எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்.. இதற்குக் காரணம் இதுதான்.. ஆலியா கூறிய "ஆரோக்கிய குறிப்பு”
சென்னை: நடிகை ஆலியா மானசா தன்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு உடல் எடை கூடியதை எப்படி குறைத்தார் என்று தற்போது கூறி இருக்கிறார்.
ஒரே மாதத்தில் சுமார் 10 கிலோ தன்னால் உடல் எடையை குறைக்க முடிந்தது என்று பலருக்கும் தைரியமூட்டும் விதமாக ஆலியா மானசா சில தகவல்களை கூறி இருக்கிறார்.
நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே தவிர, செயலில் இறங்கவில்லை. ஆனால் ஆலியா மானசா செய்திருக்கும் செயலை கேட்டால் வியப்பாகத்தான் இருக்கிறது.

ராஜா ராணி செம்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த சீரியலின் முதல் பாகத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் ஆலியா மானசா. முதல் சீரியலில் இவருடைய பெயர் பலருக்கும் தெரியாத அளவில் இருந்தாலும் இவர் சின்னத்திரையின் செம்பா என்று செல்லமாகவே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தான் அந்த முதல் சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் குழந்தை
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி, பல நடிகைகள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தாலும், அடுத்த குழந்தைகள் பற்றிய பேச்சு பல வருடங்களுக்கு வேண்டாம் என்று தள்ளிப்போட்டு வருகிறார்கள். உடனே குழந்தைகள் பெற்றுக் கொண்டால் தங்களுக்கு மார்க்கெட் போய்விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ஆலியா மானசாவிற்கு ரசிகர்களில் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு இருந்த நேரத்திலே அவர் முதல் குழந்தைக்கு தாயாக மாறிவிட்டார். முதல் குழந்தை திருமணமான சில மாதங்களில் கர்ப்பமாகி பெற்றெடுத்து விட்டார்.

இரண்டாவது குழந்தை
பொதுவாகவே பெண்கள் குழந்தை பெற்ற பிறகு முக அழகு உடல் அழகு முழுவதுமாக மாற்றமடைந்து விடும் அது அனைவருக்கும் பொருத்தமானது தான். அந்த வரிசையில் ஆலியா மானசாவும் இருந்து வந்தார். ஆனால் சில மாதங்கள் கழித்து அவருக்கு மீண்டும் ராஜா ராணி சீசன் 2வில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே தன்னுடைய உடல் எடையை விடாமல் உடற்பயிற்சி, டயட் இருந்து குறைத்து அனைவருக்கும் வியப்பை கொடுத்தார். அடுத்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சில மாதங்களில் மீண்டும் கர்ப்பமாக செய்தியை கூறி ஒரு ஆண் குழந்தையும் பெற்று எடுத்தார்.

மீண்டும் பழைய நிலையில்
அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு தன்னுடைய உடல் ஆரோக்கியத்தையும் பேணி இப்போது மீண்டும் பழைய செம்பாவாக மாறி இருக்கும் ஆலியா மானசா பலருக்கும் வியப்பாக இருந்து வருகிறார். ஆலியா மானசா இந்த அளவிற்கு அடுத்தடுத்து தன்னுடைய உடலை குறைப்பதற்கு அவர் டயட் மற்றும் உடற்பயிற்சியை தீவிரமாக செய்ததுதான் காரணம் என்று கூறுகிறார். அதில் தன்னுடைய ரசிகர்களுக்கும் பயன்படும் விதத்தில் சில தகவல்களையும் கூறி இருக்கிறார்.

10 கிலோ எடை குறைப்பு
அதில் குழந்தை பிறந்த ஒரு சில மாதங்களுக்கு டயட் பற்றி எந்த பிளானும் பண்ணவில்லை. குழந்தைக்கு ஃபீட் பண்ண வேண்டும் என்பதற்காக இருந்தோம். அதற்கு பிறகு ஒரு மாதத்திற்குள் நான் 10 கிலோவை குறைத்தேன். நான் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு 65 கிலோவில் இருந்தேன் பிறகு 55 கிலோவிற்கு வந்துவிட்டேன். அதற்கு காரணம் காலையில் சுடுதண்ணியில் சோம்பு, வெந்தயம் எல்லாம் போட்டு ஒரு டம்ளர் குடிப்பேன். அதே தண்ணி தான் அன்று முழுக்கவே நான் குடித்துக் கொண்டே இருப்பேன். தண்ணீர் அதிகமாகவே குடிப்பேன். தண்ணீர் குறைவாகிவிட்டால் நம்முடைய உடலில் உஷ்ணம் அதிகமாகி அது முகத்தில் பருக்களை கொண்டு வந்து விடும். அதனால் அந்த ஹீட்டான தண்ணியாக இருந்தாலும் நான் அதிகமாக குடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் காரணமாம்
அதைத்தொடர்ந்து எக்சைஸ் ஒர்க் அவுட் எல்லாம் செய்து விட்டு வந்து பேரிச்சம் பழம் மில்க் ஷேக் குடிப்பேன், அது ஸ்வீட் லெஸ் ஆகத்தான் குடிப்பேன். அது எப்படியும் ஒரு கால் லிட்டர் குடிப்பேன். அதற்குப் பிறகு ரிலாக்ஸா கொஞ்ச நேரம் இருப்பேன். அதற்குப் பிறகு மதியத்தில் ப்ரூட் பால் சாப்பிடுவேன். அதில் எல்லாவிதமான ஃப்ரூட்ஸும் இருக்கும். எல்லா பழங்களும் சேர்த்து கொஞ்சம் சேர்த்து ஒரு டைம் சாப்பிடுவேன். ஜூஸாக குடிக்காமல் நான் ஃப்ரூட்ஸ் ஆக தான் சாப்பிடுவேன். அதற்கு பிறகு ஈவினிங் ஏதாவது வெஜிடபிள் வைத்து சாலட் சாப்பிடுவேன். அதையும் கொஞ்சம் வேகவைத்து சாப்பிடுவேன். நைட் டின்னருக்கு முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் எடுத்து அதில் ஆம்லெட் அதை எடுத்து சாப்பிடுவேன். பொதுவாக டயட் இருக்கும்போது சாப்பிடலாம் ஆனால் நம்ம உடம்புக்கு தேவையான நியூட்ரிஷன் எல்லாம் கிடைக்கிற மாதிரி சாப்பிட வேண்டும். அதிலும் ஒயிட் எல்லாமே நீக்கிவிட வேண்டும். அரிசி, உப்பு, சர்க்கரை போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டாலே ஆரோக்கியம் தான் என்று கூறி இருக்கிறார்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications