கணவரை மாமா என்றழைக்க.. அவர் சுவீட்டின்னு கொஞ்ச.. ஆஹா.. பிரமாத கோடீஸ்வரி!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியில் ராதிகா சரத்குமார் நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளி பெண் கவுசல்யா கோடீஸ்வரி ஆவதற்கான கேள்வி என்னவாக இருக்கும்?
பொங்கல் நாட்களில் சிறப்பு நிகழ்ச்சியாக கோடீஸ்வரி ஒளிபரப்பானது. சரத்குமார் தனது மகள் வரலட்சுமியுடன் கலந்துக்கொண்டனர்.
ரம்யா கிருஷ்ணன் ஒரு நாளும், பாக்யராஜ், பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு நாளும் என்று கலந்து கொண்டனர்.

வழக்கம் போல
கோடீஸ்வரி நிகழ்ச்சி பொங்கலை அடுத்து இன்று வழக்கம் போல தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களை வைத்து துவங்குகிறது. அதன்படி இன்றும் நாளையும் கவுசல்யா இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கிறார். இவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத் திறனாளி பெண்.

உங்கள் ஆசை
ராதிகா கவுசல்யாவிடம் உங்கள் ஆசை என்ன என்று கேட்டபோது, என் குழந்தையின் வாய்ஸ் எப்படி இருக்கு என்று கேட்க வேண்டும் என்று ஆசை.. ஆனால், முடியலை என்று சின்ன வருத்தத்தை முகத்தில் காண்பித்து பேசினார். கவுசல்யா கோடீஸ்வரி என்று சொன்னதும் இனிமையாக இருந்தது.

15 வது கேள்வி
14 கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு கவுசல்யாவுக்கு 15 வது கேள்வி கோடீஸ்வரிக்கான கேள்வி. பணத்தை ஜெயித்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, தான் படித்த நாகர்கோயில் வாய்பேச முடியாத காது கேளாதோர் பள்ளிக்கு உதவ வேண்டும் என்று சொன்னார்.

முதல் கோடீஸ்வரி
கவுசல்யாவுக்கான கோடீஸ்வரி கேள்வி எது என்று இன்று இரவு கலர்ஸ் தமிழ் டிவி பாருங்கள். கவுசல்யா பேசும் அழகையும் பாருங்கள். கணவரை இவர் மாமா என்று திரும்பிப் பார்த்து அழைக்க, கணவரோ சுவீட்டி என்று அழைக்க..
ஆஹா.. ஆஹா பிரமாதம்! உங்க மேல அவருக்கு ரொம்ப லவ் என்று ராதிகா சொன்னார்.. கவுசல்யாவும் ஆமோதித்து ஆமாம் என்றார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications