சபலத்தால் சரிந்த சாம்ராஜ்ஜியம்.. மொட்டை மாடி மூட்டையில் அதென்ன? ஓட்டல் தொழிலில் உச்சம் பெற்ற ஓனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 20 வருடங்களுக்கு முன்பு சரவண பவனில் சாப்பிடுவதை கவுரவமாக நினைத்தனர்.. இலையை போட்டுட்டு 10 வகையான ஐட்டங்களை வைத்துவிட்டு, அதற்குபிறகுதான் சாப்பாடே போடுவார்கள்.. அதிலும் சூடாகவே சாப்பாடு இருப்பது போன்றவை எல்லாம் மக்களை கவர்ந்திழுத்தது. கூட்டம் அலைமோதியது.. இதனால் மற்ற ஓட்டல்கள் இழுத்து மூடப்படும் நிலைமை வந்தது" என்று ஓட்டல் சரவண பவன் உரிமையாளர் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பாண்டியன்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன், "Dosa King என்று அழைக்கப்பட்ட சரவணபவன் அண்ணாச்சி, சாதாரண டேபிள் கிளீனராக வாழ்க்கையை துவக்கியவர். ஒரு தொழிலில் ஊருடுவி சென்று பார்க்க வேண்டும் என்ற திறமையை இயற்கையிலேயே கொண்டிருந்தவர்..

Hotel Saravanaa Bhavan annachi Jeevajothi

முதன்முதலாக சென்னை கேகே நகரில் சரவண பவன் துவங்கினார்.. ஆனால் முதல் ஒரு மாதம் ஓட்டல் ஓடவில்லை.. கட்டிட வாடகை தர முடியவில்லை என்பதால், தொடர்ந்து நடத்துவதா? என்று தெரியாமல் குழம்பினார்..

புது ஃபார்முலா கொண்டு வந்த அண்ணாச்சி

அப்போதுதான், காய்கறி வேண்டுமானால், விவசாயிகளிடமே நேரடியாக வாங்குவது, அரிசியை மண்டிக்கே சென்று வாங்குவது, மாம்பழத்தை சேலத்துக்கே சென்று வாங்குவது என்றெல்லாம் புது ஃபார்முலாவில் இறங்கினார்.. இதுதான் சரவணபவன் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியம் உருவாவதற்கு மூலமாகும்.. காமன் கிச்சன் ஓட்டலில் வைக்கப்பட்டது. பிறகு, ஒவ்வொரு கிளைகளாக பெருகியது.. இந்த வியாபார தந்திரம் நுணுக்கமானது, அவருக்கு வெற்றியை தந்தது..

20 வருடங்களுக்கு முன்பு சரவண பவனில் சாப்பிடுவதை கவுரவமாக நினைத்தனர்.. இலையை போட்டுட்டு 10 வகையான ஐட்டங்களை வைத்துவிட்டு, அதற்குபிறகுதான் சாப்பாடே போடுவார்கள்.. அதிலும் சூடாகவே சாப்பாடு இருப்பது போன்றவை எல்லாம் மக்களை கவர்ந்திழுத்தது. கூட்டம் அலைமோதியது.. இதனால் மற்ற ஓட்டல்கள் இழுத்து மூடப்படும் நிலைமை வந்தது..

தந்தை ஸ்தானத்தில் திருமணம்

யாராவது வேலை கேட்டு சென்றாலும் உடனே தரமாட்டாராம் அண்ணாச்சி.. தொடர்ந்து 10 முறை சென்றால்தான், அந்த நபரை கூப்பிட்டு பேசுவார்.. பிறகு வேலையே தருவார்..

ஆனால், ஜோதிட பழக்கத்துக்கு ஆளானவர் அண்ணாச்சி.. இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டால், வியாபாரம் சிறப்பாகும் என்று சொல்லவும்தான், அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது..

தன்னிடம் வேலைபார்க்கும் ஊழியரை, சிங்கப்பூர் கடைக்கு இன்சார்ஜாக அனுப்பி வைத்தார்.. அப்போது அந்த ஊழியர், தன்னுடைய மகளுக்கு நல்ல வரனாக பார்த்து, தந்தை ஸ்தானத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்..

ஆனால், பிரின்ஸ் என்பவரை அந்த பெண் விரும்பினார்.. இதனிடையே அந்த பெண்ணை 3வது திருமணம் செய்ய ஜாதகம் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஜோதிடர் அண்ணாச்சியிடம் சொன்னார்.. இதற்கு பிறகுதான், அண்ணாச்சி, ஆட்களை வைத்து, பிரின்ஸை கடத்தி கொடைக்கானலில் எரித்து கீழே தள்ளிவிட செய்தார்..

மொட்டை மாடியில் ரெய்டு வந்த அதிகாரிகள்

இந்த கொலை வழக்கில் அண்ணாச்சி கைது செய்யப்பட்டு, குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டது.. உச்சநீதிமன்றம் சென்றும், தண்டனை உறுதி செய்யப்பட்டது. சிறைக்குள்ளேயே இறந்துபோனார் அண்ணாச்சி.

பல கோடி வீட்டில் இருப்பதாக தகவல் செல்லவும், கேகே நகர் வீட்டுக்கு ரெயிடு வந்தது.. வீட்டை சல்லடையால் துளைத்தெடுத்து தேடினார்கள்.. ஒரு பைசா அங்கே கிடைக்கவில்லை.. பிறகு ஒரு அதிகாரி, இந்த வீட்டில் கள்ளப்பணம் பதுக்கி வைக்கப்படவில்லை என்று முருகன் போட்டோவை உரிமையாளரை சத்தியம் செய்ய சொன்னார்..

தேங்காய் மட்டை மூட்டைகள்

இதைக்கேட்டு அதிர்ந்துபோன அண்ணாச்சி, எனக்கு பணம் முக்கியமில்லை, எம்பெருமான் முருகன்தான் முக்கியம், திருச்செந்தூரார் மீது சத்தியம் செய்ய மாட்டேன். இந்த வீட்டின் 4வது மாடியில் தேங்காய் மட்டையில் பணத்தை கட்டி வைத்திருக்கிறேன் என்றார்.. அதன்படியே தேங்காய் மட்டைகளுக்குள் பல கோடி ரூபாய்களை அதிகாரிகள் பறிமுதல் சென்றனர்..

மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருக்கும், இந்த தேங்காய் மூட்டைகளை வைத்து முருகனுக்கு யாகம் வளர்ப்பாராம் அண்ணாச்சி.. கடைசியில் 20 மூட்டைகளிலும் பணம் கொட்டியது.. அந்த பல்லாயிரம் கோடியை அன்று அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. கோடிக்கணக்கான சொத்து இருந்தும், பெண் பித்து, ஜோதிட பித்து, மூடநம்பிக்கைகளில் சிக்கி சிறையிலேயே இறந்துபோனார் அண்ணாச்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+