"விதி வலியது"! நடிகை ஊர்வசி மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தது எப்படி தெரியுமா?
சென்னை: நடிகை ஊர்வசி தமிழ் திரையுலகிற்கு எப்படி நடிக்க வந்தார் தெரியுமா? பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் அவரை எப்படி நடிக்க வைத்தார் என்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலும் தமிழை விட மலையாளத்தில்தான் ஊர்வசி அழகாக நடிப்பார் என்கிறார்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:"சிம்ஹம் நவ்விந்தி" அப்படின்னு ஒரு படம் என்.டிஆர் மகன் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இதில் நாயகி கலாரஞ்சனி.

இந்தப் படத்தை பார்த்த பிரவீணா தன் கணவர் பாக்யராஜிடம் சொல்கிறார். பாக்யராஜ் அப்போது தன் படத்துக்கு நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார். கலாரஞ்சனியின் போட்டோவை பார்த்த அவர் மேக்கப் டெஸ்ட்டுக்கு அழைக்க கலாரஞ்சனி அம்மாவோடும், தங்கையோடும், சித்தப்பா உன்னியோடும் வருகிறார்.
பாக்யராஜ் ஒரு டயலாக் ஷீட் கொடுத்து படிக்கச் சொல்ல கலாரஞ்சனி தமிழைப் பார்த்து தடுமாறுகிறார். தங்கை அழகாக படித்து சொல்லிக் கொடுக்க கலாரஞ்சனியும் சொல்ல மேக்கப் டெஸ்ட் முடிகிறது. மூன்று மாதம் கால்ஷுட் கேட்க சித்தப்பாவோ மூன்று மாதத்தில் நான்கு படங்களில் நடித்து விடலாம் என நினைத்து மறுப்பு தெரிவித்து அழைத்து வந்து விடுகிறார்.
கலாரஞ்சனி திருப்தி அளிக்காததால் பாக்யராஜ் இளவரசி, ஷோபனா, அஸ்வினி, சசிகலா என முயற்சித்தும், டெஸ்ட் நடத்தியும் யாரும் அமையவில்லை. கடைசியாக கலாரஞ்சனியின் தங்கை நன்றாக டயலாக் பேசினாரே அவரை கேட்கலாம் என அழைத்து வரச் சொல்கிறார்கள்.
அவரும் அம்மாவும், சித்தப்பாவும் கூட வர மேக்கப் டெஸ்ட் ஷூட்டை அசோக்குமாரே செய்கிறார். அப்படி தேர்வு செய்யப்பட்ட கவிதா என்கிற அந்தப்பெண் தான் பின்னாளில் பட்டி தொட்டியெங்கும் முதல் படத்திலேயே புகழ் பெற்ற 'முந்தானை முடிச்சு' ஊர்வசி. முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் போது ஊர்வசிக்கு 14 வயது. மௌண்ட் ரோடு முழுக்க இருந்த பேனர்களையும்,'போஸ்டர்களையும் பார்க்காமல் ஒன்றரை வருடத்துக்கு முன் தந்தை இறந்து போய் விட்டாரே என்கிற துக்கம் ஊர்வசிக்கு உண்டு. பட வாய்ப்புகள் குவிந்ததால் ஒன்பதாம் கிளாஸ் பாதியிலேயே நின்று போனது.
எல்லாம் அந்த முதல் படம் மட்டும் தான். அதற்குப் பிறகு அவர் நடித்த படங்களெல்லாம் சொல்லிக் கொள்ளும்படி அமையவேயில்லை. அபூர்வ சகோதரிகள் படத்தில் சுஹாசினி, ராதாவுக்கு தங்கை, கொம்பேறி மூக்கனில் சரிதாவோடு இரண்டாவது நாயகி, அம்பிகை நேரில் வந்தாள் ராதாவோடு என இப்படி லைட் ரோல்களே அமைந்தன.
லக்ஷ்மி நடித்த மலையாள 'சட்டக்காரி' போன்ற ஹெவி ரோலில் 'ஓ மானே மானே' படத்தில் நடித்தார். அதுவும் பெயர் வாங்கித் தரவில்லை. சிவாஜி, பிரபுவுடன் நாம் இருவர், எழுதாத சட்டங்கள் போன்ற படங்கள் போதிய வெற்றி பெறவில்லை. கமலுடன் நடித்த அந்த ஒரு நிமிடம் படமும் பெரிதாக போகவில்லை. ராஜா யுவராஜா, மச்சக்காரன், ஒரு மலரின் பயணம், அடுத்தாத்து ஆல்பர்ட் என படங்கள் வந்தன. சென்றன.
தமிழ்ப் படங்களில் ஒரு புறம் ஏறிய ஏணிகளிலிருந்து படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாலும் மலையாளப் படவுலகில் ஊர்வசி அசைக்க முடியாத நாயகியாக வெற்றிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார். பாலச்சந்திரமேனனுடன் 'என்ட அம்மு நின்ட துளசி அவருடெ சக்கி', மோகன்லாலுடன் பத்தாம் உதயம், மம்முட்டியுடன் நிறக்கூட்டு என தொடக்கமே வலிமையான அடித்தளம் அமைத்தார். பின் வெற்றிப் படங்கள் தாம். தலையணை மந்திரம் படமெல்லாம் இன்றும் கேரளப் பெண்களின் முதல் தேர்வுப் படம்.
ஊர்வசி தமிழை விட மலையாளத்தில் நடிப்பது மிக இயல்பாக இருக்கும். கண்ணில் நீர் சுரக்க அவர் மலையாள டயலாக் பேசினால் அப்படி ஒரு ஒரிஜினல் தன்மை. சொந்தப் படம் எடுத்து அதில் நாயகனாக தன் இஷ்ட நாயகன் மனோஜோடு நடித்து அவரையே திருமணம் செய்து கொண்டார் ஒரு நாள். வெங்கலம் என்கிற படத்தில் முரளி கணவர். கணவரின் தம்பி மனோஜ். மாமியார்கள் அவளை கணவரின் தம்பியோடு சேரச் சொல்வது மாதிரியான அக்கால கதையில் ஊர்வசி கணவனுக்காகவே வாழ்ந்து நடிப்பார்.
அதில் மைத்துனனான மனோஜை நிஜ வாழ்வில் திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை. ஊர்வசி மைக்கேல் மதனகாமராஜன் மூலம் இரண்டாவது ரவுண்டு வந்து தான் நடிப்பில் ஒரு பொம்பளை கமல் என நிரூபித்தார். ஆமாம். எத்தனை சவால் விடும் பாத்திரங்கள். மைக்கேல் மதன காமராஜனின் அந்த திரிபுரசுந்தரி வேறு நடிகையால் நடிக்கவே முடியாதது. மாயா பஜார், எட்டுப்பட்டி ராசா,'வனஜா கிரிஜா, மகளிர் மட்டும், நான் பெத்த மகனே.. .நான் பெத்த மகனே படத்தில் தான் என்னவொரு நடிப்பு.
ஊர்வசி என்றதுமே அந்த வெகுளிச் சிரிப்பு தான் நினைவுக்கு வரும். சமீபத்தில் ஒரு படத்தில் அம்மாவாக பார்த்தேன். வெறும் ஐம்பத்து நாலு வயதில் ஆளே உருமாறி மிக வயதானவரைப்போல ஆகி விட்ட இவரா 'தங்கத்தோணி... தென் மலையோரம் கண்டே' எனப் பாடி நடித்த ஊர்வசி என வியப்பாக இருக்கிறது.... சொந்த வாழ்க்கையின் சோகங்களும் இருக்கலாம்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications