சித்ராவின் மரணம்.. மர்ம முடிச்சுகள் அவிழுமா... கவலையில் ஹேமா!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வந்த சித்ரா தற்போது உயிரோடு இல்லை என்பதை அவருடைய ரசிகர்களும் அவர் கூட நடித்த நடிகர்களும் நம்ப முடியாமல் தான் கஷ்டத்தில் இருந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவருடைய இழப்பு எதனால் எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாத புதிராக தான் இருந்து வருகிறது.
காவல்துறையும் விசாரணை நடத்திக் கொண்டிருந்தாலும் நேற்றுதான் சித்ராவின் கணவரான ஹேமந்தை கைது செய்திருக்கிறார்கள்.

இன்னும் துக்கம் போகலை
சித்ரா இறந்துவிட்டார் என்னும் செய்தி வெளியானதிலிருந்து அவருடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே சித்ரா அதுவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்று உறுதியாக கூறி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை தரப்பில் இருந்து இது தற்கொலைதான் என்று கூறியிருக்கின்றனர்.

மன அழுத்தமே காரணமா
ஆனாலும் அதற்கு காரணம் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமும் ஒன்று என்று கூறியிருக்கிறார்கள். இதனை இன்பமும் நம்ப மறுக்கும் அவருடைய தோழிகளான பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா இன்னும் சித்ரா இறப்பில் உள்ள உண்மையான காரணம் வெளியே வரவில்லை என்று கூறியிருக்கிறார்.

கடைசி புரோகிராம்
சித்ரா கடைசியாக விஜய் டிவியில் இரண்டு ப்ரோக்ராம் நடித்திருக்கிறார் .அதில் ஒன்று ஹேமா மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் நடிகைகள் அனைவரும் இணைந்து நடித்த ஸ்டார் மியூசிக் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

அவரா செய்தார்
ஆனால் சித்ரா இதை செய்திருக்கவே மாட்டார் என்று ஹேமா உறுதியாக கூறி வந்த நிலையில் ஹேமந்த்தை கைது செய்யப்பட்ட பிறகு சித்ராவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டு இருக்கிறார். பெரும் நம்பிக்கையில் இதை அவர் போட்டுள்ளார் போல.

வெங்கட் சோகம்
நேற்று சித்ராவின் கணவரை கைது செய்த பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா வாக நடித்த வெங்கட்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார் .அதில் இது உனக்கானது அல்ல என்று தெரிந்து கொண்டால் இது உனக்கு தகுதியானது இல்லை என்று தெரிந்திருந்தால் அதிலிருந்து நீ வெளியே வந்திருக்கலாம்.

இப்படி முடிக்கலாமா
28 வருடங்கள் வாழ்க்கையை இப்படி முடித்து இருக்க வேண்டாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து விட்டு திடீரென்று இப்படி செய்து விட்டாயே என்று வருத்தத்தோடு கூறியிருந்தார். அதுபோலத்தான் பல நடிகர்களும் இன்ஸ்டாகிராமில் சித்ரா வுக்காக போஸ்ட் போட்டு வருகிறார்கள். இதில் எல்லோரை விடவும் அதிகமாக சித்ரா சூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய நேரத்தை செலவிடுவது ஹேமாவுடன் தானாம் .

ஏத்துக்க முடியலை
அதனால்தான் ஹேமாவால் அவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அது மட்டுமல்லாமல் ஹேமாவும் அவரது கணவரும் சித்ராவின் இழப்பிற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றுதான் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார்கள் இதை பார்த்த சித்ராவின் ரசிகர்களும் ஹேமாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications