சங்கீதாவை பிரிந்தாரா விஜய்? அரசியலுக்கு கணவன் வந்தது பிடிக்கலயா? எல்லாமே பொய்! அருமை தம்பதி: பிரபலம்
சென்னை: சங்கீதா - விஜய் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்விக்கு ஏ.எல்.எஸ்.புரெடக்ஷன் நிறுவனத்தைச் சேர்ந்தவரும், கவிஞர் கண்ணதாசனின் மருமகளுமான ஜெயந்தி கண்ணப்பன் பதிலளித்துள்ளார்.. அத்துடன், நடிகர் விஜய்யின் அரசியல் உள்ளிட்டவை பற்றியும் சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
WoW Tamizhaa என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜெயந்தி கண்ணப்பனிடம், விஜய் அரசியலுக்குள் வருவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லையா? விஜய் மனைவி சங்கீதாவுக்கு விருப்பமில்லையா? விஜய் - சங்கீதா இருவரும் பிரிந்துவிட்டார்களா?" என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு ஜெயந்தி கண்ணப்பன், "விஜய் அரசியலுக்கு வருவதை யாருமே எதிர்க்கவில்லை.. அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.. விஜய் என்ன சிறுபிள்ளையா? உலகம் தெரியாதவரா? திரைப்பட உலகத்தில் இத்தனை வருடகாலம் இருக்கிறார்.. எத்தனையோ விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார்.. சினிமா என்பதே ஒரு கடல்.. இத்தனை வருடம் சினிமாவில் பயணித்ததால், அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும்.
விஜய் அரசியல் வருகை
அதேபோல விஜய் ஒன்றும் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்துவிடவில்லை. அவர் போகாத ஊரே, கிராமமே கிடையாது.. நாம் ஒரு கருத்தை சொன்னால், அது மக்களை சென்றடையும் என்று நம்புகிறார். ஆந்திராவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, சினிமாக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.. இரு மாநிலத்திலுமே சினிமாவிலிருந்து முதலமைச்சர்கள் அதிகமாக கிடைத்திருக்கிறார்கள்.
எனவே, விஜய் சுயமாக சிந்திக்கக்கூடியவர்.. யாராக இருந்தாலும், ஒருவரின் குடும்பத்தில் ஓரளவுக்குதான் தலையிட முடியும். அரசியலுக்குள் போக வேண்டாம் என்று அவரை குடும்பத்தில் யாருமே சொன்னதில்லை.. சங்கீதாவுக்கு அவர் அரசியலுக்கு சென்றது பிடிக்கவில்லை என்று சொல்வதையும் ஏற்க முடியாது. ஏனென்றால் சங்கீதா மிகவும் அமைதியான, அழகான குடும்ப தலைவி.. தன் கணவனை பேணி காத்தது எல்லாம் எங்களுக்கு தெரியும்.
அறிவார்ந்த அழகான பெண்
தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர் சங்கீதா.. அவரால் அந்த குடும்பத்தில், மாமியார், மாமனார் என யாருக்குமே தொந்தரவு கிடையாது. இந்த அரசியல் விவகாரம் என்றில்லை, விஜய் சினிமாவில் நடித்து கொண்டிருந்த காலத்திலேயே, இந்த படத்தில் நடிங்க, அந்த படத்தில் நடிக்காதீங்க, அந்த ஹீரோயினுடன் நடிக்காதீங்க, இந்த டைரக்டரிடம் நடிங்க, என்றெல்லாம் சொன்னதே கிடையாது. அதேபோல விஜய்யின் பட கதை விஷயத்திலும் தலையிட்டதே கிடையாது. சங்கீதா ரொம்பவும் அமைதியானவர்.. பேசவே யோசிப்பாங்க..
விஜய்க்கு நடந்த திருமணம்
எங்கள் வீட்டு கொலுவுக்கு வருடா வருடம் ஷோபா, சங்கீதா வருவார்கள்.. ஷோபா கொலுவில் கட்டாயம் ஒரு பாட்டு பாடிவிட்டு செல்வார்.. விஜய்க்கு கல்யாண நாளிலிருந்தே அப்படித்தான் நாங்கள் அவரை பார்த்து வருகிறோம்.. அவரது பேச்சு, உடை, பிறருக்கு மரியாதை தருவது எல்லாமே நாங்கள் பார்த்து வியந்த விஷயம்.. ஷோபாவின் சகோதரர் எஸ்என் சுரேந்தரர் மகளை, விஜய்க்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் விரும்பியதாக சொல்வார்கள்.. அப்படி எதுவும் இல்லை..
ஒரே மகன் என்பதால், தன்னுடைய மகனுக்கு எது பிரியமோ அதையே அவரது பெற்றோர் செய்தார்கள்.. சங்கீதாவை பெரியவர்கள் பார்த்துதான் விஜய்க்கு திருமணம் செய்து வைத்தார்கள். சுரேந்தர், ஷோபா எல்லாம் ஒன்றாகவே வளர்ந்தவர்கள்.. இப்போதுகூட சுரேந்தர் மகள் திருமணமாகி துபாயில் செட்டில் ஆயிருக்காங்க. அவரது வீட்டிற்கும் ஷோபா சென்று தங்கியிருந்துவிட்டு வந்தார்.
வெளிநாட்டில் சங்கீதா
இப்போது சங்கீதா வெளிநாட்டில் இருக்கிறார்.. தன்னுடைய குழந்தையின் படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறார்.. வெளிநாடு என்றாலும், இந்தியா வந்து செல்வது இப்போது எல்லாருக்கும் எளிதாகிவிட்டது.. அதற்காக விஜய் - சங்கீதா பிரிந்து விட்டார்கள் என்பதெல்லாம் பொய்யான செய்தி.. மனைவி, குழந்தையை தள்ளி வைக்கணும் என்ற எண்ணம்கூட விஜய்க்கு துளியும் கிடையாது. அப்படிபப்பட்ட குடும்பமும் அது கிடையாது. விஜய், சங்கீதா 2 பேரும் படித்தவர்கள்.. பக்குவம் நிறைந்தவர்கள்.
அதேபோல, மகன் அரசியலுக்கு வருவதை பெற்றோர் விரும்பவே செய்கிறார்கள்.. ஏனென்றால், பெற்றோர் சமூக சிந்தனை உள்ளவர்கள்.. தன்னுடைய மகன் மக்களுக்கு நல்லது செய்யட்டுமே என்று நினைக்கக்கூடியவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications