சலங்கை ஒலி படம் பார்த்தீர்களா? அது நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர்தானே?
சென்னை: சலங்கை ஒலி படம் பார்த்தீர்களா, அதில் கமலை பார்க்க ஷைலஜாவுடன் வருவது நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகனா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பழைய கருப்பு வெள்ளை படத்தில் சிவாஜியையும், கள்ளபார்ட் நடராஜனையும் பார்க்கும் போது ஒரே ஆளோன்னு தோணும். ஓமக்குச்சி நரசிம்மனையும், தயிர்வடை தேசிகனையும் குழப்பிக் கொண்டது உண்டு.

ரேடியோவில் திரைச் சித்திரம் கேட்கும் போது லதாவின் குரலும், ஸ்ரீப்ரியாவின் குரலும் ஒன்று போலவே தோன்றும். ராஜேந்திரகுமார் எழுத்தாளரும், ஐ.வி.சசி என்கிற இயக்குனரும் ஒரு ஆளோன்னு தோணும்.
வேறொரு விஷயம் ரொம்ப நாளாகவே நிறைய பேரு ஒரு குழப்பத்தில் எழுதுவதைப் பார்க்க முடிகிறது.
சலங்கை ஒலி படத்தில் S.P.ஷைலஜா ஆடிய முறை பற்றி கமல் எழுதி விடுவார். அப்போது ஷைலஜா கமலை கேட்க பத்திரிக்கை அலுவலகத்துக்கு வருவார். அப்போது அவருடன் ஷைலஜாவின் காதலனும் வருவார். கமல் கூட கதகளி, குச்சிபுடி என பல வித நடன விதங்களை ஆடிக்காட்டி முடிப்பார்.
இந்தக் காட்சி படத்தில் அழகாக இருக்கும். இந்தக் காட்சியில் ஷைலஜாவோடு வருவது நடிகை லக்ஷ்மியின் முன்னாள் கணவர் மோகன் என்றே பலரும் எழுதுகின்றனர்.
மோகன் படத்தில் இருக்கிறார் என்பது உண்மை. கமலையும், ஜெயப்ரதாவையும் சேர்த்து வைத்து விட்டு கனடா போகப்போவதாக சொல்கிறாரே அவர் தான் மோகன்.
ஆனால் இரு கதாபாத்திரங்களும் உருவ ஒற்றுமை ஒன்று போல் இருப்பதால் இவர் தான் மோகன் என நினைத்துக் கொள்கின்றனர். மோகன் படத்திலும் நாயகியை பிரிந்து செல்வது தான் அவருக்கு எழுதிவைத்த தலையெழுத்து போல... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications