Naam Iruvar Namakku Iruvar Serial: இதோ.. இங்கனக்குள்ள ஒரு தங்கைக்கோர் கீதம்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அண்ணன் முன்னால் தங்கையை சித்ரவதை செய்யும் தங்கைக்கோர் கீதம் காட்சிகள் ஆரம்பமாகி உள்ளது.
கார்த்திக் எதற்காக ஆனந்தியை கல்யாணம் செய்துக்க கூடாது என்று மாயன் நினைத்தானோ அது இன்று அவன் கண் முன்னால் நடந்து அவனை வெறுப்பேத்தி உள்ளது.
மாயன் நெட்டப்பு சொட்டப்பு என்று காமெடி செய்த காலம் போய் இப்போது தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் அரங்கேற துவங்கி உள்ளது,

500 வது எபிசோட்
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் 500 வது எபிசோட் கொண்டாட்டங்கள் அண்மையில்தான் கொண்டாடி முடித்தார்கள். அப்படி வெற்றி நடை போட்டு வரும் அந்த சீரியலில் மாயன், அரவிந்த் என்று இரட்டை வேடத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார் நடிகர் செந்தில்.

வித்தியாசம் காண்பித்து
இரட்டை வேடத்துக்கு நன்றாக வித்தியாசம் காண்பித்து சின்னத் திரைக்கு மிக அருமையாக நடித்து தனது வேடத்தை வித்தியாசப்படுத்தி காண்பித்து இருக்கார் செந்தில். இதற்காக இவரை பாராட்டலாம்.. இவர் பேசும் மதுரை தமிழ் கூட மிகவும் அழகு, இனிமை.

கண்ணுக்கு அழகு
சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் கண்ணுக்கு அழகான இடங்களாக இருக்கிறது. நன்றாக மெனக்கெட்டு படமாக்கி இருக்கிறார்கள். எந்த இடத்திலும் மதுரைத் தமிழ் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் காதல், கல்யாணம் என்று போன கதையில் இப்போது அண்ணண் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் பிடம்பிடித்து இருக்கின்றது.

சென்ட்மென்ட் மாயன்
மாயனின் தங்கை ஆனந்தி கண் முன்னால் கார்த்திக்கால் கணவன் கொடுமைக்கு ஆளானதையும், மாயன் தங்கைக்காக கண்ணீர் வடிப்பதையும் தங்கைக்கோர் கீதம் போல சென்ட்டிமென்ட் காட்சிகளாக்கி இருக்கிறார்கள். மாயனுக்கு இப்போது சென்ட்டிமென்ட் காலம் போலும்! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications