Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதடு விரிந்து.. கண்ணில் தெறித்த சோகம்.. விம்மித் தணிந்த நெஞ்சு.. என்னாச்சு ஹரிப்ரியா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகாக இருப்பவர்களுக்கு நடிக்கத் தெரியாது.. நடிக்கத் தெரியும் பலரிடம் அழகு இருக்காது.. ஆனால் எல்லாம் ஒன்றாக அமைந்த ஒரு தேவதனை என்றால் அது ஹரிப்ரியா இசை என்று தாராளமாக சொல்லலாம்.

டிவிக்கு கிடைத்த சூப்பர் நடிகை என்று ஹரிப்பிரியாவைச் சொல்லலாம். அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில், சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிப்ரியா கண்களில் கவலையோடு வெளியிட்டு இருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்களும் கலங்கிப்போய் இருக்கிறார்களாம்.

ரொம்பவே ஏக்கத்தை வெளிப்படுத்தும் கண்கள், விம்மித் தணிந்த நெஞ்சு, உதடு ஏதோ சொல்ல வந்து புன்னகைத்து விட்டுப் போகிறது. இப்படி ஒரு பாவனையுடன் அவர் போட்டுள்ள அந்த வீடியோ, வைரலாகி வருகிறது.

அம்மாஞ்சி

அம்மாஞ்சி

கனா காணும் காலங்கள் சீரியலில் விஷ்ணுவுடன் ஜோடியாக நடித்திருப்பார் இசை. இந்த சீரியலில் இவரது பிரியா என்கிற கேரக்டர் பெயரை விடவும் விஷ்ணு கூப்பிடும் அம்மாஞ்சி என்னும் பெயர் தான் நிலைத்து நின்றது அந்த அளவிற்கு க்யூட்டான அழகான பெண்ணாக களமிறங்கி இருந்தார். அவருடைய ஆசை நடிப்பை விடவும் டைரக்டராக வேண்டும் என்பதுதானாம். அதனால்தான் விஷூவல் கம்யூனிகேஷன் எல்லாம் படித்து இருந்தாராம்.

முதல் சீரியல் ஹிட்

முதல் சீரியல் ஹிட்

இசைக்கு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் இவருடைய அம்மாதான் இந்த கனா காணும் காலங்கள் சீரியலுக்கு ஃபாம் பில் பண்ணி அனுப்பி இருந்தாங்களாம். அதன்பிறகு அங்கிருந்து கால் பண்ணி கூப்பிட்ட பிறகுதான் இவர் ஆடிஷன் கலந்துகொண்டு செலக்ட் ஆகி இருக்கிறார். முதல் சீரியலில் இவர் எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பிடித்திருக்கிறார். இந்த சீரியல் அந்த நேரங்களில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

மேற்கு மாம்பலத்தில் காதல்

மேற்கு மாம்பலத்தில் காதல்

இப்ப வரைக்கும் 90ஸ் கிட்ஸ் களின் ஃபேவரட் சீரியலாக இந்த சீரியல் இருக்கின்றது. இதற்குப்பிறகு ஜீ தமிழில் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை என்னும் சீரியலில் நடித்தார் .இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விக்னேஷ் நடித்து இருந்தார் .அவர் வேறு யாருமில்லை வாணி ராணி சீரியலில் கௌதம் கேரக்டரில் நடித்து இருப்பவர் தான் .இவர்கள் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தனர்.

 காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

அந்த நிலையில்தான் விக்னேஷ் வீட்டில் திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து அவர் ஹரி பிரியாவிடம் நாம ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேட்டிருக்கிறார் .உடனே அவரும் சரி என்று சொல்லி இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடித்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. வாழ்க்கையில் மட்டுமல்லாமல் இவர்களுடைய வேலைகளிலும் இருவரும் வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தார்கள் .

காதல் போனது

காதல் போனது

இப்ப வரைக்கும் ஹரிப்பிரியா 12 சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கௌதமும் சீரியல்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் சாய் பிரித்வி என்னும் அழகான பையன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் டிக் டாக் போன்ற மியூசிக்கலியில் பிசியாக இருந்து கொண்டு இருந்தார்கள். அடிக்கடி இவர்கள் வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது. இவர்களுடைய வீடியோக்களை பார்த்து பல ரசிகர்களும் சூப்பர் ஜோடி என்று கூறும் அளவிற்கு செம ஜாலியாக இருந்தார்கள் .

கண் பட்டது

கண் பட்டது

யார் கண் பட்டதோ, இவர்களின் வாழ்க்கையில்.. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் . தற்போது மகன் சாய் ப்ரித்வியுடன் ஹரிப்பிரியா தனியாக வசித்து வருகிறார். அதுபோல விக்னேஷும் தனது மகனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என்று கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் .இந்த மாதிரி இவர்கள் இருவரும் தனியாக பிரிந்து இருக்கும் நிலையில் ஹரிப்பிரியாவிற்கும் சன் டிவியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருக்கும் காதல் என்று ஒரு வதந்தி பரவி வந்துகொண்டிருக்கிறது.

கண்மணி வில்லி

கண்மணி வில்லி

அதுபோல விக்னேஷ்க்கும் அவருடன் பொன்மகள் வந்தாள் என்னும் சீரியலில் நடித்த மேக்னாவிற்கும் காதல் என்றும் வதந்தி வந்து கொண்டிருக்கிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது ஹரிப்ரியா கண்மணி சீரியலில் வளர்மதி கேரக்டரில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நாளா இவரை சீரியல்களில் நல்ல கேரக்டரில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் இந்த சீரியலில் வில்லியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவரும் கூட எல்லா சீரியல்களிலும் ஒரு போல நடித்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு போரடித்து விடும்.

மைனட் ரிலாக்ஸ்

மைனட் ரிலாக்ஸ்

கொஞ்சம் வித்தியாசமாக ட்ரை பண்ணி பார்த்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் . ஆனால் சில சமயங்களில் இந்த மாதிரி வில்லியாக நடிப்பது மனதுக்கு ரொம்பவே அழுத்தத்தைக் கொடுக்கிறது .நம்மளுடைய ரியல் லைப்பில் இருக்கும் பிரச்சனைகளை விடவும் இந்த ரீல் லைப்பில் full-time பிரஷரில் கோபமாக இருந்து கொண்டு இருப்பதால் இந்த சூட்டிங்கை விட்டு வெளியே வந்த பிறகும் இதற்குள்ளே மைண்ட் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதனால் மனதளவில் அதிகமாக உளைச்சலாக தான் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

ரசிகர்களுக்குப் பிடிச்ச இசை

ரசிகர்களுக்குப் பிடிச்ச இசை

ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதும் ஒருவர் அனைவருக்கும் பிடித்த மாதிரி இருக்க முடியாது என்பதுபோல இவரை சில நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் . அது இவரை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளதாக கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . அதுவும் வைரலாக வெளியே வந்தது.

ஏக்க வீடியோ

ஏக்க வீடியோ

தற்போது இவர் அஜித் படத்தில் இடம் பெற்ற " அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது.. அடி இப்போதும் நிறம் மாறாமல் என் நெஞ்சில் நிற்கிறது" என்னும் பாடலுக்கு போஸ் கொடுத்துள்ளார் இசை.. இது ஏதோ பாடலுக்கு போஸ் கொடுத்தது போல தெரியவில்லை. மாறாக கண்களில் ஏக்கம் தவழ, உதட்டில் ஏதோ சொல்ல வருவது போல துடித்து, நீண்ட பெருமூச்சு விட்டு நெஞ்சு விம்மித் தணிந்து என்று அனுபவித்து வெயிட்டுள்ளார். இது இப்போது வைரலாகி விட்டது.

என்ன கவலையோ இசைக்கு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+