லியோ படத்தை இணையதளங்களில் வெளியிடக்கூடாது.. தடை விதித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: லியோ திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்கள், மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் 'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை வெளியாகும் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி அரசு அறிவித்தபடி காலை 9 மணிக்கு தொடங்கப்படும் என்று லியோ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று லியோ தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் காலை 7 மணி காட்சிக்கு அனுமதிக்கோரி உள்துறை செயலாளரிடம் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உங்கள் மண்டையில் ஏதாவது இருக்குதா! விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் வெடித்து பேசிய மேயர் பிரியா! -
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
விஜய் தவெகவின் ‘வெற்றி டிவி’? டெல்லியில் டிரேடுமார்க் விண்ணப்பம்! களமிறக்கப்படும் பிரம்மாண்ட திட்டம் -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications