மனைவியின் இறப்பு.. கதறி அழுத கங்கை அமரன்.. கறார் காட்டிய இளையராஜா.. காரணம் இதுதானா?
சென்னை: தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் முதல் இப்ப வரைக்கும் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை இளையராஜா பிடித்திருக்கிறார்.
இளையராஜாவின் பாடல்கள் பலருடைய ஃபேவரைட் ஆக இருந்தாலும் அவர் காட்டும் "கறார்" சிலரை கஷ்டத்திற்குள் ஆக்கியுள்ளதாக கூறியிருக்கின்றனர்.
அந்த வகையில் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனிடம் இளையராஜா காட்டிய கோபத்தை குறித்து சமீபத்தில் செய்திகள் வலம் வருகிறது.
அது என்னவென்றால் இளையராஜாவிற்கும் அவருடைய தம்பியான கங்கை அமரனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இளையராஜாவின் மனைவியின் இறப்பிற்கு கூட கங்கை அமரனை இளையராஜா அனுமதிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் துவங்கி இதுவரைக்கும் 5000க்கும் அதிகமான பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதல் படத்திலிருந்து அவருக்கு அந்த வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதனாலேயே 1980களில் முக்கால்வாசி படங்களுக்கு இளையராஜாவை இசை அமைத்தார் என்று கூறலாம்.
ஒரே நாளில் இரண்டு மூன்று படங்களுக்கு கூட இளையராஜா அந்த நேரங்களில் இசையமைத்து இருக்கிறாராம். சில திரைப்படங்களில் அந்த நேரத்தில் ஆறு ஏழு பாடல்கள் இருந்தாலும் அத்தனைக்கும் இளையராஜாவே இசையமைத்ததாகவும் செய்திகள் உண்டு. அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தன. இளையராஜா ஒருவரால் மட்டும் அவ்வளவு படங்களுக்கும் இசையமைக்க முடியவில்லையாம்.
அந்த நிலையில் இளையராஜாவுக்கு பெரும் உதவியாக இருந்தது அவருடைய தம்பி கங்கை அமரன் தானாம்.கங்கை அமரன் இது பற்றி ஒரு பேட்டியில் கூறும்போது இளையராஜா இசையமைத்ததாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் நான் இசை அமைத்தது என்று கூறினார். ஏற்கனவே ஒரே துறையில் இருவரும் இருப்பதாலோ என்னவோ அப்போதைய காலகட்டத்தில் இருவருக்கும் இடையே பெரும் சண்டை வெடித்திருக்கிறது.
இதனாலேயே கங்கை அமரனை இளையராஜா வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாராம். கங்கை அமரனும் இளையராஜாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்து இருக்கிறார். அப்போதுதான் இளையராஜாவின் மனைவி காலமானார். இந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கை அமரன் இளையராஜாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
ஆனால் அப்போதும் கூட இளையராஜா கங்கை அமரனை அனுமதிக்கவில்லையாம். அதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானார் கங்கை அமரன். ஏனென்றால் தனது தாய்க்கு பிறகு தன்னை நன்றாக பார்த்துக் கொண்டவர் தன்னுடைய அண்ணி தான். அவரையே பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள் என்று அப்போது கதறி அழுதாராம். இந்த நிகழ்வு பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications