எண்ணி 30 நாளில் நீயா வீட்டை விட்டு போவேன்னு சொல்றானே.. எப்படி மனசு வருது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் எப்போதும் போல நால்லாத்தான் இருக்கு. முதலில் ஹீரோயின் மாறினாங்க...அப்புறம் ரெண்டு வில்லிகள் மாறினாங்க..

இதனால் ஆரம்பத்துல மக்களுக்கு கொஞ்சம் ஏத்துக்க முடியாமத்தான் இருந்துச்சு.இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமா அம்பிகா அவங்க கேரக்டர்ல நச்சுன்னு உட்கார்ந்தாங்க.. நாயகி தொய்வில்லாம போயிகிட்டு இருந்துச்சு.

இப்போ எல்லாரும் அந்தந்த கேரக்டருக்கு செட்டாக நாயகி சீரியலை மக்கள் விரும்பி பார்க்கறாங்க. ஆசைப்பட்டு செழியனை கல்யாணம் செய்துகிட்டவ கண்மணி. இன்னும் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழலை.

முருங்கை மரம்

முருங்கை மரம்

செழியனுடன் எப்படியாவது சேர்ந்து வாழணும்னு நினைக்கறா கண்மணி. கண்மணியை தான் கெடுத்துட்டதா நாடகமாடி அவ பொய் சொன்னது செழியனுக்கு பிடிக்கலை. பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிடிக்க ஆரம்பிச்சது. அதுக்குள்ளே அவனுக்கு பொண்ணு பார்த்த சுஹாசினி குழப்பத்தை ஏற்படுத்திடறா.வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி மீண்டும் செழியன்.

நீயா போயிருவ

நீயா போயிருவ

கண்மணி பொய் சொல்லலை, சுஹாசினிதான் பொய் சொன்னான்னு கண்மணி அம்மா சொல்லியும் கேட்காமல் செழியன் சுஹாசினிக்கு சப்போர்ட் பன்றான். இன்னும் 30 நாளுக்குள்ள இந்த வீட்டை விட்டு போயிருவேன்னு சொல்றான். என்னை வீட்டை விட்டு துரத்த போறீங்களான்னு கேட்கறா.எப்படி துரத்த முடியும்.. நீதான் அம்மாவை மயக்கி வச்சு உன்மேல பிரியமா இருக்க மாதிரி மாத்திட்டியே..ஆனா, நான் உன்னை நீயா வெளிய போற மாதிரி செய்வேன்னு சொல்றான் செழியன்.

இது சவாலா?

இது சவாலா?

அப்படியா இது சவாலா...சரி பார்த்துக்கலாம்ங்க...சவால்னா நானும் ரெடியாத்தான் இருக்கேன்னு சொல்றா கண்மணி. நானும் ரெடிதான்னு சொல்லிட்டு வெளியில் போறான் செழியன். அப்போது சுமதி வர, முதலில் இந்த சுஹாசினியை வீட்டை விட்டு துரத்தணும் சுமதி அதுக்கு ஏதாவது யோசின்னு சொல்றா கண்மணி.

மிளகு ரசம்

மிளகு ரசம்

மறுநாள் கண்மணி காரசாரமான பூண்டு குழம்பு, மிளகு பூண்டு ரசம்னு வைக்கறா. எல்லாரும் ருசிச்சு சாப்பிட. கொழம்பு சூப்பர் இருக்கே கண்மணி.. எப்படி செய்தேன்னு கேட்கறீங்க சற்குணம். அத்தே..மிளகாய் தூளுக்கு பதில் மிளகு சேர்த்து பூண்டு கொழம்பு வச்சா உடம்புக்கு நல்லது அத்தை. இருமல், சளி இருந்தாலும் சரியா போகும்னு சொல்றா.

அத்தை பக்கத்துல

அத்தை பக்கத்துல

சுஹாசினி அத்தை பக்கத்துல உட்காருன்னு சொல்லிட்டு, அத்தை இன்னிக்கு காரசாரமான சமையல்தானேன்னு கேட்கறா. ஆமாம், நல்ல காரசாரமாத்தான் இருந்துச்சு.. எல்லாருமே நல்லா சாப்பிட்டோமேன்னு சற்குணம் சொல்றாங்க. சுஹாசினியும் அதைத்தானே அத்தே சாப்பிட்டா.. அவளுக்கு வயித்து வலிகூட இல்லையேன்னு கண்மணி சொல்றா.

அல்சர்

அல்சர்

ஆமா... நீ சொல்றது சரிதான்... அவளுக்கு அல்சர் சரியா போயிருச்சுன்னு நினைக்கறேன்னு சொல்றாங்க சற்குணம். அட ஆமாம் அத்தே.. அல்சர் சரியா போயிருக்கும்.. பாவம் அவங்களை ஏன் இன்னும் நம்ம வீட்டுல வச்சுக்கிட்டு, சுதந்திரமா ஹாஸ்டல் போயிட்டு, வேலைக்கும் போகட்டும் அத்தேன்னு சொல்ல சுஹாசினி கடுப்பாகிறாள்.

அடுத்தவள் புருஷனை அடைஞ்சே தீருவேன்னு அடம் புடிக்கறவங்களுக்கு வீட்டுலயே இடம் குடுக்கலாமான்னு சீரியல் பார்க்கறவங்க புலம்பறாங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+