பிரபல டிவி நடிகை சங்கீதா கர்ப்பம்.. 47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி.. குவிகிறது வாழ்த்துக்கள்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.. இதையடுத்து, கிங்ஸ்லிக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சினிமாவில் குரூப் டான்சராக கேரியரை துவக்கியவர் ரெடின் கிங்ஸ்லி... ஆனால், நடனத்தில் தனக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகி, பொருட்காட்சிகளை நடத்தும் காண்ட்ராக்டர் பணிக்கு சென்றார்.

வருமானம்: இதில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சிகளின் காண்ட்ராக்டராக கிங்ஸ்லி உருவெடுத்தார். அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானமும் கிடைக்க துவங்கியது.
பிறகு, நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம், வெள்ளி திரைக்குள் நுழைந்தார்.. டாக்டர் படத்திலும், கிங்ஸ்லி நடித்திருந்தார். தன்னுடைய வித்தியாசமான காமெடி, டயலாக் மாடுலேஷன் போன்றவற்றில் ரசிகர்களின் தனி கவனத்தை பெற துவங்கினார் கிங்ஸ்லி. இதனால், அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் கமிட் ஆகி, பிஸியான காமெடி நடிகராக உருவானார் கிங்ஸ்லி.

நடிகை சங்கீதா: 46 வயது வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த ரெடின் கிங்ஸ்லி, கடந்த வருடம்தான் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.. மாஸ்டர் திரைப்படத்தில், விஜய்க்கு உதவி செய்ய வரும் டாக்டராகவும், ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கேரக்டரிலும் சங்கீதா நடித்திருக்கிறார். சுல்தான், வலிமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
ரெடின் கிறிஸ்த மதத்தை சேர்ந்தவர், சங்கீதா இந்து மதத்தை சேர்ந்தவர். எனினும், 2 முறைப்படியும் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில், சங்கீதா 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாழ்த்துக்கள்: இந்த தகவலை தம்பதி இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியலில் இருந்து சங்கீதா திடீரென விலகியிருப்பதால், அவர் கர்ப்பமாக இருப்பதால்தான், சீரியலிலிருந்து விலகியிருக்கலாம் என்று சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரபரக்கின்றன.. இதையடுத்து, 47 வயதில் அப்பாவாக போகும் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக சங்கீதாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பதாக தகவல்கள் பரபரத்தன.. ஆனால் அவள், தன்னுடைய சகோரியின் குழந்தை என்று சங்கீதா விளக்கம் தந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications