தென்னை மரம் ஏறியதாலேயே! ஆட்டோ டிரைவர் ஒருவர், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த கதை தெரியுமா?
சென்னை: ஆட்டோ டிரைவராக பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்த ஒரு நடிகர் பின்னாளில் ஐஸ்வர்யா ராயையே தொட்டு நடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரை தமிழில் அறிமுகம் செய்து வைத்தது யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: 'கேப்டன் பிரபாகரன்' படம் கேரளாவில் உள்ள சாலக்குடிக்கு உள்ளே காடுகளில் உள்ள அதிரப்பள்ளி அருவிப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. அதன் படப்பிடிப்பு ஆட்கள் எல்லோரும் சாலக்குடியில் தான் அறை எடுத்து தங்கி இருந்தார்கள்.

அங்கு தான் ஒரு ஆட்டோ டிரைவர் இருந்தான். அவன் பெயர் மணி. சாலக்குடியும், அதிரப்பள்ளியும் மணிக்கு அத்துபடி. அப்படி மணி, கேப்டன் பிரபாகரன் படத்தில் துணை நடிகர்களில் ஒரு ஆளாக நடித்த போது தான் சினிமா ஆசை துளிர் விட தொடங்கியது.
மணி தேவைக்கேற்ப பாட்டு பாடும் திறமையும் இருந்தது. அதோடு மிமிக்ரியும் செய்யத் தொடங்கினான். மிமிக்ரி கலை 90களில் கேரளா முழுவதும் கோலோச்சி இருந்த நேரம். மிமிக்ரியிலிருந்து நாயகனாக 'ஜெயராம்' என்பவருக்கு வாய்ப்பு கிடைத்தது மணிக்கு தூண்டுகோலாக அமைந்தது.
ஜெயராம் இருந்த கலாபவனிலேயே சேர்ந்து மிமிக்ரி செய்யத் தொடங்க மணி பிரபலமானார். அப்படி திரைத் துறையில் வாய்ப்பு கேட்க 'ஸல்லாபம்' என்கிற மஞ்சு வாரியர் படத்தில் கள் இறக்கும் வேடத்தில் நடித்தார் மணி. ஸல்லாபம் படம் மணியை கேரளாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது.
மம்முட்டி தமிழில் 'மறுமலர்ச்சி' படத்தில் நடிக்கத் தொடங்கிய போது அதில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் இருந்தது. அதன் பெயர் வேலு. கதைப்படி அந்த வேலு கேரக்டர் பெண் வேடமிட்டு ஒளிந்து வாழ வேண்டும். அதோடு முக்கியமாக தென்னை மரத்தில் ஏற வேண்டும். ஏதோ காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போக மம்முட்டி, படக் குழுவினரிடம் மணி பற்றிச் சொல்லி வாய்ப்பு கேட்கிறார்.
ஸல்லாபம் காட்சிகளும், வேறு படக்காட்சிகளும் பார்க்க ஏற்பாடு செய்கிறார். மணியின் நடிப்பைப் பார்த்து மறுமலர்ச்சியில் வாய்ப்புக் கிடைக்கிறது. மறுமலர்ச்சியில் மணி நடித்த வேலு பாத்திரம் சாப்பிட உட்காரும் போது "செத்தா அழக் கூட ஆளில்லாத அனாதைப் பயலே"ன்னு சுந்தர் ராஜன் திட்டி விடுவார்.

மணியும் "நாய் கூட உன் சாப்பாடை சாப்பிடாதுய்யா"ன்னு கோவிச்சுக்கிட்டு வந்து விடுவார். மம்முட்டி அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து "இவன் யாரு தெரியுமா?..என் தம்பி.." என அவரே கையால் சோறு போட்டு சாப்பிட வைப்பார். மன்சூர் அலிகான் வைத்த விஷம் கலந்த சாப்பாடால் மணி உயிரை விடுவார். அந்தப் படத்தில் மணியின் நடிப்பும், காட்சியின் ஆழமும் ரசிகர்களை கலங்க வைத்து விடும்.
படப்பிடிப்பில் தென்னை மரத்தில் ஏறிய மணி ஷாட் ஓகேயானதும் இறங்கும் போது துணி நழுவியதால் கையை விட கீழே விழுகிறார். ஆனால் விழுந்தது தமிழ் மண்ணல்லவா?
அவரை தமிழ்த் திரையுலகம் சக்தி வாய்ந்த வில்லனாக ரசித்துப் பார்த்தது. தென்னை மரம் ஏறும் மணிக்கு அதை வைத்தே ஐஸ்வர்யா ராய் கூடவெல்லாம் நடிக்கும் வாய்ப்பு வரை தந்தது தமிழ்த்திரையுலகம். பெரிய ஹீரோக்களே தொட்டு நடிக்க முடியாத ஐஸ்வர்யா ராய் மணியை தொட்டு நடித்ததெல்லாம் அன்று மம்முட்டி வாய்ப்பு கொடுத்ததால்.
மணி கோவில் மணியாக முழங்கி விட்டு இன்று அந்த 'மணி முழக்கம்' கேட்காமல் போனது மணியின் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல. ரசிகர்களின் துரதிர்ஷ்டமும் தான். (கலாபவன் மணி நடித்த கடைசிப்படமாக 'மதகத ராஜா' (MGR) இருப்பதாக செய்தி உள்ளது....not sure...) என அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications