"கண்ணம்மா கம்முனு கட" சம்சாரம் அது மின்சாரம் நடிகை இளவரசியின் மகளை பார்த்துள்ளீர்களா?
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் இளவரசியின் குடும்பத்தினரை பார்த்துள்ளீர்களா?
விசுவின் திரைக்கதை வசனம், நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சரோஜினி கேரக்டரில் நடித்திருந்தவர் நடிகை இளவரசி. இவருடைய குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குடும்பத்தில் நடக்கும் உண்மையான பிரச்சினைகளை மையப்படுத்தி 1980-களில் குடும்ப திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்தனர். இந்த படங்களை இயக்கி வந்தவர் விசு. இவர் இயக்கத்தில் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் தேசிய விருதை பெற்றது.
இந்த படத்தில் விசு, கமலா காமேஷ், ரகுவரன், லட்சுமி, சந்திரசேகர், மாதுரி, கிஷ்மு, மனோரமா, டெல்லி கணேஷ், காஜா ஷெரீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் குடும்ப உறவுகளுக்குள் இந்த படத்தில் காட்டிய பிரச்சினைகள் நிகழ்ந்தன.
புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் ஊடல், கூடல் என கூட்டு குடும்பத்தில் இருக்க முடியாது என்பதால் அதிலிருந்து ஒரு பிரச்சினை கிளம்பும். காசு விவகாரத்தில் அண்ணன் தம்பிகளுக்கிடையே நடக்கும் பிரச்சினை, கஞ்ச தனத்தை காட்டும் மகன், பொறுப்பில்லாத மகன், அப்பா சொல் பேச்சை தட்டாத மகன் இப்படியாக குடும்பத்தில் ஒரே இடத்தில் பல்வேறு கேரக்டர்கள் இருக்கும்.
வீட்டு பணிப்பெண்ணாக வரும் மனோரமாவுக்கு இளவரசியின் மாமனார் கிஷ்முவுக்குமான சண்டை காமெடி கலந்து இருக்கும். தனது மாமனாரை எதிர்த்து பேசும் போதெல்லாம் இளவரசி, "கண்ணம்மா" என அழைக்க, அதாவது ரொம்ப ஓவரா பேசாதே என்ற தொனியில் அவர் அழைப்பார். ஆனால் ஃப்ளோவில் பேசிக் கொண்டிருந்த மனோரமாவோ "கம்முனு கட" என்பார்.
இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வென்றது. இந்த படத்தில் அம்மையப்ப முதலியார் கேரக்டரில் விசு நடித்திருப்பார். அவருடைய மகளாகத்தான் நடிகை இளவரசி நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் 2001 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான சீறிவரும் காளை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருந்தார். இவர் கோபாலகிருஷ்ணன் என்ற வங்கி அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இளவரசியை போலவே பெண் குழந்தையும் ஒரு நாட்டிய கலைஞராவார். அண்மையில் தனது மகளுக்கு அரங்கேற்றத்தை நடத்தி முடித்திருந்தார். இவருடைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications