15 ஆண்டுகளாக பழகிய விஷால்- தன்ஷிகா! கிசுகிசு ரேடாரில் சிக்காதது எப்படி?
சென்னை: விஷாலும் சாய் தன்ஷிகாவும் 15 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ள நிலையில் அவர்கள் கிசுகிசுக்களில் சிக்காமல் தப்பித்தது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் விஷால் மூத்த நடிகர் ஒருவரின் மகளுடனும் லட்சுமி மேனனுடனும், தாமிரபரணி நடிகை பானுவுடனும் கிசுகிசுக்கப்பட்டார். இது மட்டுமல்லாமல் அவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி கடுமையாக குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல்கள் குறித்து கடந்த ஆண்டு, ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ள விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஹேமா கமிட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பெண்களைத் தவறாக பயன்படுத்த நினைப்பவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவை போல் தமிழகத்திலும் குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என எவனோ ஒருத்தன் கூப்பிடுவான்.. பெண்ணை மதிக்காமல் அவர்களையே பயன்படுத்திக் கொள்ள முயற்சி பண்ணுவாங்க.. இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி தான் இருக்கு.. அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேணும். இது போல கேட்கும் நபர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்றார் விஷால்.
இந்த நிலையில்தான் விஷாலின் கருத்துக்கு பிரபல சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார். விஷால் பெயரை குறிப்பிடாமல் ஸ்ரீரெட்டி கூறுகையில் "mr.womaniser & வெள்ளை முடி கொண்ட வயதான அங்கிளுக்கு வணக்கம்.. நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி ஊடகங்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு பெண்ணை பற்றி நீ இழிவாகப் பேசுவது, உனக்கு இருக்கும் உடல் நடுக்கம், உன்னைச் சுற்றி இருக்கும் நல்லவர்களிடம் எல்லாம் நீ பிரச்சினை செய்வது எல்லாமே அனைவருக்கும் தெரியும் .. நீயே ஒரு பிராடு.. உலகத்திற்கே தெரியும் நீ எவ்வளவு பெரிய பிராடு என்று.. அப்படியிருக்கும் போது ஊடகத்தில் பேசும் போது ஏதேதோ சொல்லி நீ நல்லவன் போலக் காட்டிக் கொள்ளாதே..
நீ ஒரு பைத்தியம் என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துவிட்டாய்.. உன் வாழ்வில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் ஏன் உன்னை விட்டு சென்றாள்? உனது நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது?? தயவு செய்து அடுத்த முறை இந்த கேள்விக்குப் பதில் சொல்லு.. நீ ஒரு சங்கத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறாய்.. கொஞ்சமாவது கண்ணியமாக இரு.. கர்மா உன்னை வைத்துச் செய்கிறது.. என்னிடம் நிறையச் செருப்பு உள்ளது. உனக்கு ஒன்று வேண்டுமா?" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு அனிஷா ரெட்டியுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பட்டது. ஆனால் அப்போது ஸ்ரீரெட்டி குறித்த பேச்சு எழுந்ததை அடுத்து அனிஷா ரெட்டி, ஸ்ரீரெட்டியை சந்தித்து விஷால் குறித்து தெரிந்து கொண்டதை அடுத்துதான் இந்த திருமணத்தை நிச்சயதார்த்துடன் நிறுத்தி விட்டதாக சினிமா பார்வையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் திருமணம் என்ற அறிவிப்பு வெளியானது. யோகிடா இசை வெளியீட்டு விழாவில் தன்ஷிகா கூறுகையில் என்ன பேபி சொல்லிறலாமா? நாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். எனக்கு 15 ஆண்டுகளாக விஷாலை தெரியும். என்னை எங்கு பார்த்தாலும் மரியாதையுடனே நடந்து கொள்வார். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் குரல் கொடுத்திருக்கிறார். எனக்கு தெரிந்து என் வீட்டிற்கு எந்த ஹீரோவும் வந்ததில்லை. ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை நடக்கும் போது அவர் என் வீட்டிற்கு வந்திருந்தார். இவ்வாறு சாய் தன்ஷிகா தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக விஷாலை தெரிந்த நிலையில் இவர்கள் எப்படி கிசுகிசுவில் சிக்காமல் தப்பினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது 15 ஆண்டுகளாக விஷாலை தெரிந்திருந்தாலும் தோழியாக பழகுவதற்கும் காதலியாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதனால் அவர்கள் கிசுகிசுக்கப்படாமல் இருந்திருக்கலாம்.
அண்மையில்தான் எங்களுக்கு காதல் ஏற்பட்டது என தன்ஷிகா சொல்லியிருக்கிறார். ஒரு வேளை இவர்களது காதலை வெளியே வளர்த்து கொள்ளாமல், நண்பர்கள் என கூறியே பழகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ரவீந்தர்- மகாலட்சுமி உள்ளிட்டோர் கூட தங்கள் காதலை யாருக்கும் தெரியாதபடி பார்த்துக் கொண்டனர். அது போல் விஷாலும் தன்ஷிகாவும் பார்த்துக் கொண்டிருக்கலாம். எது எப்படியோ விஷாலுக்கு டும் டும் டும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications