நல்லவேளை ரூ.5 கோடியோடு இளையராஜா விட்டாரு.. ப்ளூ சட்டை மாறன் சொல்றது சரி: Good Bad Ugly பற்றி பிரபலம்
சென்னை: இளையராஜா அஜித் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.. தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.. இரண்டே கால் மணி நேரத்தில் முழு பாடல்களை பல புகுத்தினால், அது திணிக்கப்பட்டது போல தெரிகிறது.. அந்த படத்திற்கு இளையராஜா பாடல்கள் பொருந்தினாலும்கூட அது திகட்டுவது போலாகிவிடும். இந்த விஷயத்தில் இளையராஜா பக்கமும் நியாயம் இருப்பதாக தெரிகிறது பத்திரிகையாளர் சேகுவேரா கருத்து கூறியிருக்கிறார்.
அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், "குட் பேட் அக்லி".. கடந்த 10ம் தேதி வெளியான இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த "ஒத்த ரூவா தாரேன்", "இளமை இதோ இதோ", "என் ஜோடி மஞ்சக்குருவி" போன்ற பாடல்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், "குட் பேட் அக்லி" பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
3 பாடல்களுமே ஹிட்
இந்நிலையில், Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, 3 பாடல்களுக்கு 5 கோடி கேட்டிருக்கிறார் இளையராஜா.. 3 பாடல்களுமே ஹிட்டான பாடல்கள்தான்..
ஏற்கனவே தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவதற்கு பல முறை உரிமை கோரி, நோட்டீஸ்களை கேட்டு வருகிறார் இளையராஜா.. இது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.. அப்படியிருக்கும்போது, மீண்டும் ஏன் அவரது பாடல்களை சினிமாவில் பயன்படுத்துகிறார்கள்? அப்படி பயன்படுத்தும்போது, இளையராஜாவின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும்தானே?
மரியாதை நிமித்தமாக தயாரிப்பு நிறுவனங்களாவது இளையராஜாவை சந்தித்து அனுமதி கோரியிருக்கலாம்.. 3 பாடல்களுக்கு 5 கோடி கேட்கிறார் இளையராஜா.. இத்தனைக்கும் அந்த 3 பாடல்களுமே ஹிட்டான பாடல்கள்.. எனவே, மெல்லிய நியாயப்பார்வை இளையராஜா பக்கமும் இதில், உள்ளது.
பழைய பாடல்கள்
புளூ சட்டை மாறன் விமர்சனத்திலும் இந்த பாடல்களை பற்றி கூறியிருந்தார்.. பழைய பாடல்களின் பாட்டுக்களை எடுத்து பயன்படுத்தியிருப்பதுடன், முழு பாட்டையுமா படத்தில் பயன்படுத்துவது? பாட்டுக்களை கேட்கும்போது, மஃப்சல் பஸ்ஸில் போறது போலவே இருக்கிறது" என்று கேட்டிருந்தார்.. அவரது அந்த விமர்சனம் நியாயமானதே..
இரண்டே கால் மணி நேரத்தில் முழு பாடல்களை புகுத்தினால், அது திணிக்கப்பட்டது போல தெரிகிறது. அந்த படத்திற்கு இளையராஜா பாடல்கள் பொருந்தினாலும், திகட்டுவது போலாகிவிடும்.
கொஞ்சம் யோசித்திருக்கலாம்
படங்களில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவதை, பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் எண்ணமும் இளையராஜாவுக்கு இல்லை.. ஆனால் சினிமா என்பதே வர்த்தகம்.. கோடிகளை கொட்டி படம் எடுத்து, கோடிகளில் லாபம் சம்பாதிக்கும்போது, ஏற்கனவே ஓடிய பாடல்களை பயன்படுத்துவது மிஸ்யூஸ் செய்வது போலத்தான்.. உங்களுடைய வெற்றிக்கு, அந்த வெற்றிப்பாடல்களை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கிறீர்கள்தானே? நல்லவேளை இளையராஜா நல்ல மூடில் இருந்திருக்கிறார்.. அவர் 5 கோடி கேட்டதே குறைவுதான்.
எனவே, அஜித், இயக்குனர், தயாரிப்பாளர் போன்றோர் இந்த விஷயத்தில் பொறுப்பாக யோசித்திருக்கலாம்.. சொந்த நண்பன் எஸ்பிபி-க்கே நோட்டீஸ் அனுப்பியவர் இளையராஜா.. ஆனால், ஜிவி பிரகாஷூக்கு நோட்டீஸ் அனுப்பின மாதிரி இதுவரை தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications