பிரியா பவானி சங்கருக்கு முதல் நாள் செய்தி வாசிக்கும் போது நடைபெற்ற கொடுமை..இப்படியெல்லாமா பண்ணுவாங்க
சென்னை: செய்தி வாசிப்பாளராக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திரைப்பட கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது தனக்கு நடந்த கசப்பான நினைவு பற்றி பேசியிருக்கிறார்.
முதல் நாளில் தான் செய்தி வாசிப்பாளராக பணியாற்றும்போது அந்த இடத்தில் தனக்கு நடந்த எதிர்பாராத நிகழ்வு பற்றி ப்ரியா பவானி சங்கர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இளைஞர்களை கவர்ந்த தருணம்
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பிரியா பவானி சங்கர் அந்த நிகழ்ச்சி மூலமாக தனக்கு கிடைத்த வாய்ப்பினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்த கல்யாண முதல் காதல் வரை என்னும் சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து வந்தார். இந்த சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் ஹோம்லியான லுக் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டது. அதுவும் இளைஞர்களை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதனாலே இளைஞர்கள் பலருடைய ப்ரொபைல் பிக்சராக பிரியா பவானி சங்கரின் புகைப்படம் தான் இடம்பிடித்தது.

மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகம்
இந்த நிலையில் அவர் நடித்து வந்த முதல் சீரியலில் பாதியிலே இவருக்கு வெள்ளி திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துவிட்டது. சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி திரையில் ஜெயித்தவர்கள் ஒரு சிலர் தான் அந்த வரிசையில் பிரியா பவானிசங்கர் இருந்து வருகிறார். இவர் சீரியலை விட்டு விலகி வெள்ளி திரையில் பல ஹிட் திரைப்படங்களில் கலந்து கொண்டிருக்கிறார். குணச்சித்திர வேடத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் தற்போது முன்னணி கதாநாயகியாகவே மாறிவிட்டார். மேயாத மான் எனும் திரைப்படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

கல்யாணம் எப்போது
பிரியா பவானிசங்கருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தற்போது தான் புதியதாக வீடு ஒன்றை கட்டியிருந்தார். தன்னுடைய காதலனுடன் தன்னுடைய வீட்டைப் பற்றியும் இதற்காக பல வருடங்கள் தான் ஆசைப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு கிடைத்து விட்டது என்று நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டிருந்தார். காதலனோடு அடிக்கடி சுற்றிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கரிடம் எப்போது திருமணம் என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார் அதில் பேசிய வீடியோவை ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

முதல் நாள் நடந்த கொடுமை
அந்த வீடியோவில் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக சேர்ந்த முதல் நாளில் அவர் பேசுவதற்கு தயாராக இருக்கும்போது அங்கே ஒரு சாமியார் ஒரு சொம்பில் தண்ணியை வைத்துக்கொண்டு அங்கே இங்கே என எல்லா இடமும் தெளித்துக் கொண்டிருந்தாராம். அந்த தண்ணீர் பிரியா பவானி சங்கர் மேலேயும் பட்டிருக்கிறது. கேமரா முன்னாடி மேக்கப் போட்டு இருந்த இவருடைய முகத்தில் தண்ணீர் பட்டதால் அதுவேர்க்க தொடங்கி விட்டதாம். அதனால் கடுப்பான ப்ரியா பவானிசங்கர் கேமரா மேன் இடம் என்ன இது என கேட்க உங்களை தீய சக்திகள் அண்டாமல் இருப்பதற்காக இப்படி செய்கிறார்கள் என கிண்டலாக பதில் பேசி இருக்கிறார் .முதல் நாள் செய்தி வாசிக்க போகிறேன் ஆனால் என்னை பார்த்து தீய சக்தி என்று சொல்லிவிட்டாரே என்று கோவப்பட்டாராம். இது செய்தி வாசிப்பாளராக கிடைத்த எனக்கு மறக்க முடியாத அனுபவம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications