பிளக்ஸ் பேனரில் ஐஸ்வர்யா ராய்! வாய் பேச முடியாத அபிநயா நடிக்க வந்தது எப்படி? கிரேட் ஃபாதர்!
சென்னை: நாடோடிகள் எனும் படத்தில் நடித்த அபிநயா, காது கேட்காத வாய் பேச முடியாதவராக இருந்த போதிலும் அவர் எப்படி நடிப்பதற்கு வந்தார் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உடலில் எந்த பிரச்சினை இருந்தாலும் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு அப்பாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு பேசவோ, கேட்கவோ முடியாது என்று பின்னாளில் தெரிகிறது. அப்போது முதல் அந்த அப்பாவுக்கு அந்த குழந்தை தான் உலகம் என்றாகி விடுகிறது. மற்ற குழந்தைகளைப்போல் தன் குழந்தையும் வளர்ந்து ஆசைப்பட்டது போல் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதே தன் கடமை என நினைக்கிறார் அந்த தந்தை. அப்படியே அப்பெண்ணும் வளர்கிறாள். ஒரு நாள் ஸ்கூட்டரில் அந்த தந்தை தன் மகளை அழைத்துக் கொண்டு சாலையில் செல்லும் போது ஒரு ஃப்ளெக்ஸ் போர்டை சுட்டிக் காட்டுகிறாள்.
அதில் ஐஸ்வர்யா ராய் இருக்க அதைப் பார்த்துக் கொண்டே கடந்து விடுகிறார். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் அந்த குழந்தை தந்தையை அழைத்து அதே ஃப்ளெக்ஸை காண்பிக்க தந்தைக்கு புரிந்து போகிறது. அது போல் Flexகளில் வரவேண்டுமென தன் மகள் நினைக்கிறாள் என புரிந்து கொண்ட அவர், அதற்கான காரியத்தில் இறங்குகிறார்.
மகளை வைத்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி விளம்பர ஏஜன்ஸிக்கள் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குகிறார். ஆனால் வாய் பேச முடியாத பெண் என வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக ஒரு ஏஜன்ஸியிடம் போட்டோ இருக்கிறது. அதைப் பார்க்க கேரளத்திலிருந்து ஒரு விளம்பரப்பட இயக்குனர் ஹைதராபாத் வருகிறார்.
அவரிடம் விளம்பர ஏஜன்ஸி பல பெண்களின் போட்டோக்களை காண்பிக்கிறது. தன் மகளின் ஆல்பத்தை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என அப்போது அங்கே இருந்த அப்பாவுக்கு தெரிந்து விடுகிறது. அவர் உடைந்து போகிறார். அந்த கேரள இயக்குனர் கார் ஏறப்போகும் பார்க்கிங்குக்கு ஓடிச் சென்று நாதழுதழுக்க தன் மகளின் போட்டோக்களை ஏஜன்ஸி காட்டவில்லையென்றும், தயவு செய்து பார்க்க வேண்டும் என்றும், தன் மகளால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும் சொல்லும் போதே அவரின் கலக்கத்தை பார்க்கிறார் அந்த இயக்குனர்.
தந்தையின் எமோஷனலுக்காக போட்டோக்களை பெற்றுக் கொண்டு வந்து விடுகிறார் அவர். இது நடந்து பல மாதங்களுக்குப் பிறகு இயக்குனர் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் புதுமுகங்களை தேடி எர்ணாகுளம் வர அவரிடம் போட்டோக்களையும், விபரங்களையும், தந்தையின் எமோஷனலையும் சொல்ல போன் கால் ஹைதராபாத்துக்கு போகிறது.
அப்போது வந்து இறங்கிய பெண் தான் நடிகை அபிநயா. போட்டோ டெஸ்ட்டில் பாஸாகி அபிநயாவை நடிக்க வைத்துப் பார்த்த சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் ஷாக்காகிறார்கள். பெயருக்கேற்றார் போல் எக்ஸ்பிரஷனில் பிண்ணுகிறார் அபிநயா. அவர் குறைபாடுகள் எதுவுமே தெரியாமல் அசத்துகிறார்.
'நாடோடிகள்' படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது. தெலுங்கு, கன்னட ரீமேக்குகளிம் அபிநயாவையே நடிக்க வைக்கிறார்கள். தெலுங்குப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் சசி 'ஈசன்' பட வாய்ப்பை தருகிறார்.
சமீபத்தில் 'பணி' பார்த்த போது அதில் உண்மையில் அசத்தி இருந்தார் அபிநயா. ஒரு காதல் மனைவியாக அவர் எக்ஸ்ப்ரஷன்கள் எல்லாம் கொள்ளை அழகு. பணி பட ப்ரமோஷனில் அபிநயாவை மேடையில் உட்கார வைத்து மேடையில் யார் பேசினாலும் எதிரே அவருக்கு புரியும் விதமாக ட்ரான்ஸ்லேட்டரை வைத்து சைகை பாஷையில் புரிய வைக்க இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் செய்த காரியங்களெல்லாம் அவரின் மேல் நன்மதிப்பைக் கூட்டுகிறது.
ஒருவர் இந்த சமுதாயத்தில் எப்படி குறைகளோடு பிறந்தாலென்ன..யார் தூற்றினாலும், தாழ்த்தினாலும் அவர்களை கவனிக்க வெண் சிறகு தேவதைகள் இருக்கத்தான் செய்கின்றன. அபிநயாவின் அப்பா, சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோஜு என பல வகை.... வாழ்க்கை எல்லோரும் வாழ்வதற்கே.... இவ்வாறு அவர் தனது போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications