இளையராஜா இதை பண்ணி இருக்கணும்! புரியாமல் சிலர் அவர் மீது தப்பு சொல்றாங்க! ஜேம்ஸ் வசந்தன் ஓப்பன்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தில் தன்னுடைய அனுமதி "வாங்காமல் வா வா பக்கம் வா" என்ற பாடலை பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விட்டிருந்த நிலையில் இதுகுறித்து ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
சமீப காலமாகவே இளையராஜா பற்றிய செய்திகள் இணையத்தில் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இசை தான் பெரியது என்று வழக்கு தொடுத்து இருந்த நிலையில், அதற்கு நீதிமன்றத்தில் பாடல் ஆசிரியர்களும் இதுபோல வழக்கு தொடர்ந்தால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அது குறித்து வைரமுத்து தன்னுடைய கருத்தை தெரிவிக்க அதற்கு கங்கை அமரன் வைரமுத்துவை திட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து இளையராஜா நடிகர் ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியான போது, அதில் வெளியான தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா என்ற பாடலுக்கு தன்னிடம் அனுமதி வாங்காமல் அதை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவிக்கையில் இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காபி ரைட் கேட்கிறார் என்று அவர் மீது தப்பு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால் விஷயம் என்னன்னு மக்களுக்கு தெரியவில்லை. இளையராஜா தனி மனிதனாக தன்னுடைய வக்கீல் மூலமாக வழக்கு தொடுப்பதால் தான் அது பலருக்கும் பெரியதாக தெரிகிறது.
ஆனால் இசையமைப்பாளர்கள் எல்லாரும் IBRS என்ற ஒரு அமைப்பில் இருக்கிறோம். அதில் ஆரம்பத்தில் இளையராஜாவும் இருந்தார். ஆனால் அப்போது இருந்த சில முறைகேடு காரணமாக இளையராஜா நான் இனி என்னுடைய வேலைகளை தனியாக பார்த்துக் கொள்கிறேன் என்று அந்த அமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டார்.
அந்த அமைப்பில் இருக்கும் எங்களுக்கு இப்போது எங்களுடைய பாடல்கள் எந்த இடத்தில் எல்லாம் ஒலிக்கப்படுகிறது என்று லிஸ்ட் அனுப்பி வைப்பார்கள். அதன் மூலம் எங்களுடைய பாடல்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை வந்து கொண்டிருக்கிறது. நான் ஒரு சிலர் திரைப்படங்களுக்கு தான் பாடல்கள் எழுதி இருக்கிறேன் அதற்கு கூட எனக்கு குறிப்பிட்ட தொகை வந்து கொண்டிருக்கிறது.
அப்படி பார்த்தால் இளையராஜா, கங்கை அமரன், யுவன் சங்கர் ராஜா எல்லாம் எத்தனை படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு பணம் வரும்? அதுபோல ஏதாவது பிரச்சனை என்றாலும் அந்த அமைப்பிலே எல்லாவற்றையும் பார்த்து விடுவார்கள். ஆனால் அதிலிருந்து இளையராஜா வெளியே வந்து தனியாக வழக்கு தொடுப்பதால் தான் அது வெளியே பெரிய விஷயமாக தெரிகிறது.
தனியாக இளையராஜா வழக்கு தொடர வேண்டும் என்றால் அவருடைய காலத்திற்கும் அவர் வழக்கு தொடர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். அதனால் ஒரு தனி மனிதனாக நான் அவரிடம் வைக்கும் வேண்டுகோள். அவர் IBRL என்ற அமைப்பில் மீண்டும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications