" திரைப்படத்தில் இடம் பெற்ற "விழிகளில் ஒரு வானவில்" என்ற பாடல், சகுனி திரைப்படத்தில் இடம் பெற்ற "மனசெல்லாம் மழையே", சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இடம் பெற்ற "நெஞ்சுக்குள்ள", தலைவா திரைப்படத்தில் இடம் பெற்ற "யார் இந்த சாலை ஓரம்", தெகிடி திரைப்படத்தில் இடம்பெற்ற "விண்மீன் விதையில்" இப்படி பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அதுபோல சின்னத்திரையிலும் பல சீரியலுக்கு சைந்தவி பாடல்கள் பாடி இருக்கிறார். ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்திருந்தாலும் இருவரும் பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் குறை சொல்லி வருவதை பார்த்திருப்போம். ஆனால் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் தம்பதி எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லியது கிடையாது.
அதுபோல தங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு கூட அடிக்கடி பதிலடி கொடுத்து விடுகிறார்கள். இந்த நிலையில் தான் இவர்கள் இருவரும் டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசை கச்சேரியில் ஒன்றாக கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மயக்கம் என்ன திரைப்படத்தில் இடம்பெற்ற "பிறை தேடும் இரவிலே.. எதை தேடி அலைகிறார்" என்ற பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பாடி இருக்கிறார்கள்.
இந்த வீடியோ கிளிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் இந்த பாடலை கேட்கும் போதே அவ்வளவு அழகான காதல் தெரிகிறது.. ஆனால் இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று வருத்தமாக அதிக கமாண்டுகள் வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications