இளையராஜாவா இப்படி செய்தார்? நடிகர் ஜனகராஜ் உடன் இப்படி ஒரு பந்தமா? ஆனா இதை கவனிச்சீங்களா?
சென்னை: இளையராஜா மற்றும் காமெடி நடிகர் ஜனகராஜ் இடையே இருக்கும் நெருக்கம் குறித்த செய்திகளை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார்.
காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக மட்டும் ஜனகராஜை தெரிந்திருந்த பலருக்கு இவர்களுக்கிடையே இருக்கும் நட்பு ஆச்சரியத்தை தருவதாக பலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சின்னத்திரைகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் காமெடி ஷோக்களில் மிமிக்கிரி கலைஞர்கள் தங்களது திறமையை காட்டுவதற்காக மிமிக்ரி செய்யும் குரல்களில் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும் ஒரு குரல் காமெடி நடிகர் ஜனகராஜ் குரல் தான். குறிப்பாக அவரது குரலை மிமிக்ரி செய்பவர்கள் அவரது குரலை மட்டுமல்ல அவரது முக பாவனைகளையும் மேனரிசத்தையும் சேர்த்து முயற்சித்தால் தான் ஜனகராஜின் குரலுக்கான முழு வடிவத்தை கொடுக்க முடியும். அந்த அளவிற்கு அவரது குரலுக்கு முகபாவனைகளும் மேனரிசமும் பிராண்டாக இருந்து வருகிறது.

ஜனகராஜ் ஒரு நடிகர் மட்டுமல்ல சிறந்த வயலின் இசைப்பவரும் கூட, ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைவதற்காக முயற்சிக்கும் போது அவர் முதலில் கற்றுக் கொண்டது வயலின் இசைப்பதை தான். அந்தக் காலகட்டத்தில் இருந்த நடிகர்களுள் வயலின் வாசிப்பது போன்ற இசை சம்பந்தமானவற்றில் திறமை பெற்று இருந்ததால் மற்ற நடிகர்களை விட ஜனகராஜுக்கும் இளையராஜாவிற்கும் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது.
80's களில் இசை கடவுளாக நினைத்து கொண்டாடப்பட்டு வந்த இளையராஜாவின் கண் பார்வை பட்டாலே போதும் என்று பல இயக்குனர்களும், நடிகர்களும் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் இளையராஜாவின் கருணை பார்வைக்கு தவம் இருந்த நேரத்தில், இளையராஜாவே மிகவும் விருப்பப்பட்டு அழைத்து உரையாடக்கூடிய மனிதராக ஜனகராஜ் இருந்துள்ளார்.
இளையராஜாவிடம் பேசுவதற்கே அனைவரும் பயந்த சூழ்நிலையிலும் இளையராஜாவுடன் சாதாரணமாக பேசும் அளவிற்கு அவர்களுக்கிடையே புரிதல் இருந்துள்ளது. அதன் காரணமாகத்தான் சினிமாக்களில் கதாநாயகர்களுக்கு மட்டுமே தன் சொந்த குரலால் பாடும் பழக்கத்தை கொண்டிருந்த இளையராஜா கொஞ்சம் இறங்கி காமெடி நடிகருக்காகவும் தன் சொந்தக் குரலில் பாடி உள்ளது ஜனகராஜுக்கு மட்டும் தான்.
நாயகன் படத்தில் வரும் 'நிலா அது வானத்து மேலே'மற்றும் பாலைவன ரோஜாக்கள் படத்தில் 'காதல் என்பது பொதுவுடமை' போன்ற பாடல்கள் ஜனகராஜுக்காக இளையராஜா குரலில் பாடி மிகப் பெரிய வெற்றி பெற்ற பாடல்களாகும். கொஞ்ச நாட்களாக இளையராஜா குறித்த நெகட்டிவ் செய்திகளே பரவி வரும் நிலையில், காமெடி நடிகராக இருந்தாலும் ஜனகராஜ் உடன் இளையராஜா வைத்திருந்த நட்பு குறித்து பரவி வரும் செய்திகளை இளையராஜா ரசிகர்கள் மகிழ்ச்சியாக ஷேர் செய்து வருகின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications