மோகன்லால் தந்த எம்புரான் பிச்சிக்கிட்டு ஓடுது! படம் துண்டாக வெட்டியும் சக்சஸ்.. பிருத்விராஜ் தில்லு
சென்னை: வடமாநிலத்தில் உள்ள பாஜகவுக்கு எதிரானவர்களும் , எம்புரான் படத்தை திரண்டு வந்து பார்க்கிறார்கள். எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டாலும் சரி, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும், எம்புரான் படம் ஓடியே தீர வேண்டும் என்பதில் பிருதிவிராஜூம் உறுதியாக இருக்கிறார்" என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், மோகன்லால் நடித்த எம்புரான் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "எம்புரான் படத்துக்கு சென்சாரில் 24 வெட்டுக்கள் விழுந்தன.. சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருந்ததால்தான் 24 வெட்டுகள் சென்சாரில் விழுந்தது. அப்படியிருந்தும் சர்ச்சைகள் அதிகமாகி கொண்டேயிருக்கிறது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்தான், குஜராத்தில் மோடியை முதலமைச்சராக்கியது.. மோடியை இந்த நாட்டின் பிரதமராக்கியது. இதுதான் அந்த படத்தின் கதை. பில்கிஸ் பானு போலி என்கவுண்டர் உட்பட பல்வேறு விஷயங்களை துணிந்து சொல்லக்கூடிய தைரியம் மலையாளிகளுக்கு மட்டுமே உள்ளது. இந்தியாவில் மதச்சார்பற்ற அரசியல் எப்படி இருக்கிறது என்பதை, தன்னுடைய எம்புரான் படத்தில் பிரிதிவிராஜ் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.
குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரை
அதேசமயம், முல்லைப்பெரியாறு அணை உடைக்கப்படுகிறது என்று கூறி தமிழர்களுக்கு பெருந்துரோகம் செய்திருக்கிறார்.. இதற்கு தமிழர்கள் பலமாக எதிர்க்கணும். ஆனால், நம்ம தமிழர்களுககு சொரணை இல்லை.. தமிழர்களுக்கு எதிராக இவர்கள் படம் எடுக்க காரணமே, தமிழர்கள் அடிமுட்டாள்கள், போராட முன்வர மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான்.
சீமான் இதற்கு எதிர்ப்பு காட்டினாராம்.. அவர் என்ன வகையான எதிர்ப்பு காட்டினார்? நிர்மலா சீதாராமன் கிட்ட உட்கார்ந்து பேரம் பேசிட்டு இருக்கார்.. பாஜகவுடன் கூட்டணி வைக்க 300 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி கொண்டிருக்கிறார்.. சாட்டை, சேட்டை என்று குண்டுச்சட்டிக்குள்ளே சீமான் குதிரை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான். எம்புரான் படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு என்றால், தியேட்டர்களெல்லாம் இந்நேரம் மூடப்பட்டிருக்க வேண்டாமா?
கோடி கோடியாய் சொத்து
எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் கோபாலன்.. அவர் கோகுலம் சிட்பன்ட்ஸ் & பைனாஸ், கோகுலம் பிரைவேட் லிமிடட், கேரளாவின் பிரபலமான கலர்ஸ் சேனல், துபாயில் கார்பரேட் அலுவலகம் என அனைத்துக்குமே பிரபலமானவர் கோகுலம்.. அன்று சைக்களில் மருந்துகளை விற்ற முகவர் இந்த கோபாலன். ஆனால், இன்று பல லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார்.
இவருடைய நிறுவனத்திலும், பிருத்விராஜ் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை ரெயிடு நடத்தப்படுகிறது.. ஏனென்றால், பாஜகவின் கோல்மால்களை படமாக தொகுத்து தந்துள்ளார் பிருத்திவிராஜ்.. பாஜகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்.. கேரளா முழுக்க ஆர்எஸ்எஸ், பாஜக, சங்க பரிவார அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
பினராயி விஜயன் ஆதரவு
ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு வசூலில் மிகப்பெரிய சாதனையை எம்புரான் படைத்துள்ளது.. இதற்கு காரணம்,
கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம்... கல்வியில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.. பாஜகவை எதிர்க்கக்கூடிய கம்யூனிஸ்ட்கள், எம்புரான் படத்தை தயாரித்து, ஆதரித்து, முதலமைச்சர் பினராய் விஜயன் பாதுகாப்பில் வெளியிட்டதால், கேரளாவின் அத்தனை தியேட்டர்களிலும் சக்கை போடு போடுகிறது.
வரும் 2026ம் ஆண்டு, ஆர்எஸ்எஸ் இயக்கம் துவங்கி 100 வருடம் நிறைவடைகிறது.. அந்த நேரத்தில் இந்தியாவை, "இந்து நாடு" என்பதை அறிவிக்க பாஜக தயாராகி, அதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்காகவே தென்னிந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறைக்கப்படுகின்றன.. வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதால், அங்கு நாடாளுமன்ற தொகுதி அதிகப்படுத்துகிறது..
பிச்சிக்கிட்டு போகுது
இதையடுத்தே இந்து நாடு என்று அறிவிக்க பாஜக தயாராகி கொண்டிருக்கிறது. இதைதான் எம்புரான் படத்தில் வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் டைரக்டர் பிருதிவிராஜ், தயாரிப்பாளர் கோபாலன் நிறுவனங்களில் ரெயிடு நடத்தி அச்சுறுத்தல் தரப்படுகிறது. ஆனால், பிஜேபி இப்படி அழுத்த அழுத்த, எம்புரான் படம் பிச்சிக்கிட்டு போகுது..
வடமாநிலத்தில் உள்ள பாஜகவுக்கு எதிரானவர்களும் இந்த படத்தை திரண்டு வந்து பார்க்கிறார்கள். எத்தனை துண்டுகளாக வெட்டப்பட்டாலும் சரி, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும், எம்புரான் படம் ஓடியே தீர வேண்டும் என்பதில் பிருதிவிராஜூம் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications